“திருச்சியில் 17 வயது மாணவி பாலியல் வன்கொடுமை” எனும் செய்தியைக் கேட்கும்போதே மனம் நடுங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
ஆளும் அரசின் முதலமைச்சர் உடனடியாகத் தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும். மீண்டும் முந்தைய ஆட்சியை குறை சொல்லி, ஆக்ரோஷமாகப் பேசி மக்களைத் திசைதிருப்பாமல் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துங்கள். ஆரோக்கியமான நடவடிக்கை எடுத்தால் எதிர்க்கட்சி பாராட்டவும் செய்யும்.
குற்றவாளிகள் சட்டத்தின்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மாணவிகள் மற்றும் பெண்களின் வருங்கால நம்பிக்கைக்கும் அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். @Anbil_Mahesh
“பாட்டிலுக்கு 10 ரூபாய் பாடல் மக்களை ஏமாற்ற விஜய் அவர்களால் பாடப்பட்டது..
என்று புதியதாய் வந்திருக்கும் மாற்றம் தரும் அமைச்சர் விளக்கம்.. போதுமா மக்களே மாற்றம்..
#TVKVijayFails
“டிரான்ஸ்பார்மர்”மற்றும் “மின்சார கம்பங்கள்” அருகே நின்று எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மின்சாரம் கிடைக்காமல் தடுக்கும் “திமுக” காரர்கள் தயவு செய்து வீட்டுக்கு செல்லவும்.. இப்படிக்கி “தவெக” மினசார அமைச்சர்… #tvkfails
எலக்ஷனுக்கு முன்பு “தவெக”.. சொன்னது..
மின்வெட்டுக்கு “திமுக” தான் காரணம்..
எலக்ஷன் பின்பும், மின்வெட்டுக்கு “திமுக” தான் காரணம்..
பெண் வன்கொடுமைகளுக்கு இப்பொழுதும் “திமுக” தான் காரணம்..
போதை பொருளுக்கும் அப்படித்தானே..
மாற்றம்.. மக்களுக்கு ஏமாற்றம்.. #tvkfails
பிரச்சாரத்தின்போது பேசியது தற்போது பொருந்திப்போகிறது..
10 நாட்களில் எத்தனை கொலைகள்., எத்தனை சமூக சீர்கேடுகள்.. மக்கள் இனி சிந்திப்பார்கள்.. எத்தனை நல்ல ஆட்சியை வீழ்த்தினோம் என்று.. மீண்டும் கழக ஆட்சி மலரும்.. ஸ்டாலின் வருவார் நல்லாட்சி தருவார்.. @mkstalin@Udhaystalin@Anbil_Mahesh
“கருப்பு” திரைப்பட விவகாரம் விரைவில் தீர்க்கப்பட்டு படம் வெளியாகும்..
திருட்டுத்தனமாக படத்தை வெளியிடுபர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..
படைப்பளர்களின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள்..
“TASMAC” மட்டும் தான் தமிழ்நாட்டின் தேவையா.. வேறு வேலைகள் நிறைய இருக்கு,, மக்கள ஏமாத்த “ tasmac” அ மட்டும் பிடிச்சி தொங்காதீங்க.. நலத்திட்டங்களுக்கு வாங்க..
இன்று தமிழ்நாட்டின் முதல்வராக பொருப்பேற்றுயிருக்கும் என் அருமை சகோதரரும் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான மாண்புமிகு முதல்வர் திரு, ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அதன் தன்மையை எதற்க்காகவும் மாற்றிக்கொள்ளவில்லை.. வெளிப்படையாக பேசும் அண்ணன் வைகோ, உள்ளதை பேசும் அண்ணன் திருமா, அக்கா பிரேமலதா, அய்யா பாலகிருஷ்ணன் என உண்மை கூட்டணி, மக்களுக்கானது..
Tvk நண்பர்கள் ஆட்சி கணவோடு இருப்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை.. ( புதியவர்கள்)
ஆனால் Tvk வோடு கூட்டணி வைத்து நாங்கள்தான் ஆட்சியை அமைப்போம் என்று சொல்லும் admk நண்பர்களை பார்க்கும்போதுதான் வேதனையாக இருக்கிறது..
இலங்கையில் ஊவா மாகானத்தில் பதுளை மாவட்டத்தில் என் தாயாரின் வீட்டுச்சுவர் தான் இது..
இன்று அதில் ஒரு சிங்கள குடும்பம் வசிக்கிறது..
( அம்மா அவர்களது 12 வயதில் இலங்கையில் இருந்து தமிழ் நாடு வந்துவிட்டார்கள்)
என்னையும் என் அண்ணனையும் அழைத்து சென்று காண்பித்த என் உறவினர் இந்த சுவரைக்காட்டி, இது என் தாத்தா கட்டிய வீட்டின் சுவர் என்றும் இந்த சுவரை இடிக்காமல் அந்த சிங்களவர்கள் வீடு கட்டியதாகவும் சொன்னார்..
(கேட்டதற்கு அவர்கள் சந்த்ததியினர் ஒரு நாள் இந்த வீட்டை பார்க்க வருவார்கள்.. அதனால்தான் இந்த சுவரை மட்டும் இடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள்)
இந்த சுவரைப்பார்க்கும் போது எவ்வளவு வசதியாக,எவ்வளவு பெரிய வீட்டில் வசித்திருப்பார் என் தாயார்.. ஆனால் எந்த ஏழ்மையான சூழளிலும் இதைப்பற்றி ஒரு நாளும் பேசியதில்லை..
(அம்மா அம்மாதான்.. இந்த பிறவியில் என் ஈடு இணையில்லா நேரங்கள் என் தாயோடு வாழ்ந்த நாட்கள்தான்)
அந்த வீட்டை பார்த்துக்கொண்டே வெகு நேரம் நானும் என் அண்ணனும் கண் கலங்கி நின்றோம்.. அன்று கசிந்த கண்ணீரின் ஈரம் மட்டும் இன்றும் காயாமல்..