Joined November 2012
2,050 Photos and videos
மிகக்கீழ்த்தரமான அறிக்கை! வெட்கங்கெட்ட ஆளுநர் அலுவலகமே! @lokbhavan_tn மருதுபாண்டியர்கள் 225 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில் சாதி-மதம் கடந்து வாருங்கள் என அறைகூவல் விடுத்ததை கொச்சைப்படுத்தும் வகையில் மருதுபாண்டியர்களை ஷத்திரியர்கள் என சனாதன-வர்ணபேதத்தைக் கொண்டு மருதுபாண்டியர் சகோதரர்களை பார்ப்பனர்களுக்கு சேவகம் செய்யும் பிரிவினர் என சாதிய வன்மத்தை வெளிப்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது. ஆளுநர் அறிக்கையை திரும்பப்பெறு! சாதிய வன்மத்தால் மருதுபாண்டியர்களை கொச்சைப்படுத்தாதே!! மருதுபாண்டியர்கள் சாதியை கடந்து போரிட்டவர்கள். தமிழர்களாய் ஒன்றுகூடுங்கள் என முழங்கியவர். ஜம்பு தீபகற்ப பிரகடனத்தில் 'சாதி-மதம்' கடந்து போரிடுங்கள் என்றவர். வட-இந்தியாவில் ஒரு இந்து அரசனும் இதுபோல வாய்திறந்து பேசியதில்லை. ஆனால் மருதுபாண்டியர்கள் திப்புசுல்தான், தீரன்சின்னமலை, வீரபாண்டியகட்டபொம்மன், விருப்பாச்சி கோபாலர், சுந்தரலிங்கம், பொல்லான் என அனைத்து சமூகங்களோடும் இணைந்து போர் புரிந்த பெருவீரர்கள். மாவீரர்களை சாதிய அடையாளத்தோடும், சிறுபுத்தியோடு கொச்சைப்படுத்தாதே!! மருதுபாண்டியர் போன்ற போராளிகளை வீழ்த்துவதற்காக வெள்ளையோரோடு கைகோர்த்தவர்கள் மாராத்திய பார்ப்பனர் கூட்டமான பேஷ்வாக்கள். இந்த பேஷ்வாக்கள் ஆங்கிலேயரோடு சேர்ந்துகொண்டு கலகக்காரர்களை அழித்தொழித்தார்கள். இந்த பேஷ்வாக்களின் வம்சத்தினரே இன்றய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை தொடங்கியவர்கள். இந்த கூட்டமே துரோகக்கூட்டம் தான். தஞ்சையை ஆண்ட சரபோஜி எனும் மாராத்திய போன்ஸ்லே எனும் ஷத்திரிய வழிவந்த அரசன் மருதுபாண்டியர்களுக்கு ஆதரவு தரமறுத்து ஆங்கிலேயருக்கு கைக்கூலி வேலைபார்த்தது வரலாறு. மராத்திய அரசனிடம் உதவிகேட்டு சென்ற போராளிகளின் தூதர்களை வெள்ளையரிடம் சாவர்க்கர் போல காட்டிக்கொடுத்தது வரலாறு. இந்த போன்ஸ்லே எனும் மராத்திய அரசன் மராத்திய சிவாஜி வம்சாவழியினர். இதுதான் உங்கள் மராத்திய ஷத்திரிய-பார்ப்பன கும்பல்களின் துரோக வரலாறு. மருதுசகோதரர்கள் உள்ளிட்ட போராளிகள் சூத்திர சமூகத்தை சார்ந்தவர்கள், ஆகவே இவர்கள் அதிகாரத்தை கைப்பற்றக்கூடாது என்பதற்காக மராத்திய பேஷ்வாக்களும், தஞ்சை சரபோஜிகளும் வெள்ளையரோடு கைகோர்த்தவர்கள். மருதுசகோதரர்களுக்கு ஆதரவாக படை, ஆயுதம் கொடுத்த திப்புசுல்தான் மீது படையெடுக்க மராத்திய பேஷ்வாக்கள் ஆங்கிலேயரோடு ஒப்பந்தம் உருவாக்கினார்கள். இந்த ஒப்பந்தத்தை செய்தவர் மராத்திய பார்ப்பனரான தாதா-பட்னாவிஸ் (இன்றய மராத்திய பாஜக முதல்வரின் வம்சாவழி). இந்த ஒப்பந்தத்தைக் கொண்டு திப்புசுல்தானின் மைசூர் மீது படையெடுப்பு நடக்கிறது. திப்புசுல்தான்-மருதுபாண்டியர்கள்-தீரன்சின்னமலை-விருப்பாச்சிகோபாலநாயக்கர்-பொல்லான் ஆகியோர் கூட்டணிக்கு வலுப்பெறுவதை தடுக்க மைசூர் மீது படையெடுப்பு நடத்தி திப்புவை வீழ்த்தினார்கள். இதனாலேயே மருதுசகோதரர்களுக்கு கிடைக்கவேண்டிய படை உதவி தக்க சமயத்தில் கிடைக்காமல் வீழ்த்தப்படுகின்றனர். பின்னர் சிவகங்கைச் சீமையில் நடந்த கொரில்லா போரில் மருதுசகோதரர்களை வீழ்த்த வழியில்லாதபோது, மருதுபாண்டியர்களை சாதியரீதியாகவும், வர்ணரீதியாக ஆட்சி செலுத்தும் வம்சாவளி உரிமை கிடையாதென சாதியை வைத்து பிரித்தார்கள் வெள்ளையர் என்பது வரலாறு. ஆளுநர் எனும் சதிகார தமிழின விரோத பதவியை வைத்து தமிழனை கொச்சைப்படுத்த எத்தனைக்காலம் அனுமதிக்கப்போகிறோம்? மருதுபாண்டியர்களின் பெருவீரத்தை குறித்து எந்த வடநாட்டானவது அறிவானா? இந்தி புத்தகத்தில் மருதுபாண்டியர் தியாகத்தை சேர்த்தார்களா? 