ரயில் தண்டவாளங்களில் உள்ள W, W/L, மற்றும் W/B பலகைகள் எதைக் குறிக்கின்றன தெரியுமா? 🛤️🤔
இந்திய ரயில்வேயில் ரயில்களைப் பாதுகாப்பாக இயக்குவதற்கு சிக்னல்களும், அறிவிப்புப் பலகைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தண்டவாளங்களின் ஓரத்தில் மஞ்சள் நிறப் பலகைகளில் 'W', 'W/L' என்று எழுதப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதற்கான அர்த்தம் என்னவென்று பார்ப்போம்...
Follow us 𝕏 | ⓕ
@TNRailinfo
W (Whistle): ஒரு சிறிய மஞ்சள் நிற சதுரப் பலகையில் 'W' என்று மட்டும் எழுதப்பட்டிருந்தால், அது 'விசில்/ஹார்ன் அடி' (Whistle) என்பதைக் குறிக்கும். இதைக் கண்டவுடன் லோகோ பைலட்டுகள் (ரயில் ஓட்டுநர்கள்) ஹார்ன் அடிக்க வேண்டும்.
W/L (Whistle for Level Crossing): ஆங்கிலத்தில் 'W/L' என்பது முன்னே ரயில்வே கேட் (Level Crossing) வருவதைக் குறிக்கிறது.
கேட்டைச் சுற்றியுள்ள மக்களை எச்சரிக்கவும், விபத்துகளைத் தவிர்க்கவும் பைலட்டுகள் இந்தப் பலகையைக் கண்டவுடன் தொடர்ந்து ஹார்ன் அடிக்க வேண்டும். இந்தப் பலகைகள் பொதுவாக ரயில்வே கேட்டிற்கு சுமார் 600 மீட்டருக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும்.
W/B (Whistle for Bridge): இதேபோல, பாலங்கள் (Bridges) வருவதற்கு முன்பாக 'W/B' என்ற பலகை வைக்கப்பட்டிருக்கும். இதைக் கண்டவுடன் பைலட்டுகள் ஹார்ன் அடித்தவாறே பாலத்தைக் கடப்பார்கள்.
#IndianRailways #RailwayFacts #WBoard #WLBoard #LevelCrossing #LocoPilot #TamilNaduNews #TNRailwayUpdates #DidYouKnow #TrainKnowledge
#Whistle #விசில்