Creation

Joined September 2017
156 Photos and videos
இன்று என் பிறந்தநாள் ! வாழ்த்தி அழகாக்கியவர்களுக்கு அன்பும் புன்னகையும் ! நண்பர் இயக்குநர் லிங்குசாமி அருகில் இல்லாமல் என் முக்கிய நாட்கள் சோபிப்பதில்லை ! இன்றும் அப்படியே...நான் வசனம் அமைத்த நண்பர் காமராஜ் மனோன்மணியின் '__________' திரைப்படத்தில் லிங்கு எழுதிய முதல் திரைப்பாடல் நட்பு வட்டாரத்தில் வெகுவாக சிலாகிக்கப்படுகிறது. அபிஷேக் AR இசை ARR தரத்தில் அப்பாடலை நம் இதயத்திற்குள் செலுத்துகிறது... பி.கு:- என் பிறந்தநாளை முதன்முதல் கொண்டாடியது AK, அமர்க்களம் படப்பிடிப்பில்...மறந்தால்தானே நினைப்பதற்கு...!
13
11
60
1,919
Jun 15
தியேட்டரில் தவறவிட்டு Z5 தளத்தில் PATRIOT படம் பார்த்தேன். இயக்குநர் மகேஷ் நாராயணன் DOP மனுஷ் நந்தன் இருவரின் அசுர உழைப்பு ஃப்ரேமுக்கு ஃப்ரேம் தெரிகிறது. என்னா டீடெய்லிங்! ஒரு டேபிள் டிராயர் திறப்பில் சில செகண்டுகள் தெரியும் பொருட்கள் உட்பட! இதுவே இப்படின்னா மம்முக்கா லாலேட்டன் உதாரண கூட்டணியை எப்படி மெருகேற்றியிருக்கிறார்கள் தெரியுமா ?ரேவதி,ராஜீவ்மேனன்,FAFA, குஞ்சாக்கோ, நயன்,தர்ஷனா ஆகியோரின் அபார நடிப்பு , சுஷின் ஷியாமின் மிரட்டல் இசை,உண்மையான பிரமாண்ட தயாரிப்பு என இந்திய சினிமாவின் காலர் உயர்கிறது ! A Real International film ! ஒரு இயக்குநராக நான் கற்றுக் கொண்டது இதில் ஏராளம் ! TAIL PIECE :- சரியான படம் என்றால் சவுண்டே இல்லாமல் பார்த்தால் கூட புரிந்து ரசிக்க கூடியதாக இருக்கும், PATRIOT ம் அப்படியே !
15
173
21,020
Jun 11
நம் பாசத்திற்குரிய பாரதிராஜா மண்வாசனையை ஆழ்ந்து நுகரச் சென்றுவிட்டார்...இனி எப்பிறவியில் இந்த பிறவிக்கலைஞனைக் காண்போமோ ?
1
13
53
2,869
Jun 10
வாழ்க்கைப்பாடம் பற்றி வகுப்பெடுக்கும் என் இனிய தமிழ் மகன் . நறுக்கு தெறிக்கிறது !