'மங்கள்பாண்டே' எனும் பீகாரி பார்ப்பானின் மதவெறியை வைத்து நடந்த போரை 'முதல்விடுதலைப் போர்' என சொல்லுகிற இந்திய ஒன்றியம், என்றைக்காவது மருதுபாண்டியர்களின் சாதி-மதம் கடந்த புரட்சியை முதல் விடுதலை போர் என அறிவித்தார்களா? அப்புறம் எதற்கு பாரதத்தின் விடுதலைக்காக போரிட்டவர் என மருதுபாண்டியர்களை சொந்தம் கொண்டாடுகிறீர்கள் துரோகிகளே!! மருதுபாண்டியர்களின் கலகமே முதல் சுதந்திர போர் என அறிவிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கிய மூத்த ஆய்வாளர் பேரா.ராஜய்யன் இன்னும் உயிரோடுதான் 97 வயதில் இருக்கிறார். இருந்தும் அவரது தீர்ப்பை ஏன் வடநாட்டு இந்தி வெறியன்கள் நடைமுறைபப்டுத்தவில்லை? பதில்சொல்வாரா ஆளுநர்? மருதுபாண்டியர்களை கொச்சைப்படுத்தும் ஆளுநரை வெளியேற்றும் போராட்டத்தை நாம் நடத்தவில்கையெனில் நமது வரலாறு இழிவுசெய்யப்படுவதை தடுக்க இயலாது. ஆளுநர் மாளிகையின் அவதூறுக்கு எதிராக தவெக அரசு வாய்திறக்குமா? முதல்வர் அறிக்கை கொடுப்பாரா? என்ன செய்யப்போகிறீர்கள்? அனைத்து கட்சி தலைவர்களும் இதற்கான கண்டன அறிக்கையையும் போராட்டத்தையும் உடனடியாக நடத்திட வேண்டும் என மே17 இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். திருமுருகன் காந்தி மே பதினேழு இயக்கம் 16-06-2026
4
6
8
327
மதிமுகவின் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்துள்ள இந்து முன்னணியின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம்! உலகப் பொதுமறை அருளிய திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து சமூக விரோத சனாதனத்தின் பக்கம் சாய்க்க இந்துத்துவ கூட்டம் முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளுவர் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தார் என்று ஆளுநர் மாளிகையில் காவி உடை அணிவித்து தனியாக பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றை தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கடந்த மே 30ம் தேதி நடத்தினார். ஆளுநரின் இச்செயலுக்கு தமிழ்நாட்டின் அனைத்து முற்போக்கு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஐயா வைகோ அவர்கள் தலைமையில் கருப்புக் கொடி காட்டி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் கடந்த ஜூன் 7ம் தேதி சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் தோழர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், மதிமுக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழும்பூரில் அமைந்துள்ள மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தை இன்று (13-06-2026 சனிக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் முற்றுகையிட உள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது. இந்துத்துவ கும்பலின் இந்த அராஜக போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து அவரை சனாதனியாக மாற்ற முயற்சிப்பதை எந்த ஒரு தமிழனும் உயிருள்ள வரை எதிர்ப்பான். தாங்கள் செய்த இழி செயலுக்கு ஜனநாயக ரீதியான எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத இந்துத்துவ கும்பல் இப்படியான செயலில் இறங்கியுள்ளது. இந்த இந்துத்துவ கும்பலை மதிமுக உள்ளிட்ட ஜனநாயக முற்போக்கு அமைப்புகளோடு இணைந்து எதிர்கொள்ள மே பதினேழு இயக்கம் அணியமாக உள்ளது. மே பதினேழு இயக்கத் தோழர்கள் மற்றும் ஆதவாளர்கள் அனைவரும் பிற்பகல் 2 மணியளவில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் அணிதிரளுமாறு அழைக்கிறோம். மே பதினேழு இயக்கம் 9884864010
1
3
2
115
மே பதினேழு இயக்கத்தின் தோழரும் தமிழ்த்தேசிய களப்போராளியுமான தோழர் தருமபுரி மகாலிங்கம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் நினைவு நாள் (சூன் 11, 2021) இன்று. தோழர் தருமபுரி மகாலிங்கம் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்.
