Joined June 2023
3,023 Photos and videos
உலக குருதிக்கொடையாளர் நாள் இன்று! நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறையில் தங்களை இணைத்துக்கொண்டு, உயிர்காக்கும் அவசரத்தேவை எனும்போதெல்லாம் மறுக்காது, இரவு - பகல் பாராது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஓடோடிச் சென்று தங்கள் குருதியைக் கொடுத்து உயிர் காக்கும் என் அன்பிற்கினிய தம்பி-தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறை கடந்த 16 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 இலட்சம் அலகுகள் அளவிற்கு குருதியைக் கொடையாக வழங்கி பல்லாயிரக் கணக்கான மக்களின் இன்னுயிரைக் காத்துள்ளது. கொடையாக நாம் தரும் ஒவ்வொரு துளி குருதியும் உயிர் காக்கும் பேராற்றல் கொண்ட அருமருந்தாகும்! காலத்தினாற் செய்த உதவி ஞாலத்தை விடவும், செய்யாமற் செய்த உதவி வையகத்தையும் - வானகத்தையும் விடவும் பெரிதென்ற நம் வள்ளுவப் பெரும்பாட்டனின் குறளுக்கிணங்க ஒவ்வொரு முறையும் நீங்கள் அளிக்கும் குருதிக்கொடையானது காலத்தினால் செய்த உதவி மட்டுமல்ல; செய்யாமல் செய்த பேருதவியும் கூட! தன்னலம் சிறிதுமின்றி பிறர் உடல் நலம் பேணவும், பேராபத்தில் உள்ள உயிர் நலம் காக்கவும், தேவை ஏற்படும் போதெல்லாம் குருதியைக் கொடையாக தந்துதவும் குருதிக்கொடையாளர்களின் பெரும்பணி மிகுந்த போற்றுதற்குரியது; வணங்கத்தக்கது! ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் அதிக குருதிக்கொடை வழங்கும் அமைப்பிற்கான பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து நம்முடைய பாசறை உறவுகள் பெறும்போதெல்லாம் மிகுந்த பெருமிதமும் மனநிறைவும் கொள்கிறேன். தொடரட்டும் உயிர்காக்க குருதிக் கொடை தரும் உங்கள் உன்னதப் பெருந்தொண்டு! மலரட்டும் இப்பூவுலகம், பொதுநலம் பேணும் உங்கள் மாசற்ற பேரன்புகொண்டு! “ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும், கொடுப்பவர் உள்ளம் உயர்வாகும், உன்னத கொடையாம் குருதிக்கொடை!” என் பேரன்பிற்குரிய குருதிக்கொடையாளர்கள் அனைவருக்கும் உலக குருதிக்கொடையாளர் நாள் நல்வாழ்த்துகள்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி #WorldBloodDonorDay
7
444
857
4,655
குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர், புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்ப்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேரை துப்பாக்கியால் சுட்டு இனப்படுகொலை செய்த கேரள காங்கிரசின் பட்டம் தாணு பிள்ளை ஆட்சியை கவிழ்த்து, ஒட்டு மொத்த இந்தியாவையும் திருவிதாங்கூர் நோக்கி திரும்பச் செய்து, வேறு வழியின்றி குமரி மண்ணை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டிய நெருக்கடியை பிரதமர் நேருவுக்கு ஏற்படுத்திய இனமானக் காவலர்..! திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்து வரலாற்றை மாற்றிய புரட்சியாளர்..! திருவிதாங்கூர் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே இருந்த ஓட்டுரிமையை மாற்றி, எல்லோருக்கும் ஓட்டுரிமை வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிப் போராடிப் பெற்றுத் தந்த பெருந்தகை..! உதட்டளவில் மட்டும் இனப்பற்றும், மொழிப்பற்றும் பேசிப்பேசி, ‘நெல்லை நம்முடைய எல்லை, குமரி