5
13
373
Jun 10
மகனைப் பார்க்க போய் விட்டீரோ? அதில் உமக்கு மகிழ்ச்சி , ஆனால் எங்களுக்கு ? இமயம் உருகி நதியாக வந்த நீரைத்தானே நாங்கள் பருகி வளர்ந்தோம் ! எங்களை தாகத்தில் தவிக்க விட்டு சென்று விட்டீரே... ஊற்றுக்கண் மூடியதே நிரந்தரமாக... கலைஞனுக்கு சாவில்லை என்பதே ஆறுதல் ! ஓம் சாந்தி
4
26
78
1,368
தலைமைக்கு எது செய்தால் பிடிக்கும் என்பதை 60 ஆண்டுகளாக அதிகாரி வட்டங்கள்தான் தீர்மானிக்கும். அந்தப் போக்கு மாறப்போவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன ! தேவநேய பாவாணர் நூலக அரங்கில் நடந்த இலக்கிய நிகழ்வில் நானும் இருந்தேன். மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் கலைஞர் 100 நிகழ்வை நினைவு கூர்ந்ததில் அன்பும் மரியாதையும் இருந்ததே தவிர அரசியல் இல்லை ! நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அரசியலிலேயே இல்லை ! கலைஞர் படம் 'யாராலோ' அகற்றப்பட்ட போது பதிப்பாளர் வேடியப்பன்தான் ஆட்சேபம் செய்து மீண்டும் நிறுவச் செய்தார். அரசியலில் நாகரீகம் நுழைவது ' யாருக்கோ ' பொறுக்கவில்லை போலும் ! அவர்கள் நிச்சயம் அரசியல்வாதிகள் இல்லை , அரசாங்கம் மாறும் போதெல்லாம் ஜால்ராக்களை கைமாற்றிக் கொள்ளும் அதிகாரிகள் வர்க்கமா இல்லை டிஆர்பி பசியில் எதிலும் அரசியல் செய்யும் ஒரு சில ஊதுகுழல்களா ? ஆக பிரபலங்கள் உண்மைப் பின்னணியை ஆராய்ந்து கொந்தளிக்கவும் ! ( பி.கு :- நான் அரசியல் பேசவில்லை, அரசியல் பற்றி பேசுகிறேன் என்பதை கவனத்தில் கொள்க )
2
2
10
771
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி 2026 ! சென்ற வருடமும் இந்த வருடமும் என் ஹைக்கூ தேர்வு பெற்றது ஒரு அங்கீகாரம் ! நண்பர் லிங்குசாமியின் பகீரத தவம் இது. துணை தவம் விஷ்ணு அசோசியேட் சிவகுமார் அவர்கள். மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் மந்திரிகர்வம் இல்லாமல் எளிமையாக பழகியதும் புழங்கியதும் ஒரு சோற்று பதம் ! AR முருகதாஸ் , புகாரி அதிபர்,வெண்ணிலா, வேடியப்பன் முக்கியமாக பிருந்தாசாரதி கூட்டணியில் லிங்குவின் ஹைக்கூ ஆட்சி தொடர்கிறது ! வாழ்க கவிக்கோ புகழ் !
1
1
10
333
May 30
அவர் அதிர்ந்து பேசாதவர் ஆனால் அதிரடி மகனைப் பெற்றெடுத்தவர் . அந்த மகனால் முகவரி பெற்ற என்னைப் போன்றவர்களுக்கும் அவரே அன்னை . அறிவான இரு மகன்கள் மேலும் உண்டு .அன்னையின் இழப்பு யாருக்குமே நேரக்கூடாத துயரம் . அவர்தம் ஆன்மா அந்த மூன்று சகோதரர்களுக்கும் இனி இறை சக்தியாக இருந்து வழி காட்டட்டும்...
13
568
2,192
35,184
May 22
Qube cinemas ‘Movie buff’ ல் காதல் மன்னன் - Classic decodes சிறப்பு நேர்காணல் படப்பிடிப்பு ! வினோத் ரவி அவர்களின் இயல்பான ஆழமான வினாக்கள் காதல் மன்னன் படம் உருவான பின்னணியை என்னிலிருந்து கதாசிரிய ரீதியாக தோண்டி வெளிக்கொணர்ந்தன ! இது புதிதாக களம் புகும் இளம் படைப்பாளிகளை ஒருவேளை ஈர்க்கலாம் ! அரிதான புரிதல் மிகுந்த பதிவுக்கு வழிவகுத்தமைக்கும் Qube Cinemas ன் LED Screen ல் நவீன திரையிடல் Demo காண்பித்ததற்கும் என் நன்றி... திரையுலகம் அடுத்த பாய்ச்சலுக்கு தயார் !