2
4
123
இயக்குனர் இமயம் அருந்திறல் தமிழர் ஐயா பாரதிராஜா மறைந்தார். தமிழ்க் கலை உலகின் தனிப்பெரும் ஆளுமையாய் விளங்கயவர். படித்த, நகரத்தன்மையான கதைகள், புராண இதிகாச கதைகள், மேற்குலக கதைகளின் தாக்கத்தில் உருவான கதைகள் என மூழ்கி இருந்த தமிழ்த்திரையுலகை சாமானிய- தமிழர்களின் வாழ்வியலை கதை மாந்தர்களாக, கதை களனாக மாற்றிய மாபெரும் ஆளுமை அவர். 'என் இனிய தமிழ் மக்களே!' எனும் அவரது கரகரத்த குரல் தமிழ் மக்கள் மீதான பேரன்பில் அவரிடமிருந்து ஒவ்வொரு படைப்பின் போதும் நம்மை அரவணைக்கும். கிராமப்புற கதைகள் மட்டுமல்லாமல், நவீன, நகரமயமான கட்டமைப்புகளுக்குள் நிலவும் முரண்களையும் அவர் படைப்புகள் பேசின. அவர் அனைத்துவிதமான கதைகளையும் கையாளும் தனித்திறமை கொண்ட படைப்பாளியாக மிளிர்ந்தார். அவரைப் பின்பற்றி அவரது மொழிநடையில் தமிழ்நாட்டின் பன்முகத்தன்மையான பண்பாட்டு அடுக்குகளை தமது படைப்புகளில் அவரது வழியில் பலர் வெளிக்கொணர்ந்தார்கள். கிராமப்புற, பண்ணையார் காலத்து பிற்போக்கு சடங்குகள், நம்பிக்கைகள், அடக்குமுறைகள் மீது அவரது கதாபாத்திரங்கள் தாக்குதலை நடத்தின. மக்களின் சிந்தனையில் மதம், சாதி குறித்த பிடிப்புகள் மீது அவர் கடுமையான விமர்சனங்களை தமது படைப்பின் மூலமாக வெளிப்படுத்தினார். பலர் தொடத்தயங்கிய கதைக்களங்களையும், கதை மாந்தர்களையும் படைத்து வெற்றிகரமான படைப்புகளை உருவாக்கினார். திரையுலகிற்கு வெளியே, தமிழர்களுக்கான தனித்துவமான சங்கங்களை உருவாக்க பெருமுயற்சி எடுத்தார். காவிரியில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட பலவேறு புரட்சிகர போராட்டங்கள் அவரால் முன்னெடுக்கப்பட்டன. தமிழ்த் திரையுலக கலைஞர்களை தமிழினப் போராட்டங்களுக்கு அழைத்து வந்த பெருமை அவருக்குண்டு. தமிழீ*ழ விடுதலைப் போராட்டத்திற்கும், புலிகளுக்கும் வெளிப்படையான ஆதரவை வழங்கியவர். 2009 இனப்படுகொ**லை போரின் பொழுது தனக்களிக்கப்பட்ட இந்திய அரசின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ' விருதினை திருப்பியளித்தவர். இலங்கையோடு கைகோர்த்து போரை நடத்திய இந்திய அரசிற்கு ஐயா.பாரதிராஜாவின் போர்க்குரல் கடும் நெருக்கடியை கொடுத்தது. போர் குறித்த செய்திகளை தணிக்கை செய்த இந்திய அரசின் சதிகளை இவரது அறிவிப்பு அம்பலப்படுத்தியது. தமிழ்த் திரையுலகின் இயக்குனர்கள், ஆளுமைகள், நடிகர்கள் ஆகியோரை அழைத்துக்கொண்டு இராமேஸ்வரத்தில் அவர் தலைமையில் நடந்த கண்டனப்போராட்டம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. அன்றய காங்கிரஸ் அரசின் தலைமையாக இருந்த சோனியா காந்தி அம்மையார் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த போது அவருக்குக் கருப்புகொடி காட்டினார். இதனால் அவர் முன்னனி இயக்குனர்களோடு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ் இனப்படுகொ**லைக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சியை கடுமையாக அவர் எதிர்த்த காரணத்தினால் அவரது அலுவலகம் காங்கிரஸ் குண்டர்களால் கடுமையாக தாக்கி சேதப்படுத்தப்பட்டது. 2009 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்காக அக்கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்ப்பரப்புரையை மேற்கொண்டார். பல இடங்களில் காங்கிரஸ் தோல்வியை எதிர்கொண்டதற்கு அவரது போராட்டம் மிகமுக்கிய காரணியாக அமைந்தது. 2011ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியால் திணிக்கப்பட்ட ராஜீவ்கொலையில் குற்றசட்டப்பட்ட அப்பாவி 3 தமிழர்களுக்கு நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்ய குரல்கொடுத்தார். 2011ல் முல்லைப்பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க மே17 இயக்கம் சென்னையில் நடத்திய பேரணியில் பங்கெடுத்தார். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அலைகடலென திரண்டு நின்ற அப்பேரணி, முழக்கப்போராட்டத்தை முன்னின்று நடத்தினார். ஐயா வைகோ, தோழர் வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள், ஓவியர் வீரசந்தானம் போன்ற கலைஞர்களோடு அவரும் அப்பேரணியில் எழுச்சியுரையை பதிவு செய்தார். 2017ம் ஆண்டில் ஈழத்தமிழர் படுகொ**லைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட மே17 ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் விடுதலைக்காக துணிந்து குரல் கொடுத்தவர் ஐயா பாரதிராஜா. தனது இறுதிக்காலம் முழுவதும் தமிழ் கலையுலகிற்காகவும், தமிழின உரிமைக்காகவும் அயராது குரல் எழுப்பியவர் இயக்குனர் இமையம் ஐயா பாரதிராஜா. தமிழினத்தின் உயர்விற்கு பங்களித்த அவரது வாழ்வை போற்றும் விதமாக 2026 மார்ச் மாதத்தில் மே17 இயக்கம், வாழ்நாள் சாதனையாளர் விருதான 'அருந்திறல் தமிழர்' பட்டத்தை வழங்கி பெருமை கொண்டது. தமிழினத்தின் அழகியலை தனது திரைக்காவியங்கள் வழியே படைத்து, தமிழினத்தின் உரிமைக்காக அயராது போராடி ஒடுக்குமுறை எதிர்கொண்ட மாபெரும் கலைஞன், தமிழினத்தின் ஒப்பற்ற படைப்பாளி ஐயா பாரதிராஜா அவர்களுக்கு எமது இறுதி மரியாதையையும், வீரவணக்கத்தையும் செலுத்துகிறோம். திருமுருகன் காந்தி ஒருங்கிணைப்பாளர் மே பதினேழு இயக்கம் 10/06/2026
