சென்னை பெருநகர காவல் துறையும், மாநில மகளிர் ஆணையமும் இணைந்து சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி கூட்டம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் காவல் கூடுதல் ஆணையர் திருமதி மகேஸ்வரி இ.கா.ப. அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் ஆணைய தலைவர் திருமதி குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் POCSO-சம்பந்தப்பட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாளும் போது ஏற்படும் இடர்பாடுகள் ஆகியவற்றை எவ்வாறு திறம்பட கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.
@chennaipolice_ and Tamil Nadu State Commission for Women
@NaduFor jointly organized a one-day refresher training session for All Women Police Station Inspectors and Sub-Inspectors in Chennai.
Tmt. Kumari, Chairperson, Tamil Nadu State Commission for Women, Tmt. Maheshwari IPS, Additional Commissioner of Police leadership and others participated.
This included training them on how to effectively deal with the issues involved in dealing with crimes against women and children and the pitfalls of dealing with child victims of POCSO-related crimes.
#womensafety
@NCWIndia