இன்றைய தினம் மாலை பழனியில், பழனி பகுதியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக வேண்டும் என்பதை வலியுறுத்தி
@BJP4TamilNadu சார்பில் நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டத்தில் பெருமளவில் திரண்டிருந்த பொதுமக்கள் கூட்டம், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது என்பதை வலுவாக உணர்த்தியிருக்கிறது.
கோவில் நகரமாக இருக்கவேண்டிய பழனி பகுதி குப்பை நகரமாக மாறியிருக்கிறது. ரூ.1,500 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டுள்ள பழனி கோயிலை பராமரிக்க இந்த கையாலாகாத திமுக அரசு எதுவும் செய்யவில்லை. திண்டுக்கல் பகுதியை சேர்ந்த அமைச்சர்களான திரு. ஐ.பெரியசாமி அவர்களும், திரு. சக்கரபாணி அவர்களும் மக்கள் குறைகளுக்காக இதுவரை குரல் கொடுத்திருக்கிறார்களா? திமுகவின் அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்ய பதவியை பெறவில்லை. எப்படி கொள்ளையடிப்பது என்றே நினைக்கிறார்கள்.
பழனியில் நடைபெற்ற அனைத்துலக முருகன் மாநாட்டில், ரூ.50 கோடி ஒதுக்கி 143 முருகன் கோயில்களை சீரமைப்போம் என்றார்கள். இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, கோயில்களில் புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தது திமுக. ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகள், ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.82 கோடி மட்டுமே ஒதுக்கினார்கள். இப்படிபட்ட மோசடி ஆட்சிக்கு தமிழக மக்கள் மீண்டும் வாய்ப்பு தரப்போவது இல்லை. ஆனால், இந்த போராட்டம் ஆளும் திமுக அரசுக்கு ஒரு அபாய மணியாக எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போராட்டத்திற்கு பிறகு, திமுக அரசு நிச்சயம் பழனியை தனி மாவட்டமாக அறிவிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அப்படி இல்லையென்றால் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தகுதியை கூட திமுக இழந்துவிடும்.
இந்நிகழ்வில்,
@BJP4TamilNadu மாநில செயற்குழு உறுப்பினரும், பழனி சட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான திரு.
@Palanikanagaraj அவர்கள், மாவட்ட தலைவர் திரு. P. ஜெயராமன் அவர்கள், தமிழக பாஜக மாவட்ட மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். (1/2)