16
42
505
தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளி தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை கண்டித்து கடந்த 31-05-2026 ஞாயிறு அன்று சைதாப்பேட்டையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த செய்தி. யூடியூப் இணைப்பு: youtube.com/watch?v=uhXBtezl… மே பதினேழு இயக்கம் 9884864010
1
12
22
550
தாய்த்தமிழ்தேசத்தில் அன்னைத் தமிழுக்கே முதலிடம். அன்னிய மொழிச்சடங்குகளை அனுமதியோம். ஆளுநர் எனும் கங்காணியினை கண்டிக்க ஒன்றுதிரள அழைக்கிறோம்.. 'வேடிக்கை பார்க்கும் தமிழினமே, வீதிக்கு வந்து போராடு!' எனும் முழக்கத்துடன் நண்பர்களை அழைத்துக்கொண்டு போராட்டத்தில் இணைவீர். இடம்: சைதை, பனகல் மாளிகை அருகில் நேரம்: காலை 10:00 மணி நாள் : 31-05-2026 மே பதினேழு இயக்கம் 9884864010
1
9
11
237
தமிழீழ இனப்படுகொலைக்கான 17ம் ஆண்டு நினைவேந்தல்! இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை மெழுகுவர்த்தி ஏற்றி நினைவேந்துவோம். நாளை மாலை 4:30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஒன்றுகூடுவோம்! மே பதினேழு இயக்கம் 9884864010
7
15
311
இனப்படுகொலைக்கு உள்ளான தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழ் மக்களின் இன்னலுக்கு தீர்வு காணும் வகையில், தமிழ்நாட்டு அரசிற்கு பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தீர்மானம் நிறைவேற்றிட கோரிக்கை வைக்கிறது மே பதினேழு இயக்கம்! @CMOTamilnadu @actorvijay @TVKVijayHQ @BussyAnand @AadhavArjuna தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை அரசே ஏற்று நடத்திடுக! தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னம் எழுப்பிடுக! - மே பதினேழு இயக்கம் ஈழத் தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமைக்காக போராடியதால் கடந்த 2009ம் ஆண்டு ஈழ மண்ணில் கொத்துக்கொத்தாக சிங்கள-பௌத்த பேரினவாத இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு தற்போது வரை நீதி கிடைக்கவில்லை. தமிழக வெற்றிக் கழகம் தற்போது தமிழ்நாட்டில் ஆட்சியமைத்துள்ள நிலையில், ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைத்திடும் வகையில் கடந்த 2013 ம் ஆண்டு அன்றைய அதிமுக அரசு நிறைவேற்றிய சட்டமன்றத் தீர்மானத்தை வழிமொழிந்து புதியதொரு சட்டமன்றத் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டுமெனவும், தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்திடவும், இனப்படுகொலை நினைவாக கடற்கரையோரம் நினைவுச் சின்னம் ஒன்றை உருவாக்கிட வேண்டுமெனவும் மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு ஜோசப் விஜய் அவர்களிடம் மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது. சுதந்திர இலங்கையில் கால் நூற்றாண்டுக்கு மேலாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு மொழி, இனரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளான தமிழீழத் தமிழர்களின் அமைதிவழிப் போராட்டம் புறக்கணிக்கப்பட்டதால் தனித் தமிழீழமே ஒரேத் தீர்வு என்ற அடிப்படையில் போராடினர். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் தமிழீழப் பகுதிகளை கட்டுப்படுத்தி ஒரு நடைமுறை அரசாங்கம் (De facto State) சிறப்பாக நிர்வாகம் செய்தது. பின்னர் இந்தியா-அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியுடன் கடந்த 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு தமிழீழத் தமிழர்களை இனப்படுகொலை செய்தது சிங்கள-பௌத்த பேரினவாத இலங்கை அரசு. இந்த இனப்படுகொலையில் 169,796 பேர் கொல்லப்பட்டனர். இனப்படுகொலையின் போது, இலங்கை அரசு உலகில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியும், வரையறுக்கப்பட்ட போர் விதிகளை மீறி மருத்துவமனைகளை மீது குண்டுகள் போட்டும், சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றும் இனப்படுகொலை செய்தது. இலங்கை அரசு போர்க்குற்றம் செய்ததாக 2010ம் ஆண்டு டப்ளின் நகரில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து 2013ம் ஆண்டு பிரமேன் நகரில் நடைபெற்ற இரண்டாவது மக்கள் தீர்ப்பாயம், இலங்கை அரசு இனப்படுகொலை செய்ததை உறுதி செய்து அறிவித்தது. இந்த மக்கள் தீர்ப்பாயங்கள் ஐநா மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் உயரதிகாரிகளை நீதிபதிகளாகக் கொண்டது. மேலும், இனப்படுகொலையை விசாரிக்க ஐநா அமைத்த மூவர் குழு அறிக்கையும், ஐநா உள்ளக விசாரணையின் சார்லஸ் பெட்ரி