நமக்கு தொல்லை’ என்று அடுக்கு மொழி வசனம் பேசி, திராவிடத் திருவாளர்கள் குமரி எல்லை காவு போவதை கைகட்டி வேடிக்கை பார்த்தபோது, தீரத்துடன் போராடி குமரி மண்ணை மீட்டுத் தந்த தெற்கெல்லை காவலர்..! குமரி மண் தமிழ்நாட்டோடு இணைய எதிர்ப்பு தெரிவித்த கேரள காங்கிரசிற்கு எதிராக ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை’ தொடங்கி தனித்துப் போட்டியிட்டு நாகர்கோயில் நாடாளுமன்றத் தொகுதியையும், 12 சட்டசபை இடங்களையும் வென்று அகில இந்திய காங்கிரசை அதிரச்செய்த பெருந்தமிழர்..! இடுக்கி, நெல்லூர் மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் நாள் நாடாளுமன்றத்தில் வரலாற்றுப் பேருரை நிகழ்த்திய வீரமறவர்.. நாகர்கோவில் நகரசபை தலைவர், திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் என பொது வாழ்வில் தான் ஏற்றப்பொறுப்புகள் அனைத்திலும் மக்கள் வாழ்வு ஏற்றம் பெற வழிவகுத்த தூயவர்..! தெற்கெல்லை காத்த தீரர், நேர்மைமிகு வழக்கறிஞர், ஆகச்சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட மக்கள் தலைவர், பொது வாழ்வில் உறுதியும், தூய்மையும் காத்த இலட்சியவாதி, தமிழ் மண்ணையும், மக்களையும் உயிரென நேசித்த போற்றுதற்குரிய பெருந்தமிழர் நம்முடைய தாத்தா ‘குமரித்தந்தை’ மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
9
393
800
8,039
நாம் தமிழர் கட்சி - சங்ககிரி சட்டமன்றத் தொகுதி, மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த உழவர் பாசறையின் செயலாளர் அன்புத்தம்பி மாரிமுத்து அவர்களின் தாயார் அம்மா லட்சுமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அம்மா லட்சுமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
9
80
251
4,587
‘இயக்குநர் இமயம்’ எங்கள் அப்பா பாசத்திற்குரிய பாரதிராஜா அவர்களுக்கு வீரவணக்கம்!
40
1,105
4,020
73,691
ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட எண்ணற்ற மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கவிதையாகப் படம்பிடித்த தமிழினத்தின் ஈடு இணையற்ற பெருமை, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். திரைக்கலையின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் எனக்கு கற்பித்த பேராசான்; பெற்ற மகனைப்போல என் மீது பெரும் பாசம் காட்டிய அப்பா பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக திரைக்கலை பயின்ற நாட்கள் ஒவ்வொன்றும் என் வாழ்வின் பொன்னாட்களாகும். பெரும்புகழ் பெற்ற ஏராளமான திரைக்கலைஞர்களை தமிழ்த்திரைக்கு தந்து வாழ்வளித்த மகாகலைஞனின் மறைவு கலைத்துறைக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரைத்துறை மட்டுமின்றி என்னுடைய அரசியல் பயணம் வெற்றியடையவும் நாம் தமிழர் கட்சியின் மேடையேறி வாழ்த்திய பெருந்தகையின் மறைவு தனிப்பட்ட முறையில் என்னுள்ளத்தை மிகவும் பாதித்துள்ளது. இப்பெருந்துயரிலிருந்து மீள முடியாமல், என்னை நானே தேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றேன்! அப்பா பாரதிராஜாவை இழந்து பெருந்துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், உலகெங்கும் பரவிவாழும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன். ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!