3
58
208
8,508
May 20
நம்ம இயக்குநர் மகன் நாம இயக்கிய ஹீரோ இனி தமிழகத்தையே இயக்கப் போவதால் அவரும் ஒரு இயக்குநரே ! வாழ்க, நல்லாட்சி தருக ! ( தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் முதல்வரை சந்தித்த தருணம் )
3
72
630
7,391
May 17
தலைவரே ! தங்களது ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் ஆசிரம சொற்பொழிவு கண்டேன் ! அதில் ஆன்மீக குருவின் குரல் கேட்டேன்...என்னவொரு ஆளுமை,நிதானம்,பக்குவம்! பால்வெளியே உங்கள் மூலம் பேசுவது போல உணர்வு ! கட்சி அறிவித்தபோது கூட முதல்வர் பதவி மற்றொருவருக்கே என அன்றே அறிவித்தவர் நீங்கள் ! போயஸ் தோட்டக் கதவுகள் திறக்கும் போதெல்லாம் தெளிவைத் தெளிக்கிறீர்கள்... கற்பனைகளை எள்ளி நகையாடி விட்டு மூடி விடுகிறீர்கள் ! தமிழர்களின் நான்கு தலைமுறை ஜீன்களில் இருக்கிறீர்கள்...அது போதும் எங்களுக்கு !
2
10
34
911
சதம் அடித்திருக்கலாமே ஆர்.பி.சௌத்ரி ஐயா , ஆயிரக்கணக்கான வீடுகளில் அணையா அடுப்பேற்றினாய் அத்தனை அடுப்புகளையும் அணையா விளக்குகளாக்கி ஆதங்கம் பொங்க அஞ்சலி செலுத்துகிறோம்... ஓம் சாந்தி .
1
4
34
641
அரியணை ஏறிய நட்பு ! வாழ்த்துகள் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு...
4
504
2,239
19,870
Apr 30
அமர்க்களமே ! ஆதர்சமே !ஆண்டவனின் குழந்தையே ! உன் பிறப்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு என்பதை யாமறிவோம்...நீ அறிவாயா?
2
274
731
4,490
Apr 27
கவிப்பேரரசு அவர்களின் புத்தகம் தந்த பொக்கிஷம் இந்த ஏங்கும் காதலனின் உள்ளத்து வலி ! இசையால் பிரித்து மேய்ந்தார் பரத்வாஜ் . அந்த வலியை ஆக்ரோஷமாக்கினார் ஏகே! பாடலின் காட்சி படத்தின் கடைசி ஷாட்டாக கொச்சி போர்ட்டில் எடுக்கப்பட , வாழ்வில் இனி இணைவோமா என்று கண்ணீருடன் அன்று ஏகேவை பிரிந்தார் ஷாலினி! ஏகே விடுவாரா என்ன?!
1
157
500
5,505
SARAN retweeted
Relive the magic of a timeless love story. ❤️✨ #Amarkalam Now Showing at our @Gopuram_Cinemas! Book Your Tickets Now 🎟️ - t.ly/ORFTb Experience it with Laser Projection and Dolby ATMOS🔊 #AjithKumar #ShaliniAjithKumar @Saran_director @BharadwajRamani #GopuramCinemas #AmarkalamReRelease #NowShowing
84
231
2,376
SARAN retweeted
Once more… and the magic still hits the same ❤️🔥 #AjithKumar #ShaliniAjithKumar @shaliniajithkumar2022 Celebrating the iconic Satham Illatha Thanimai from Amarkalam on the big screen with pure theatre vibes! 🎬✨ Whistles, cheers & goosebumps—this is not just a song, it’s an emotion that never fades 🙌💫 #TheatreCelebration #Amarkalam @dirsaran @sparrow_cinemas @Vairamuthu @SureshChandraa @DoneChannel1
2
351
1,165
10,414
Apr 26
நண்பர் இயக்குநர் ஹோசிமின் டிசைன் செய்து அனுப்பியிருந்தார். சினிமாவுக்குள் சில டிரெண்டுகளை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். இன்றைய சுஜாதா போல தோன்றுகிறார்.குருநாதர் ஷங்கர் பெருமைபடக் கூடிய சிஷ்யன்!
4
169
579
5,139
SARAN retweeted
Running Successfully 🔥 Ajith and Shalini on screen… memories in our hearts 💫 🎟️ Now in theatres across Tamil Nadu ❤️🔥 🎞️ Entire Tamil Nadu theatrical release by @sparrow_cinemas Karthick.V #Amarkalam #AjithKumar #Shalini #InTheatres #4KReRelease
110
336
3,059