*RTI (Right To Information)-ஆ அல்லது RTDI (Right To Deny Information)-ஆ?*
டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான UPA அரசாங்கம் 2005-ல் கொண்டுவந்த, *குடிமக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடவும், ஊழலைக் கட்டுப்படுத்தவும், அதிகாரத்தில் இருப்பவர்களைப் அவர்களின் தவறுகளுக்கு பொறுப்பேற்கச் செய்யவும் அதிகாரம் அளித்த* ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை மோடி அரசாங்கம் தவிடுபொடியாக்கி, அந்த சட்டத்தை செல்லாததாக்கிவிட்டது.
முதலில் *Digital Personal Data Protection Act, 2023 (டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம்)*, ஒப்பந்தக்காரர்கள், மற்றும் *ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர்கள் உட்பட அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் வெளியிடுவதைத் தடுத்து*, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கடுமையாகப் பலவீனப்படுத்தியது.
அடுத்து, சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட *SHANTI* மசோதாவின் 39வது பிரிவின் கீழ் *கட்டுப்படுத்தப்பட்ட தகவல் (restricted information)* எனக் கருதப்பட வேண்டிய தகவல்களை அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்து, அத்தகைய தகவல்களை வெளியிடுவது தொடர்பான தடைகளையும் இது விதிக்கிறது. அதுமட்டுமின்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-இன் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிடுவதையும் இது தடை செய்கிறது.
*இது தகவல் அறியும் உரிமைச் சட்ட கட்டமைப்பை முற்றிலுமாக அழித்துவிட்டது.*
*அரசாங்கத்தை பொறுப்பேற்க வைப்பதற்காக குடிமக்களின் ஒரு கருவியாகத் கொண்டுவரப்பட்ட சட்டம் ஒன்று, கேள்விகளைக் கண்டு அஞ்சும் கோழைத்தனத்தனத்தின் உச்சமான RSS-BJP-ன் ஆட்சியால் வெளிப்படைத்தன்மையின்மைக்கான மற்றொரு கருவியாக மாற்றப்பட்டுள்ளது.*
#RTI #Selvaperunthagai #tnccwarroom