26
896
2,974
43,326
அரசு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பிலிருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews உள்ளிட்ட செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள் தவெக அரசால் நீக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. @CMOTamilnadu @TVKVijayHQ செய்தித்தொலைக்காட்சிகளை முடக்குவது என்பது சனநாயகத்தின் குரல்வளையை அதிகார கொடுங்கரங்களால் நெரிப்பதற்கு ஒப்பானது. இதற்கு பெயர்தான் சனநாயகமா? இதுதான் சனநாயகன் ஆட்சியா? செய்தியாளர்களை சந்திக்கத்தான் முதல்வர் விஜய் அவர்களுக்கு துணிவில்லை. செய்திகளை சந்திக்கவும் துணிவில்லையா? செய்தி தொலைக்காட்சிகளை முடக்கினால் அன்றாடம் நடக்கும் ஆட்சியின் அவலங்களை மறைத்துவிடலாம் என்று நினைப்பது, கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்று நம்புவதை போன்று அறிவுக்கு புறம்பானது. உண்மைச் செய்திகள் மக்களிடம் சேராமல், அரசு கேபிளிலிருந்து செய்தித் தொலைக்காட்சிகளை இருட்டடிப்பு செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும் உங்கள் ஆட்சியில் விடிய விடிய தலைநகர் சென்னையில இருட்டில் தவிக்கும் மக்களை காப்பதில் சிறிதேனும் காட்டுங்கள் முதல்வர் அவர்களே! அதுதான் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற குறைந்தபட்ச நன்றியாக இருக்கும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
306
927
2,052
55,937
அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனையை அனுமதிக்கலாமே? என்று கேள்வி எழுப்பியுள்ள மாண்பமை நீதியரசருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி! கடந்த ஏப்ரல் மாதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பனை மரத்திலிருந்து கள் இறக்கிய விவசாயி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கை விசாரித்த மாண்பமை மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதியரசர் புகழேந்தி அவர்கள் புதுச்சேரி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி உள்ளபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன்? எனவும், கேள்வி எழுப்பியதுடன், கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனும்போது, தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது? அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதிக்கலாமே? என்றும் கருத்துத் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தருகிறது. ‘கள்’ உணவின் ஒரு பகுதி என்றும், சங்ககாலம் தொட்டே ‘கள்’ தமிழர் பண்பாட்டில் பயன்பாட்டில் உள்ளது என்றும் வலியுறுத்திவரும் நாம் தமிழர் கட்சி, பனை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘கள்’ விற்பனைக்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் போராடி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் ‘கள்ளின் மருத்துவப் பயன் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ள மாண்பமை நீதியரசர் புகழேந்தி அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் கள் விற்பனையை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று போராடிவரும் பனை தொழிலாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நெடுங்காலக் கோரிக்கை விரைவில் நிறைவேறட்டும். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
21
872
1,591
17,357
தம்பி மாரிதாஸ் மீதான தவெக அரசின் கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல்! அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்தும் பாசிசப்போக்கு! @CMOTamilnadu @TVKVijayHQ ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான தம்பி மாரிதாஸ் அவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ச்சியாகத் தோலுரித்து வரும் மாரிதாசைக் கைதுசெய்திருப்பது அதிகாரத் திமிரின் உச்சமாகும். தம்பி மாரிதாசின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால் சட்டப்படியாக வழக்குத் தொடுக்கலாம்; மாறாக, எவ்வித விசாரணையும் இன்றி உடனடி கைது நடவடிக்கை என்பது சனநாயக விரோதமாகும். பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர், போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்ற கொடுங்குற்றவாளிகள் மீதெல்லாம் பாயாத அதிரடி