அறிக்கையும் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையின் பேரவலத்தை எடுத்துக்காட்டியது. மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் 2013ம் ஆண்டு மாணவர்கள் எழுச்சியின் காரணமாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசு, 'தனித் தமிழீழமே ஒரே தீர்வு, தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்திட வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானங்களை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியது. தொடர்ச்சியாக ஜெர்மனியின் பிரேமன் நகரில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தில் பங்கேற்ற மே பதினேழு இயக்கம், அமெரிக்க-இங்கிலாந்து இலங்கையுடன் இணைந்து இனப்படுகொலையில் ஈடுபட்டதை உறுதி செய்ததோடு, இந்தியாவின் பங்களிப்பையும் அம்பலப்படுத்தியது. 2013 ம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அரசு மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானங்களாக நிறைவேற்றி 13 ஆண்டுகள் ஆன நிலையில், தமிழ்நாடு அரசு அதனை மக்கள் மன்றத்தில் நினவூட்ட வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே, • 'ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட 'இனப்படுகொலை' மீது சர்வதேச விசாரணை நடத்திட வேண்டும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை பாதுகாத்திடும் வகையில் 'ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு' நடத்திட வேண்டும், இனப்படுகொலை நிகழ்த்திய 'இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை' விதித்திட வேண்டும்' என 2013 ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தைப் போல, முழுமையான, சர்வதேச வழிமுறைகளை முன்மொழியும் வகையிலானத் தீர்மானங்களை தவெக அரசு, தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானங்களாக நிறைவேற்றிட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கையில், தமிழ் அடையாளம் மற்றும் பெருமை எனும் பெருந்தலைப்பின் கீழ் 13வது வாக்குறுதியாக 'இலங்கைத் தமிழர்களுக்கான நீதி' என்பதில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானமாக நிறைவேற்றிட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. இனப்படுகொலைக்கு உள்ளான தமிழீழத் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்ட போதும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதை வரலாறுச் சொல்கிறது. மானுடகுலத்தின் மீதான தமிழர்களின் பற்றுறுதியை எடுத்துரைக்கும் வகையில் 'தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல்' நிகழ்வை தமிழ்நாடு அரசே நடத்திட முன்வர வேண்டும். உலகெங்கும் பலவேறு அரசுகள் இதுபோல நினைவு நிகழ்வை நடத்தி வருகின்றன. 'யூத இனப்படுகொலை', 'ஆர்மீனிய இனப்படுகொலை', 'ருவாண்டா இனப்படுகொலை', 'ஸ்ரெப்ரினிகா படுகொலை' எனும் நினைவேந்தல் பட்டியல் மானுடகுலத்தின் மீதான நம்பிக்கையை உறுதி செய்யும் நிகழ்வாக நடக்கிறது. கனடா நாட்டில் வாழும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்று, கனடா நாட்டில் பல்வேறு மாகாணங்கள், 'தமிழர் இனப்படுகொலை'யைக் கண்டிக்கும் வகையிலும், நினைவுறுத்தும் வகையில் நிகழ்வுகளை நடத்துகிறார்கள். கனடா நாட்டில் இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் குடியேற்ற நாடாக இருக்கும் கனடா நாட்டில் நடைபெறும் இந்நிகழ்வுகள், தமிழர்களின் தாய்நிலமாகிய தமிழ்நாட்டில் நடக்காமல் தவிர்க்கப்படுவது தமிழ்நாட்டுத் தமிழருக்கு ஏமாற்றமளிக்கிறது. கடந்த 16 ஆண்டுகளாக, ஆண்டுதோறும் மே மாதம் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை மே பதினேழு இயக்கம் நடத்தி வருகிறது. இந்த தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்திட வேண்டும், இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னம் ஒன்றை தமிழ்நாடு அரசு எழுப்பிட வேண்டும் என்ற கோரிக்கைகளை கடந்த 2014 முதல் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறோம். அந்த வகையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, • நடப்பு ஆண்டு முதல் இனப்படுகொலை நாளான மே 18-ஐ தமிழீழ இனப்படுகொலைக்கான நாளாக அறிவித்து, 'நினைவேந்தல்' நிகழ்வை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்திட முன்வர வேண்டும் • அதனோடு, தமிழர் கடலாம் சென்னை மெரினா கடற்கரையில் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்பி பொதுமக்களுக்கு அளித்திட முன்வர வேண்டும் ஆகிய எமது கோரிக்கைகளை பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ள வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு ஜோசப் விஜய் அவர்களை மே பதினேழு இயக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது! மே பதினேழு இயக்கம் 15/05/2026
