கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.60க்குட்பட்ட சிங்காநல்லூர் குளக்கரை பகுதியினை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்கள், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குளக்கரையினை பலப்படுத்தி, நடைபாதை, தெருவிளக்கு, பூங்கா போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். உடன் தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், நகர்நல அலுவலர் மரு.சுபாஷ் காந்தி, உதவி ஆணையர் திரு.தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் திரு.இளங்கோவன், உதவி பொறியாளர்கள் திரு.கல்யாணசுந்தரம், திரு.ரவிக்கண்ணன், திரு.கணேசன், மண்டல சுகாதார அலுவலர் திரு.சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 12.06.2026.
#CoimbatoreCorporation #CCMC #Coimbatore #Kovai