கைது நடவடிக்கைகள், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் பாய்கிறது என்றால் இந்த அரசும் அதிகாரமும் யாருக்கானது? இதுதான் மக்கள் வேண்டிய மாற்றமா? ஆளும் தவெகவைச் சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சியினரையும், அரசை விமர்சிப்போரையும் தனிநபர் தாக்குதல் தொடுத்து, இணையவெளியில் அவதூறுகளையும், ஆபாசத்தையும் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடும் நிலையில், அவர்கள் மீதெல்லாம் பாயாத சட்டம் தம்பி மாரிதாஸ் மீது பாய்கிறதென்றால், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் போக்காகும். தவெகவை மற்றவர்கள் விமர்சிப்பதை கவனிக்கும் காவல்துறை, தவெகவினர் மற்றவர்களை விமர்சிப்பதை கண்டுகொள்ளாதது ஏன்? திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், ‘என்னை விமர்சிப்பவர்கள் நிறுத்திவிட வேண்டாம், தொடர்ந்து விமர்சியுங்கள்’ என்று மேடையில் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது அற்ப விமர்சனத்திற்கு அதிரடி கைது நடவடிக்கை எடுப்பதற்கு பெயரென்ன? முந்தைய திமுக அரசு செய்த கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் அதே கொடுஞ்செயலை தவெக அரசும் தொடர்வதற்கு பெயர்தான் தூய சக்தியா? வெட்கக்கேடு! ஆளும் அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்த முனையும் இத்தகைய மிரட்டல்கள் அப்பட்டமான பாசிசப்போக்காகும். பந்து எப்போதுமே ஒருவரிடம் மட்டுமே இருந்துவிடுவதில்லை. இன்று உங்கள் கைகளில் இருக்கும் பந்து நாளை மற்றவர்கள் கைகளுக்கும் இடம்மாறும்; பார்த்து விளையாடுங்கள். ஆகவே, தவெக அரசு பழிவாங்கும் போக்கோடு நடந்துகொள்ளாமல் சனநாயகத் தன்மையோடு இயங்க வேண்டுமெனவும், தம்பி மாரிதாசை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். #ReleaseMaridhas - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
621
2,077
4,830
215,910
எரிகாற்று உருளை விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்! வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிகாற்று உருளையின் விலையை இந்திய ஒன்றிய அரசு 29 ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. எவ்வித முன்னறிவிப்புமின்றி எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியுள்ளது ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும். ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கட்டுக்கடங்காது நாளுக்கு நாள் உயர்வதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் மக்கள் செய்வதறியாது தவித்து நிற்கையில், எரிகாற்று உருளை விலையையும் உயர்த்துவது, இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களின் குருதியை உறிஞ்சும் கொடுஞ்செயலாகும். இந்திய ஒன்றிய அரசின் கையிலிருந்த வாகன எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை தனியார் எரிஎண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் வகையில், கடந்த 2010ஆம் ஆண்டு சூன் மாதம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை காங்கிரசு அரசும், 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டீசல் விலை நிர்ணய உரிமையை பாஜக அரசும் மொத்தமாகக் கையளித்ததன் விளைவே தற்போது மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு அடிப்படை காரணமாகும். 1200 ரூபாய் அளவிற்கு விற்ற சமையல் எரிகாற்று உருளையின் விலை கடந்த நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டுதான் 1000 ரூபாய்க்கு கீழாக குறைக்கப்பட்டது. தற்போது அதனை மீண்டும் 1000 ரூபாய் அளவிற்கு உயர்த்தும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் மாதந்தோறும் பாதிக்கும் அறமற்றச் செயலாகும். ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எரிகாற்று உருளை விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும், எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் இந்திய ஒன்றிய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இத்தகைய நெருக்கடியானச் சூழலில் எரிகாற்று உருளை விலை உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படாமல் காக்க, தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு, உடனடியாக தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து குடும்பங்களுக்கும் வருடத்திற்கு 6 எரிகாற்று உருளைக்கான செலவை முழுமையாக ஏற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