2
11
16
312
தமிழ்ச் சமூகத்திற்காக வாழ்வை அர்ப்பணித்த தோழர் நல்லகண்ணு, தோழர் சிவா திலீபன், தோழர் தேனிசை செல்லப்பா ஆகியோரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு தாய்த்தமிழ் இயக்கம் சார்பாக இன்று (15-05-26 வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு செங்குன்றம் நேதாஜி இல்லத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். வாய்ப்புள்ள தோழர்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மே பதினேழு இயக்கம் 9884864010
2
2
120
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வென்ற போதும், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக உள்ள கேரள ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், தவெக தலைவர் திரு. விஜய் அவர்களை ஆட்சியமைக்க அழைக்காமல் தவிர்த்துள்ளார். பொறுப்பு ஆளுநரின் இந்த ஜனநாயக விரோத செயல் குறித்த மே 17 இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு 07-05-2026 வியாழக்கிழமை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றிய காணொலி. யூடியூப் இணைப்பு: youtube.com/watch?v=9wmWZSBX… மே பதினேழு இயக்கம் 9884864010
1
36
92
1,953
மரியாதைக்குரிய மாநிலங்களவை உறுப்பினர், திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த பொறுப்பாளர், சிந்தனையாளர், திருமிகு பேராசிரியர் கான்ஸ்டன்டைன் அவர்கள், தமிழ் மொழிக்காக உயிர்க்கொடை அளித்த மொழிப்போர் ஈகியர் மறைந்த மே17 இயக்கத் தோழர் சிவா திலீபன் அவர்களின் குடும்பத்தை 05-05-2026 பிற்பகலில் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார். தமிழ் மொழிக்கென 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி இன்னுயிர் ஈந்த தோழர் சிவா திலீபனின் குடும்பத்திற்காக பங்களிக்க வேண்டுமெனும் உயரிய தமிழின, தமிழ் மொழி உணர்வில், தான் மாநிலங்களவை உறுப்பினராக பெற்றுக்கொண்ட முதல்மாத வருவாயில் பெரும்பகுதியை தோழர் சிவா திலீபன் குடும்பத்தின் நலனுக்காக நன்கொடையாக சிவா திலீபனின் இணையர் தோழர் கீதா எனும் இசைமொழி அவர்களிடத்தில் கையளித்தார். உடன் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் மே17இயக்கத் தோழர்கள் இருந்தனர். பேராசிரியரின் தமிழின உணர்விற்கு தலைவணங்கி, மே17 இயக்கம் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம். திருமுருகன் காந்தி மே பதினேழு இயக்கம்.
19
40
822
தமிழக வெற்றிக் கழகத்தின் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அனுமதிக்க வேண்டும்! மாறாக, ஆளுநர் அந்த வாய்ப்பை தடுக்கவோ தவிர்க்கவோ கூடாது! ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கை மே 17 இயக்கம் கண்டிக்கிறது! ஆட்சியமைக்க பெரும்பான்மையை ஆளுநரிடம் நிரூபிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மாறாக சட்டமன்றத்தில் அக்கட்சி நிரூபிக்க வாய்ப்பை கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் தெரிவித்துள்ளது. ஆளுநரின் தனிப்பட்ட கணிப்பின் அடிப்படையில் ஒரு கட்சிக்கான பெரும்பான்மை குறித்து முடிவெடுக்கக்கூடாதென அந்த தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. மேலும், 2018 கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் ஜனதாதள (மதச்சார்பற்றது) கட்சிகளுக்கிடையே தேர்தலுக்கு பின்பான பெரும்பான்மையை கொண்ட கூட்டணி உருவாகியது. ஆனால் அக்கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்காமல், பெரும்பான்மை இல்லாமல் அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாஜக கட்சியை ஆட்சியமைக்க அன்றைய கர்நாடக ஆளுநர் அழைத்தார். இந்த நடைமுறை பாஜகவிற்கு சாதகமாக நடத்தப்பட்டது. பாஜகவிற்கு 15 நாட்கள் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதி கொடுத்தார் அன்றய கர்நாடக ஆளுனர். இந்த போக்கு சாத்தியமெனில், தமிழக வெற்றி கழகத்திற்கு அனுமதியளிப்பது எவ்வகையில் சாத்தியமில்லை? தமிழ்நாடு ஆளுனரின் ஆர்.எஸ்.எஸ், பாஜக சார்பு நிலையையே அவரது எதேச்சதிகார போக்கு காட்டுகிறது. அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க கோருவது இவ்வகையில் அடிப்படை சனநாயக உரிமையாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பிருந்தும், அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்டிருக்கும் கட்சியான த.வெ.க. கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பை ஆளுநர் உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால் இவ்வுரிமையை ஆளுனர் வேண்டுமென்றே தட்டிப்பறித்திருக்கிறார் என மே17 இயக்கம் குற்றம் சாட்டுகிறது. 