நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளையும், தரவுகளையும் போதி ட்ரீ பவுண்டேசன் மூலம் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். மக்களின் நிலையையும் போதி ட்ரீ-யின் பணியையும் வெளியிட்ட நியூஸ்18 தமிழ்நாடு சேனலுக்கும், செய்தியாளர் சந்தானம் அவர்களுக்கும் நன்றி tamil.news18.com/tirunelveli…
இன்னமும் கூட அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றனர் சாலையர் தெரு வண்ணார்ப்பேட்டை மக்கள்.
தொடர்புக்கு:
919600971913
இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத மக்களை தேடிய பயணத்தில் போதி ட்ரீ பவுண்டேசன் ❤️❤️
ALT இப்போ போதி ட்ரீ பவுண்டேசனிலிருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்குற இடத்துக்கு போய் அவங்கள பத்தி தகவல் சேகரிச்சிட்டு இருக்கோம்.
வண்ணார்பேட்டைல இருக்குற எட்டுத்தொகை தெரு, சாலை தெரு அப்படி ஒவ்வொரு தெருவா போய்ட்டு இருந்தோம். அப்படியே மெயின் ரோட்டுக்கு போற வழி அங்க போனோம் ஒரு தெருவ பாத்தோம் பதினஞ்சு குடும்பம் தான் இருக்கும் அங்கயும் எடுக்க ஆரமிச்சோம்.
நாங்க வரத பாத்துட்டு சாப்பிட்டு இருந்த ஆச்சி அவசரமா எந்திச்சி வந்தாங்க. வந்தவங்க என்ன நினச்சாங்கனு தெரியல என்னோட கைய பிடிச்சிட்டு "என் வீட்ட பாருமா , இந்த தெருவுலயே ரொம்ப பாதிக்கப்பட்டது என் வீடு தான்மானு" சொல்லி ஒரே அழுகை.
வீட்ட காட்டுறாங்க வீடு முழுக்க சேரு, சகதி ஒரு இன்ச் அளவுக்கு இருக்கு. கால் வைக்க கூட முடியாது அவ்ளோ சகதி வெளிய பாத்தா அவங்க வீட்டுக்கு வாங்குன ஏசி, டிவி, ப்ரிட்ஜ், பீரோ எல்லாமே குப்பை மாதிரி கிடக்கு.....
வீட்டுக்கு வெளிய தான் இருக்காங்க ராத்திரியும் பகலும். சாப்பாடு கூட யாரோ தன்னார்வலர்கள் தான் கொடுத்தாங்கனு சொன்னாங்க. வீடு இல்ல, சாப்பாடு இல்ல, போட துணி இல்ல இப்படி எதுவுமே இல்லாம கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க..