35
698
1,218
19,019
தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி! தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்! மாமனிதர்! நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவேந்தல் நிகழ்வு. வைகாசி 23 | 06-06-2026 இடம்: தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் - சென்னை. புகழ்வணக்க உரை: youtu.be/kk9dRe8E0x4?si=wD0A…
10
406
917
10,275
தமிழ்நாட்டின் இளம் சதுரங்க வீரர் அன்புமகன் பிரக்ஞானந்தா அவர்கள் நார்வே சதுரங்க தொடர் - 2026 வாகையர் பட்டத்தை வென்று தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் அளப்பரிய பெருமை சேர்த்துள்ளதை அறிந்து பெருமிதமும், பேருவகையும் அடைந்தேன். உலகின் முன்னணி சதுரங்க வீரர்களையெல்லாம் வீழ்த்தி இந்தியப் பெருநாட்டிலேயே முதன்முறையாக நார்வே சதுரங்கப் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தா, சதுரங்க ஆட்டத்தில் தமக்குள்ள அளப்பரிய தனித்திறன் மூலம் உலக வாகையர் பட்டத்தை வெல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை. வருங்காலங்களில் மேலும் பல பன்னாட்டு சதுரங்கப் பட்டங்களை வென்று, உலகின் முதல்நிலை சதுரங்க வீரராகத் திகழ அன்புமகன் பிரக்ஞானந்தாவிற்கு என்னுடைய பேரன்பும், வாழ்த்துகளும்! @rpraggnachess
15
604
1,694
11,986
தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர், என்னுடைய அன்புத்தம்பி முத்து.ரமேஷ் அவர்களின் அன்புத்தந்தை ஜெ.முத்துலிங்கம் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். பாசத்திற்குரிய தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி முத்து ரமேஷ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன். பெருமதிப்பிற்குரிய அப்பா முத்துலிங்கம் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
13
96
279
4,576
தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்! நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர்களினுடைய நினைவைப் போற்றுகிற நிகழ்வு! வைகாசி 23 | 06-06-2026 தியாகராயர் நகர் சென்னை. x.com/i/broadcasts/1mxPaaELQ…
30
457
963
9,299
‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண்’ என்று நல்லதொரு நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை வரையறுக்கிறார் நம்முடைய மூதாதை வள்ளுவப் பெரும்பாட்டன்! நாம் வாழும் பூமி நமக்கானது மட்டுமன்று; வருங்கால நம் தலைமுறைகளுக்குமானது! அதனைப் பாதுகாப்பாக அவர்களிடம் கையளித்து செல்வது ஒன்றே நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் பெருங்கடமை! நிலம், நீர், காற்று, மலை, காடு, அருவி, ஆறு, கடல் என்று இயற்கையின் அருங்கொடைகள் அனைத்தையும் நாம் மாசுபடுத்தி, அழித்தொழிக்கக் கூடாது. தொழில் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில் நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் இயற்கை வளங்களை அழிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்கவும் கூடாது. நம் கண் முன்னே இரசாயன ஆலைக்கழிவுகள் கலந்து நிலமும், நீரும், காற்றும், கடலும் மாசுபடுத்தப்படுவதையும், காடுகள் அழிக்கப்படுவதையும், மலைகள் வெட்டப்படுவதையும், ஆற்று மணல் சுரண்டப்படுவதையும் தடுக்கத்தவறினால், அது வருங்கால தலைமுறைக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் நாம் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். ‘நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு!’ என்றார் நம்முடைய பெரிய தகப்பன் வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்கள். மண்ணையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்திவிட்டு எதை நாம் உண்ணப்போகிறோம்? எப்படி சுவாசிக்க போகிறோம்? உயிர்கள் வாழவே முடியாத பூமியில் வளம் எதற்கு? வளர்ச்சி எதற்கு? நீர்வழிப்பாதைகளை அழித்து, மழைநீரை வீணாக்கிவிட்டு, கடல் நீரைக் குடிநீராக்க பல்லாயிரம் கோடிகளைக் கொட்டுவதையும், மரங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைத்து காற்றை மாசுபடுத்திவிட்டு, அதிக விலை கொடுத்து நல்ல காற்றை வாங்குவதையும் வளர்ச்சி எனக் கட்டமைப்பது அறிவுக்குப் புறம்பானது என்பதை என்றைக்கு நாம் உணரப்போகிறோம்? வளமாக வாழ்வதை விடவும் நலமாக வாழ்வது முக்கியம்! வசதியாக வாழ்வதை விடவும்; நிம்மதியாக வாழ்வது முக்கியம்! நம்மை வாழ வைப்பதாக நாம் நம்பும் சாமிகள் கூட ஆயிரம் உண்டு; ஆனால் நாம் வாழ்வதற்கான பூமி ஒன்றுதான் உண்டு என்ற உண்மையை என்பதை உணர்ந்து.., நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்! வருங்காலத் தலைமுறைக்கு வாழ்வளிப்போம் என உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதியேற்போம்! – செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி #WorldEnvironmentDay
12
620
1,188
8,793
The Sri Lankan racist state must immediately release singer Sangeethsan who has been arrested under the Prevention of Terrorism Act! The arrest of our beloved brother, Hip Hop Sangeethsan, by the Sri Lankan racist state under the Prevention of Terrorism Act — for expressing through his songs the Tamil Eelam homeland, the glorious history of its liberation struggle, the martyrs who sacrificed their lives for the homeland’s freedom, and the cultural greatness of the Tamil people — is strongly condemnable. The Sri Lankan government, which arrogantly boasted that it had completely eradicated terrorism, is now terrified of a single individual’s song even years after the armed struggle has fallen silent. If singing a song in a temple is considered deadly terrorism, how can Tamils live in peace under the Sri Lankan state? Is honouring the valour of our departed ancestors and remembering their sacrifices considered terrorism? Is this what Marx and Engels taught the Janatha Vimukthi Peramuna (JVP) government, which calls itself a communist government under Anura Kumara’s leadership? Is this the path shown to them by Che Guevara, Fidel Castro, Lenin, and Ho Chi Minh?If Tamils remembering their liberation struggle ancestors is terrorism, then is the JVP remembering its own leaders who were hunted down and massacred by previous Sri Lankan governments also terrorism? Or not?Is this the ethnic harmony and national unity practised by the JVP government, which claims to follow leftist ideology? The arrest of Thambi Sangeethsan has torn off the mask of the JVP party, which has been practising racism for decades under a leftist guise. This arrest once again reveals to the world that the events conducted by the JVP government — such as permitting remembrance on Maaveerar Naal (Martyrs’ Day) — were all mere dramas, and that no matter which government comes to power in Sri Lanka, it will not deviate even an atom from Sinhalese racist policy. What answer will the international countries, which once destroyed the armed Tamil liberation struggle claiming it was an obstacle to peace, give now? Is this degraded condition of the Tamil people the “peace” that the world countries desired? If even singing a song is treated as an act of terrorism under the Prevention of Terrorism Act, how can Tamils ever live together with Sinhalese? The United Nations and the international community must now recognise the racist, monstrous face of Sri Lanka and stand in support of the Tamil people’s liberation. Tamil Members of Parliament in the Sri Lankan Parliament must raise their voices demanding the release of Thambi Sangeethsan.There is no greater racist atrocity than preventing people from honouring their own ancestors. There is no worse form of slavery than denying permission for arts, including songs, by labelling them as terrorism.Therefore, I strongly demand that the Sri Lankan racist state immediately release Thambi Sangeethsan, who has been arrested under the Prevention of Terrorism Act.
