President of the DMK | Belongs to the Dravidian stock

Joined October 2013
7,256 Photos and videos
108
1,057
2,378
42,851
126
789
1,786
57,766
274
1,447
3,269
61,709
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார். "Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ? இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது. தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்! @KanimozhiDMK @DMKWomensWing
595
2,371
5,627
170,305
தியாகத்தின் திருவுருவான கப்பலோட்டிய தமிழர் அவர்களின் பெயரில் தூத்துக்குடியில் இயங்கி வரும் வ.உ.சிதம்பரம் கல்லூரி பவள விழா காண்கிறது! தென் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உயர்வுக்காக நீங்கள் ஆற்றி வரும் பணி நூறாண்டுகள் தாண்டியும் தொடர வாழ்த்துகிறேன். உங்கள் பணிகளை எடுத்துக்கூறும் நினைவுத் தொகுப்பினை வெளியிட்டதில் மகிழ்கிறேன். @KanimozhiDMK @geethajeevandmk
49
928
2,752
31,000
#குறளிசைக்காவியம் படைத்துச் சாதனை படைத்த நமது @lydian_official, இப்போது #Symphony இயற்றியுள்ளார்! வாழ்த்துகள் இந்த இளைஞனுக்கு - சாதனைகள் இன்னும் பல படைக்கவிருக்கும் திறமைமிகு கலைஞனுக்கு!
57
1,379
5,548
138,306
Warm birthday wishes to RJD National President Thiru. @LaluPrasadRJD. Your consistent defence of secularism and #SocialJustice remains an inspiration to democratic and progressive forces across the country. Wishing you good health and happiness. @yadavtejashwi
103
1,538
8,420
78,130
அண்ணா உருவாக்கிய தாய்க்கழகத்திற்குத் திரும்பி வரும் அனைவரையும் வரவேற்கிறேன்! முன்னாள் அமைச்சர் திரு.பென்ஜமின் அவர்களுக்கு வாழ்த்துகள்!
132
1,335
5,260
89,177
உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்குத் துணையிருப்போம்! ஓராண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை கொடுத்த போது இதயம் கனக்கிறது. உடன்பிறப்புகளே… உங்கள் ஒவ்வொருவருக்கும் - உங்கள் குடும்பத்திற்கும் துணை நிற்க வேண்டியது கழகத்தின் கடமை! ஆனால், அதைவிடப் பெருங்கடமையாக நான் கருதுவது: சாலைப் பயணங்களை நீங்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். உடன்பிறப்புகள் ஒவ்வொருவொருவர் மீது நானும்,உங்கள் குடும்பத்தினரும் வைத்துள்ள நம்பிக்கையைக் காத்து நலமுடன் வாழ வேண்டும்! #DMK4TN
Jun 10
மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் அறிவித்தபடி, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த தேனி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ப.மணிகண்டன், ம.சுகன்யா - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் - தருமபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி. சண்முகம் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த என்.கார்த்திக் ஆகிய 4 குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ.10 இலட்சம் வீதம் மொத்தம் 40 இலட்சம் ரூபாயினை இன்று (10.6.2026) குடும்ப நிவாரண நிதியாக வழங்கினார். இதுவரை 22 கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 கோடியே 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது மதுரையில் 1.6.2025 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்." என்று அறிவித்திருந்தார். அந்த வகையில், விபத்தில் மரணமடைந்த திண்டிவனம், இறையனூரைச் சேர்ந்த திருமதி சரிதா - இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த க.முத்தமிழ்செல்வன் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வே.சரவணன் - திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.விக்னேஷ் - கடலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி - காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.ராம்பிரசாத் - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரண்ராஜ் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரகாசம் - திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.மேகலிங்கம் - சேலம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.முருகன் - விழுப்புரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த மு.இராமதாஸ் - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரவணகுமார், ஈரோடு வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம். லிங்கேஸ்வரன் - மதுரை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த என். திருப்பதி - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.முத்துராஜா - இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நா.மாரிமுத்து - திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி பார்வதி (எ) உஷா - திருப்பூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இ.பரத்குமார் ஆகிய 18 குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியதைத் தொடர்ந்து; தேனி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ப.மணிகண்டன் தனது மனைவி ம.சுகன்யா ஆகியோர், 09.12.2025 அன்று உத்தமபாளையம் - கம்பம் மெயின் ரோடு காக்கில்சிக்கையன்பட்டி பண்டாரம் களம் அருகில் அவர்கள் சென்ற இருசக்கரம் வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்தில் சிக்கியும் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் அவர்கள், கடந்த 20.11.2025 அன்று சென்னிமலையிலிருந்து இரவு பணி முடிந்து வீடு திரும்பும்போது வழியில் சென்னிமலை, பெருந்துறை ரோடு, எஸ்எல்என் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் வரும்போது வேன் மோதி விபத்தில் சிக்கியும் - தருமபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.சண்முகம் அவர்கள், 10.07.2025 அன்று ஓசூருக்கு வேலை செல்வதற்காகபிளப்பநாயக்கஅள்ளி - ஏ.பாப்பாரப்பட்டி ரோட்டில் எட்டியாம்பட்டி ஏரி மதகு அருகே அவர் சென்ற இருசக்கரம் வாகனம் மீது எதிரில் வந்த மினி லாரி மோதி விபத்தில் சிக்கியும் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், வில்வராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த என்.கார்த்திக் அவர்கள், 30.10.2025 அன்று ஜி.எஸ்.டி.சாலை, இருங்குன்றம்பள்ளி பாலாறு பாலம் அருகே அவர் வந்த இருசக்கர வாகனம்மீது அரசு பேருந்து மோதி விபத்தில் சிக்கியும் உயிரிழந்த இந்த 4 குடும்பங்களுக்கும் குடும்ப நிவாரண நிதியாக, தலா ரூபாய் 10 இலட்சத்திற்கான காசோலையினை, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ப.மணிகண்டன் - திருமதி ம.சுகன்யா ஆகியோரின் மகன் எம்.கௌதம் அவர்களிடமும் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் அவர்களின் மனைவி திருமதி ஜி.சவிதா அவர்களிடமும் – தருமபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி. சண்முகம் அவர்களது மனைவி திருமதி எஸ்.நதியா அவர்களிடமும் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த என்.கார்த்திக் அவர்களின் மனைவி திருமதி சபிதா அவர்களிடமும் இன்று (10-06-2026) காலை வழங்கினார்.