1952ம் ஆண்டு அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த தேர்தலில் தனிப்பட்ட பெரிய கட்சியாக வெற்றிபெற்ற இராஜாஜியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்கும் உரிமையை அன்றைய ஆளுநர் வழங்கினார். இது முறையற்ற வகையில் அமைந்தது. கூட்டணியாக பெரும்பான்மை பெற்றிருந்த கிசான் மஸ்தூர் பிரச்சார் சபா கட்சியின் டி.பிரகாசம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணியிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை இருந்தும், தனித்த பெரிய கட்சியாக அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்டிருந்த இராஜாஜி ஆட்சியமைக்க அழைக்கப்பட்டார். தில்லி காங்கிரஸ் கட்சியின் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் விருப்பத்திற்கேற்ப கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமைப்பதை தடுக்கும் வகையிலான ஒரு தவறான முன்னுதாரணமாக ஆளுனரின் முடிவு அமைந்தது. ஆனால் 1971ல் அமைக்கப்பட்ட திரு ஷாய் பகவான் தலைமையிலான கவர்னர் கமிட்டி (Committee of Governors) வரையறுத்த வழிமுறைகளில், அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது எனும் வழிமுறையை சொன்னது. இந்த வழிமுறையை 1988ல் அமைக்கப்பட்ட சர்காரியா கமிசன், அதன் பின்பான எம்.எம்.பூன்ஜி கமிசன், அதன் பின்பு வந்த உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உறுதிப்படுத்தி உரிய வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளன. அவை தற்போது பின்பற்றப்படவில்லை. மாநில உரிமைகளை நசுக்கும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-தில்லி அரசின் முகவராக செயல்படும் ஆளுனரின் எதேச்சதிகார போக்கினை நாம் கட்சி-இயக்க எல்லை கடந்து கண்டித்தாக வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த கட்சிகளுக்கான ஆட்சியமைக்கும் வாய்ப்பை மறுப்பது சனநாயக விரோதம் மற்றும் மாநில அதிகாரங்களை ஒடுக்கும் செயலாகும். இது தவறான முன்னுதாரணமாக அமைந்து, இனிவரும் காலங்களில் அனைத்து கட்சிகளின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படலாம். அறிஞர் அண்ணா சொன்னதை போல ஆளுநர் என்பவர் மாநில அதிகாரத்தை கட்டுப்படுத்தும் பண்ணையாராக செயல்படுகிறார். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுனரும் எதற்கு எனும் கேள்வியின் நியாயம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, மாநில உரிமைகளை நசுக்கும் ஆளுநரின் போக்கினை அனைவரும் கண்டிக்க முன்வர வேண்டுமென மே பதினேழு இயக்கம் கோரிக்கை முன்வைக்கிறது. இந்த எதேச்சதிகார போக்கை நாம் இன்று அனுமதித்தால் நாளை, எஞ்சியிருக்கும் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்படும். ஆளுநர் வாயிலாக ஒன்றிய பாஜக அரசு தனது அதிகாரத் திணிப்பை செய்வதும், மாநில உரிமை மீது தாக்குதல் தொடுப்பதையும் மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. திருமுருகன் காந்தி ஒருங்கிணைப்பாளர் மே பதினேழு இயக்கம் 06-05-2026
12
26
616
17 ஆண்டுகள் கடந்தும் போராடிக் கொண்டிருக்கிறது தமிழினம். முள்ளிவாய்க்காலில் தொடங்கிய மானுடகுல அழிவு பாலஸ்*தீன காஸா வரை நீண்டுகொண்டே செல்கிறது. நம் இனத்திற்கான விடியலாய், சுதந்திர தேசமாய் மலர்ந்து கொண்டிருந்த நாடு அழிக்கப்பட்ட போது, துணிந்து மறித்தவர்கள் விதையாகிப் போனார்கள். மரித்தவர்களின் இறுதி மூச்சுக்காற்று ஈ*ழத்திலிருந்து பெருங்கடல் வழியே நம்மை ஆரத்தழுவியது. 'வேண்டும் விடுதலை' எனும் முழக்கத்தை முள்ளிவாய்க்காலில் இருந்து ஏந்தி வந்தது அந்த சுவாசக்காற்று. உயிர்கொடையாளிகள் நமக்குக் கையளித்த விடுதலை நெருப்பை பேணிப்பாதுகாத்து முன்னகர்த்தும் கடமையை நினைவு கூர்வோம். கடந்த 16 ஆண்டுகளாய் கடற்கரையில், தமிழர் குருதி கலந்து வீசியடிக்கும் பேரலைகளின் முற்றத்தில் நினைவேந்துகிறோம். இவ்வாண்டும் மே மாதம் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை, மெழுகுவர்த்தி ஏற்றி நினைவேந்தல் செய்கிறோம். தமிழினத்தின் அயராத போர்க்குணத்தை உயர்த்திப் பிடிப்போம். குடும்பத்தோடும், நணர்களோடும் நினைவேந்த அவசியம் வாருங்கள். தமிழ்நாட்டின் உணர்வுப்பூர்வமான மாபெரும் நினைவேந்தல் நிகழ்வில் சாதி-மதம் கடந்து ஒன்றுகூடுவோம். மே பதினேழு இயக்கம்
1
12
22
351
தமிழ்நாட்டின் பாஜக எதிர்ப்புக் குரலாக இருந்த முன்னாள் முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் தோல்வி ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
16
35
383
திராவிடம்-தமிழ்த்தேசியம் இரண்டும் இரு கண்கள் என்ற கொள்கையை கொண்ட தவெகவை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். திராவிடம்-தமிழ்த்தேசியம் இரண்டையும் மறுக்கும் பாஜகவையும், திராவிடத்தை எதிர்த்து தமிழ்த்தேசியம் என்ற பெயரில் பார்ப்பன கடப்பாரையை எடுத்த நாதகவையும் தமிழர்கள் நிராகரித்திருக்கிறார்கள். திராவிடம்-தமிழ்த்தேசியம் நிராகரித்த அரசியல் தமிழ்நாட்டில் கிடையாது.