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் தம்பி சங்கீத்சன்னை இலங்கை இனவாத அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! ஈழத்தாயகம் பற்றியும், வீரம் செறிந்த அதன் விடுதலைப் போராட்ட வரலாறு பற்றியும், தாயக விடுதலைக்கு தங்கள் இன்னுயிர் ஈந்த மாவீரர்கள் பற்றியும், தமிழர் பண்பாட்டு பெருமைகள் குறித்தும் தன் பாடலின் மூலம் வெளிப்படுத்திய அன்புத்தம்பி ஹிப்ஹாப் சங்கீத்சன்னை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் இலங்கை இனவாத அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பயங்கரவாத்தை முற்று முழுதாக அழித்து முடித்துவிட்டோம் என்று கொக்கரித்த இலங்கை அரசு, ஆயுதப்போராட்டம் மௌனித்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தனிமனிதனின் பாடலைக் கண்டு பயப்படுவது ஏன்? கோயிலில் பாட்டு பாடுவதெல்லாம் கொடிய பயங்கரவாதம் என்றால் இலங்கை அரசின் கீழ் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதெப்படி? மறைந்த தங்கள் முன்னோர்களின் வீரத்தை போற்றுவதும், ஈகத்தை நினைவுகூர்வதும் பயங்கரவாதமா? கம்யூனிச அரசாங்கம் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அனுரா குமரா தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனா அரசிற்கு இதைத்தான் மார்க்சும், ஏங்கல்சும் கற்பித்தார்களா? இதுதான் சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும், லெனினும், ஹோசிமின்னும் தங்களுக்கு காட்டிய வழியா? தமிழர்கள் தங்கள் விடுதலை போராட்ட முன்னோர்களை நினைவுகூர்வது பயங்கரவாதம் என்றால், கடந்த காலங்களில் முந்தைய இலங்கை அரசுகளால் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட தங்கள் கட்சியின் முன்னவர்களை ஜெவிபி நினைவுகூர்வது பயங்கரவாதமா? இல்லையா? இடதுசாரி தத்துவத்தை ஏற்றுள்ளதாக கூறிக்கொள்ளும் ஜெவிபி அரசு கடைப்பிடிக்கும் இன நல்லிணக்கம் இதுதானா? ஏற்படுத்தியுள்ள இன ஒற்றுமை இதுதானா? இடதுசாரி போர்வையில் காலங்காலமாக இனவாதத்தையே கடைப்பிடித்து வரும் ஜெவிபி கட்சியின் முகமூடியை தம்பி சங்கீத்சன்னின் கைது கிழித்தெறிந்துள்ளது. மாவீரர் நாளில் நினைவுகூற அனுமதி என்பது போன்று ஜெவிபி அரசு நடத்தியது அத்தனையும் நாடகம் என்பதையும், இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும், அது சிங்கள இனவாத கொள்கையிலிருந்து அணு அளவும் மாறாது என்பதையும் இக்கைது மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்துகிறது. அன்று தமிழர்களின் ஆயுதமேந்திய விடுதலை போராட்டம்தான் அமைதிக்கு தடை என்று அழித்தொழித்த உலக நாடுகள் இப்போது என்ன பதில் கூறப்போகிறார்கள்? தமிழ் மக்களின் இந்த இழிநிலைதான் உலக நாடுகள் விரும்பிய அமைதியா? பாடல் பாடினால்கூட பயங்கரவாதச் சட்டம் என்றால் சிங்களர்களுடன் தமிழர்கள் எப்படி சேர்ந்து வாழ முடியும்? இலங்கையின் இனவாத கோர முகத்தை ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் இப்போதாவாது உணர்ந்து, தமிழ் மக்களின் விடுதலைக்கு துணைநிற்க வேண்டும். இலங்கை நாடாளுமன்றத்தில் தம்பி சங்கீத்சன்னின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். தங்கள் முன்னோர்களை போற்றக்கூடாது என்பதைவிடவும் இனவாதக் கொடுமை வேறில்லை. பாடல்கள் உள்ளிட்ட கலைகளை பயங்கரவாதம் என்றுகூறி அனுமதி மறுப்பதை விடவும் கொடிய அடிமைநிலை வேறு இல்லை. ஆகவே, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தம்பி சங்கீத்சன்னை இலங்கை இனவாத அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
18
662
1,174
15,950