86
1,116
3,001
61,047
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்! தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன. அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது. பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்! திரு. பாரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
102
1,587
6,534
108,791
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்! - பேரறிஞர் அண்ணா. நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன். விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்! இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம். நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
232
1,957
5,699
109,587
ஆட்சி அதிகாரம் எந்தப் பக்கம் இருந்தாலும் கொள்கையில் உறுதிமிக்கோர் எப்போதும் தி.மு.க. பக்கம்தான்! தமிழ்நாட்டின் உரிமைகளைத் தி.மு.க.தான் காப்பாற்றும் என்ற உறுதியோடு, செங்கல்பட்டு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. கஜேந்திரன் அவர்கள் தலைமையில் தாய்க்கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவரையும் வரவேற்கிறேன்.
223
1,835
5,666
117,467
தமிழுணர்வும் திராவிட இயக்கப் பற்றும் கொண்டு பெரியாரியப் பாதையில் வாழ்ந்து, நம் உள்ளங்களில் நிறைந்து வாழும் பேராசிரியர் மா. நன்னன் அவர்களது வாழ்விணையர் திருமிகு பார்வதி நன்னன் அவர்கள் மறைந்த துயர்மிகு செய்தி சொல்லொண்ணா வேதனையைத் தருகிறது. அவரது மறைவிற்கு நேரில் சென்று இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்தேன். தமிழுக்கும் திராவிட இயக்கத்திற்கும் பெருந்தொண்டாற்றிய பேராசிரியர் மா. நன்னன் அவர்களது நூல்களைக் கடந்த 2023-ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்தபோது நாட்டுடைமையாக்கி, அதற்கான நூலுரிமைத் தொகையை வழங்கியபோது, பேராசிரியர் நன்னன் அவர்களது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டு அவரோடு உரையாடிய தருணத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். பேராசிரியர் மா. நன்னன் அவர்கள் தொடங்கிவைத்த பணிகளை, இன்றளவும் தொய்வில்லாமல் தொடர்ந்துவரும் அவரது குடும்பத்தினரின் பணி போற்றுதலுக்குரியது. அந்தப் பணிக்குப் பெருந்துணையாக - தூணாக விளங்கிய திருமிகு பார்வதி நன்னன் அவர்களது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தப் பேரிழப்பையும் கடந்து, பேராசிரியர் மா. நன்னன் அவர்கள் தொடங்கிவைத்த பணிகளை, அவரது குடும்பத்தினர் தொடர்வார்கள்; பேராசிரியர் மா. நன்னன் - பார்வதி நன்னன் ஆகியோருக்கு நிச்சயம் புகழ் சேர்ப்பார்கள்.
68
688
2,374
51,349
தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்! "தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்" என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர். பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்!
124
1,659
5,197
100,778
M.K.Stalin retweeted
ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது! அதே நேரத்தில் – இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும். - தலைமைக் கழக அறிவிப்பு #DMK
140
1,169
2,741
66,365
நான் வளர்ந்த - என்னை வளர்த்த அன்பகம் புதுப்பொலிவுடன்🖤♥️ @dmk_youthwing புதுவேகத்துடன் - புதிய இளைஞர்களைக் கொள்கையோடு வளர்த்து, வெற்றியை நமதாக்கட்டும்! @Udhaystalin #KalaignarForever
134
1,654
5,113
69,141
38
495
1,347
25,691
தலைவரின் பிறந்தநாள்! தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!! மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்! என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே… வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது. நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது. உறுதியாய்ச் சொல்கிறோம்… மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்! #KalaignarForever
293
3,491
9,393
109,204
46
1,040
2,697
31,109
35
820
2,020
28,031