பட்டா ஒரு ஊரு, பத்திரம் இன்னொரு ஊரு - குழப்பமா? கவலை வேண்டாம்!
நிலம் வாங்க போறோம். கனவு வீடு கட்ட போறோம். அந்த சந்தோஷத்துல Document-ல இருக்குற சின்ன சின்ன வார்தை கூட பெரிய குழப்பத்த கொடுத்துடும். அப்படி ஒரு குழப்பம் தான் "பட்டாவுல ஒரு ஊரு பேரு, பத்திரத்துல இன்னொரு ஊரு பேரு" வர்றது. இது தப்பா? மோசடியா? இல்ல சாதாரணமான விஷயமா? வாங்க, தெளிவா பாப்போம்.
1. ஏன் ஊரு பேரு மாறுது? Revenue vs Registration
நம்ம நாட்டுல நில நிர்வாகம் 2 விதமா நடக்குது. ஒன்னு வரி வசூலிக்கிறது. இன்னொன்னு பத்திரம் பதிவு பண்றது.
வரி வசூலிக்கிறது கிராம நிர்வாக அலுவலர் VAO. அவர் பாக்குற பகுதிக்கு பேரு "Revenue Village". நம்ம Patta, Chitta, Adangal எல்லாம் இந்த Revenue Village பேருல தான் இருக்கும்.
பத்திரம் பதிவு பண்றது சார்பதிவாளர் அலுவலகம் SRO. ஒரு SRO பக்கத்துல இருக்குற பல கிராமத்துக்கு சேர்து பதிவு பண்ணும். அந்த SRO இருக்குற ஊரு பேரு "Registration Village".
அதனால தான் உங்க நிலம் ஒரு Revenue Village-க்கு உட்பட்டு இருந்தாலும், பத்திரம் பதியுறது வேற ஒரு Registration Village SRO-ல நடக்கலாம். இது சட்டப்படி சரி. தப்பே இல்லை. பயப்பட வேண்டாம்.
2. ஊரு பேர விட 100 மடங்கு முக்கியம் - Survey Number தான்!
ஊரு பேரு மாறலாம். Owner பேரு மாறலாம். ஆனா ஒரு நிலத்துக்கு அரசாங்கம் கொடுக்குற Survey Number மட்டும் எப்பவும் மாறாது. அது அந்த நிலத்தோட நிரந்தர அடையாள எண். Aadhaar Card மாதிரி.
ஒரு பெரிய நிலத்த Survery No இருக்கு. அத பின்னாடி துணைப் பிரிவு பண்ணி 2A, 2B, 2C-னு பிரிக்கலாம். மறுபடி 2D, 2E-னு துண்டு போடலாம். ஆனா ஒரு தடவை Number விழுந்துட்டா, அது வாழ்நாள் முழுக்க அந்த குறிப்பிட்ட நிலத்துக்கு மட்டும் தான்.
அதனால நிலம் வாங்க போறப்போ முதல் வேலை என்ன தெரியுமா? Patta எடுத்து Survey No துணைப் பிரிவு பரப்பளவு-ஐ Note பண்ணுங்க. அப்புறம் பத்திரம் / EC எடுத்து அதே Survey No துணைப் பிரிவு பரப்பளவு இருக்கானு பாருங்க.
ஊரு பேரு ஒரு ஊருனு Patta-லயும், இன்னொரு ஊருனு EC-லயும் வந்தாலும் பரவால்ல. ஆனா Survey No துணைப் பிரிவு பரப்பளவு ரெண்டுலயும் அப்படியே Match ஆனா... அது ஒரே நிலம் தான். 100% சரி.
Survey Number மட்டும் தப்பா இருந்தா, இல்ல பரப்பளவு குறைஞ்சு இருந்தா தான் உஷாராகனும். அப்போ தான் "இது வேற நிலம்"னு அர்த்தம்.
3. Owner பேரு மாறி இருந்தா என்ன அர்த்தம்?
Patta-ல இன்னொருத்தர் பேரு இருக்குனு பாத்து பயப்படாதீங்க. நிலம் கை மாறும் போது Owner பேரு மாறுறது சகஜம். விற்பனை, தானம், வாரிசு பாகப்பிரிவினைனு பல காரணம் இருக்கு.
அதனால Patta-ல இருக்குற பேரும், பத்திரம் கொடுக்குறவர் பேரும் ஒரே ஆளா இருக்கானு மட்டும் பாருங்க. இல்லைனா, அவருக்கு அந்த நிலம் எப்படி வந்ததுனு கேளுங்க. பாகப்பிரிவினை பத்திரம், விற்பனை பத்திரம், வாரிசு சான்றுனு தொடர்சியா Document இருக்கானு பாருங்க.
4. குழப்பம் வந்தா என்ன பண்ணனும்? 3 எளிய வழி
பட்டாவும் EC-யும் வேற வேற ஊரா இருந்தா உடனே பயந்துடாதீங்க. இந்த 3 வழில தெளிவு படுத்திக்கோங்க.
வழி 1: அரசு இணையதளம்
TamilNilam.in தளத்துல போய் உங்க Patta Number போட்டு பாருங்க. அதுல Survey No, பரப்பளவு, Owner பேரு எல்லாம் வரும். Document-ஓட Compare பண்ணுங்க.
வழி 2: VAO-வ கேளுங்க
உங்க பகுதி VAO கிட்ட போய் "எங்க நிலம் Patta-ல ஒரு ஊரு, ஆனா EC-ல வேற ஊரு வருது. இது சரியா?"னு கேளுங்க. அவர் 2 நிமிஷத்துல தெளிவா சொல்லிடுவாரு.
வழி 3: SRO-ல விசாரிங்க
சந்தேகம் இருந்தா பத்திரம் பதியுற SRO-க்கு போய் "இந்த Survey No உங்க பரிவுக்கு உட்பட்டதா?"னு கேளுங்க. அவங்க Register-ல பார்த்து Confirm பண்ணி சொல்லுவாங்க.
முடிவுரை: விழிப்புணர்வே பாதுகாப்பு
நிலம் வாங்குறது ஒரு பெரிய முதலீடு. அதுல சின்ன சந்தேகம் வந்தாலும் தெளிவு படுத்திக்கிறது நம்ம பொறுப்பு.
பட்டாவுல ஒரு ஊரு, பத்திரத்துல ஒரு ஊருனு வந்தா அது மோசடி இல்லை. Revenue Village-க்கும் Registration Village-க்கும் இருக்குற வித்தியாசம் அவ்வளவு தான்.
ஆனா Survey Number, துணைப் பிரிவு, பரப்பளவு, எல்லை இதுல மட்டும் எந்த மாற்றமும் இருக்க கூடாது. அத மட்டும் உறுதி பண்ணிக்கோங்க. Document-ல சந்தேகம் வந்தா தயங்காம அரசு அலுவலர்கிட்ட கேளுங்க.
நிலம் வாங்குறதுக்கு முன்னாடி 10 தடவை கேள்வி கேக்குறது தப்பே இல்லை. விழிப்பா இருந்தா, ஏமாற்றம் வராது. நிம்மதியா வீடு கட்டலாம்.
நில ஆவணங்கள் தொடர்பான சட்டச் சிக்கல்களில் தெளிவு பெறவும், பட்டா மற்றும் பத்திரத்தில் உள்ள ஊர் பெயர் குழப்பத்தைத் தீர்க்கவும் வழக்கறிஞர் ஆலோசனைகள் உதவும்.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல் #அறிவோம்சட்டம்