1
6
19
515
சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி, திமுக-அதிமுக தோல்வி, பாஜக-நாதகவை மக்கள் புறக்கணித்தது உள்ளிட்டவை குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சர்மிளா டாக்கீஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணல். நேர்காணல் இணைப்பு: youtube.com/watch?v=3ifT0wXH… மே பதினேழு இயக்கம் 9884864010
3
8
290
தவெக-விஜயை ஆதரிக்கும் இளைஞர்களை தற்குறிகள் என்று அழைப்பதில் எமக்கு உடன்பாடில்லை!
5
20
46
669
ஐயா 'தேனிசை' செல்லப்பா இயற்கையானாரே! மறக்க இயலுமா அந்த மந்திர குரலை. இளம்வயதில் தேனிசைச் செல்லபப எனும் பெயர் அறிமுகமாகும் முன்னர், அவரது குரல் தமிழீ.ழ*த்தை எமக்கு காட்டியது. '..தமிழீழத்தின அழகு..', 'பச்சை வயலே... பனக்கடல் வெளியே...' எனும் அவரது பாடல் எவரால் மறக்க இயலும்.. 'நெருப்போடு என்னடா விளையாட்டு..' 'நஞ்சை மாலை கழுத்துகளே..' என எம் நெஞ்சில் வீரமூட்டிய பாடல், 'மாங்கிளியும் மரங்கொத்தியும்...' எனும் தாய்மண்ணிற்காய் ஏக்கம் நிறைந்த பாடல் குரலும், '.. நம்புங்கள் தமி*ழீ.ழம் நாளை பிறக்கும்..' என நம்பிக்கையூட்டிய பாடல் என அவரது கம்பீரக்குரல் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் ஒலிக்கும்போதெல்லாம் அங்கே தமிழ்த்தேசிய அரசியல் முழக்கம் எழுகிறதென அடையாளம் கண்டு கல்லூரி காலங்களில் தேடித்தேடி சென்று கவனித்த பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் நினைவுக்கு வருகின்றன. அவரது குரலில் கரும்புலிகள் உயிர்ப்பெற்று தாய்நிலத்தில் உலா வருவதாய் தோன்றும். தமிழீழ அரசியல் தமிழினத்தின் உயிரோடு கலந்ததெனில், தேனிசை செல்லப்பாவின் குரல் அந்த அரசியலுக்கு உணர்வெழுச்சியை சேர்த்தது. மேதகுவின் புகழ்பாடி அவர் இசைத்த 'ராஜகோபுரம் எங்கள் தலைவன்...' பாடல்கள் உள்ளிட்டவை என்றென்றும் எம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும். மேதகுவால் வாஞ்சையோடு அரவணைக்கப்பட்ட கலைஞர். புலிப்பாடகர் என்றே அறியப்பட்ட தேனிசைச் செல்லப்பா அவர்களின் குரல் ஒலிக்காத தமிழ் நிலமில்லை எனலாம். '...சீருடை அணியாத போராளியாக களத்தில் நிற்பவர்..' என மேதகுவால் பாராட்டு பெற்றவர். ஐயா தேனிசை செல்லப்பா அவர்களின் இல்லத்திருமண விழாவிற்கு மேதகு நேரடியாக வாழ்த்துச் செய்தியை கொடுத்தனுப்பி இருந்தார். அத்தகைய நெருக்கத்தோடு புலிகள் சீறுடை அணியாத போராளி என பாராட்டு பெற்ற கலைஞன். தமிழ்நாட்டில் திராவிடர் இயக்க மேடைகளில் அவரது பாடல்களை கேட்டிருக்கிறேன். பாவேந்தர் பாடல்களை அவரது குரலில் கேட்பது தனி அனுபவம்.. 'கொ*லை வாளினை எடடா .. மிகக்கொடியோர் செயல் அறவே..' எனும் வரிகளை அவர் பாடுவதை நேரில் கேட்கும் சமயத்தில் பாவேந்தரையே நேரில் கண்டதாய் உணர்வோம். கடந்த 50 ஆண்டுகால தமிழர் அரசியலில் இரண்டர கலந்த பாசறைப் பாணர் ஐயா தேனிசை செல்லப்பாவின் குரல் என்றென்றும் தமிழர் வாழ்வில் ஒலித்துக்கொண்டிருக்கும். அவரது அரசியல் பணி, அயராத உழைப்பு, எழுச்சியான குரல், தமிழினப்பற்று காலத்தின் புத்தகங்களில் செதுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவரது குரலுக்கு மரணமேது. அவர் நம்முடன் வாழ்கிறார். சுதந்திரத் தமி*ழீழம் பிறக்கும் பொழுது அந்தக் குரல் நம்மை அங்கே வரவேற்கும். பாசறைப்பாணர் ஐயா தேனிசை செல்லப்பாவிற்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம். திருமுருகன் காந்தி ஒருங்கிணைப்பாளர் மே பதினேழு இயக்கம்
12
11
312
தமிழ்நாட்டில் பாஜக நுழைந்தால் என்னாகும்? உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். இந்த படத்தில் வரும் காட்சிகள் யாவும் உண்மையே. இதில் காட்டப்படும் காட்சிகள் இந்தியாவில் நடந்த நிஜ சம்பவங்களே. இது நம்மைப் பற்றிய படம். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் பார்க்க வேண்டிய படம். அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.
8
63
91
1,093
தமிழர்களின் வணிகத்தை வடநாட்டு மார்வாடிகளுக்கு தாரைவார்க்கவே வடநாட்டு கட்சியான பாஜக மதக் கலவரங்களை உண்டாக்குகிறது.
8
95
184
1,573