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் தம்பி சங்கீத்சன்னை இலங்கை இனவாத அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! ஈழத்தாயகம் பற்றியும், வீரம் செறிந்த அதன் விடுதலைப் போராட்ட வரலாறு பற்றியும், தாயக விடுதலைக்கு தங்கள் இன்னுயிர் ஈந்த மாவீரர்கள் பற்றியும், தமிழர் பண்பாட்டு பெருமைகள் குறித்தும் தன் பாடலின் மூலம் வெளிப்படுத்திய அன்புத்தம்பி ஹிப்ஹாப் சங்கீத்சன்னை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் இலங்கை இனவாத அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பயங்கரவாத்தை முற்று முழுதாக அழித்து முடித்துவிட்டோம் என்று கொக்கரித்த இலங்கை அரசு, ஆயுதப்போராட்டம் மௌனித்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தனிமனிதனின் பாடலைக் கண்டு பயப்படுவது ஏன்? கோயிலில் பாட்டு பாடுவதெல்லாம் கொடிய பயங்கரவாதம் என்றால் இலங்கை அரசின் கீழ் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதெப்படி? மறைந்த தங்கள் முன்னோர்களின் வீரத்தை போற்றுவதும், ஈகத்தை நினைவுகூர்வதும் பயங்கரவாதமா? கம்யூனிச அரசாங்கம் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அனுரா குமரா தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனா அரசிற்கு இதைத்தான் மார்க்சும், ஏங்கல்சும் கற்பித்தார்களா? இதுதான் சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும், லெனினும், ஹோசிமின்னும் தங்களுக்கு காட்டிய வழியா? தமிழர்கள் தங்கள் விடுதலை போராட்ட முன்னோர்களை நினைவுகூர்வது பயங்கரவாதம் என்றால், கடந்த காலங்களில் முந்தைய இலங்கை அரசுகளால் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட தங்கள் கட்சியின் முன்னவர்களை ஜெவிபி நினைவுகூர்வது பயங்கரவாதமா? இல்லையா? இடதுசாரி தத்துவத்தை ஏற்றுள்ளதாக கூறிக்கொள்ளும் ஜெவிபி அரசு கடைப்பிடிக்கும் இன நல்லிணக்கம் இதுதானா? ஏற்படுத்தியுள்ள இன ஒற்றுமை இதுதானா? இடதுசாரி போர்வையில் காலங்காலமாக இனவாதத்தையே கடைப்பிடித்து வரும் ஜெவிபி கட்சியின் முகமூடியை தம்பி சங்கீத்சன்னின் கைது கிழித்தெறிந்துள்ளது. மாவீரர் நாளில் நினைவுகூற அனுமதி என்பது போன்று ஜெவிபி அரசு நடத்தியது அத்தனையும் நாடகம் என்பதையும், இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும், அது சிங்கள இனவாத கொள்கையிலிருந்து அணு அளவும் மாறாது என்பதையும் இக்கைது மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்துகிறது. அன்று தமிழர்களின் ஆயுதமேந்திய விடுதலை போராட்டம்தான் அமைதிக்கு தடை என்று அழித்தொழித்த உலக நாடுகள் இப்போது என்ன பதில் கூறப்போகிறார்கள்? தமிழ் மக்களின் இந்த இழிநிலைதான் உலக நாடுகள் விரும்பிய அமைதியா? பாடல் பாடினால்கூட பயங்கரவாதச் சட்டம் என்றால் சிங்களர்களுடன் தமிழர்கள் எப்படி சேர்ந்து வாழ முடியும்? இலங்கையின் இனவாத கோர முகத்தை ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் இப்போதாவாது உணர்ந்து, தமிழ் மக்களின் விடுதலைக்கு துணைநிற்க வேண்டும். இலங்கை நாடாளுமன்றத்தில் தம்பி சங்கீத்சன்னின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். தங்கள் முன்னோர்களை போற்றக்கூடாது என்பதைவிடவும் இனவாதக் கொடுமை வேறில்லை. பாடல்கள் உள்ளிட்ட கலைகளை பயங்கரவாதம் என்றுகூறி அனுமதி மறுப்பதை விடவும் கொடிய அடிமைநிலை வேறு இல்லை. ஆகவே, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தம்பி சங்கீத்சன்னை இலங்கை இனவாத அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
9
455
741
23,916