Joined June 2010
244 Photos and videos
Pinned Tweet
30 Aug 2025
அண்ணான்னு அன்போட அழைச்சாலே வருவார் கேக்காம குறையெல்லாம் நிறையாக்கி தருவார் தொண்டர்கள் தலைவர்கள் ஆகத்தான் நெனைப்பார் சொல்லோட நிற்காத செயல்வீரர் இவர்தான்!! ❤️❤️❤️
20
4,516
16,264
359,030
Rajmohan retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
5,216
23,376
83,372
3,441,414
RT @AadhavArjuna: தமிழ்நாட்டில் இன்று காலை உருவாகும் 'மாற்றத்திற்கான புயல்' நாள் முழுவதும் வீறு கொண்டு வீசும்! சரியாக, மாலை 7 மணிக்கு 'தேர்…
4,217
21
ஸ்ரீரங்கம் என்றாலே அமைதிக்கும் பக்திக்கும் பெயர் பெற்ற ஊர். ஆனால், இன்று அங்கு அநீதி தாராளமாகத் தாண்டவமாடுகிறது. தம்பி ரமேஷ் @RameshOffcl அவர்களின் அலுவலகம் இன்று வெறும் சாம்பல் மேடாகக் கிடக்கிறது. இது ஒரு தனிநபரின் சொத்து அல்ல; ஒரு உழைப்பாளியின் கனவு ! ஒரு இளம் சமூகப் போராளியின் தளம் வஞ்சகத்தால் சுட்டெரிக்கப்பட்டிருக்கிறது ! ஒரு எளிய வீட்டு பிள்ளையின் அலுவலகம் முழுமையாகக் கொளுத்தப்பட்டுள்ளது! தம்பியின் அடையாளங்களாக இருந்த பேனர் பதாகைகள் கிழித்து எறியப்பட்டுள்ளன.. இது ஒரு கேவலமான கோழைத்தனமான தாக்குதல் !! குற்றவாளியின் அடையாளங்கள் மிகத்தெளிவாக CCTV கேமராக்களில் பதிவாகியுள்ளது. அந்த ஆதாரங்கள் அனைத்தும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டாகிவிட்டது. ஆனால், விடிய விடிய தம்பி ரமேஷ் ஒவ்வொரு அரசு அலுவலகத்தின் வாசலிலும் நீதிக்காகக் காத்து நிற்கிறார். காலை முதல் இரவு வரை அலைந்து களைத்துப் போயிருக்கும் ஒரு இளைஞனுக்குத் அதிகாரிகளால் தரப்படும் பதில் என்ன? ஆதாரங்கள் கையில் இருந்தும், குற்றவாளியைக் கைது செய்ய ஒரு அடி கூட முன்வைக்காதது ஏன்? யாருக்காக இந்த ஓரவஞ்சனை? ஒரு சாதாரண குடிமகனுக்கு ஒரு நியாயம், அதிகார பலம் கொண்டவர்களுக்கு ஒரு நியாயமா? இந்த மெத்தனப் போக்குக்குப் பின்னால் எந்த "மாண்புமிகு" இருக்கிறார்? யாருடைய அழுத்தம் காவல்துறையின் கைகளைக் கட்டியிருக்கிறது? குற்றவாளியைப் பாதுகாப்பதன் மூலம் நீங்கள் எதைச் சாதிக்கப் போகிறீர்கள்? இன்று தம்பி ரமேஷுக்கு நேர்ந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அந்தச் சட்டம் இப்போது எங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது? "நீதி தாமதிக்கப்படுவது என்பது நீதி மறுக்கப்படுவதற்குச் சமம்." - ராஜ்மோகன், துணைப் பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்
156
1,677
5,563
185,302
Rajmohan retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம். எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்?. நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் கானும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று நம் மக்களே அறிவர். மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கா அடிபணிவான்?. திசைதிருப்பல் முதலீட்டுக் கழகங்களின் நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் குனிந்து கூழைக் கும்பிடா போடுவான்?. ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிடவும் முடியாது. அதிகாரங்களை ஏவி உங்கள் சகோதரனை மிரட்டி விடவும் இயலாது. இறைவன் அருளால் இயற்கையின் துணையுடன் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர் சக்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் உலகெங்கும் உள்ள நமது தோழர்களின் பேராதரவுடன் முதன்மை அரசியல் சக்தியாகக் களத்திற்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தமிழக மக்கள் நலன் சார்ந்த நோக்கத்தையும் அதன் தாக்கத்தையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்பதை வரும் தேர்தலில் நம் மக்களே அவர்களுக்கு சரியான பாடம் புகட்டி உணர்த்துவர். நம்மை எள்ளி நகையாடியக் கூட்டம் மட்டுமன்று, இந்த நாடே அறியும், அளக்கமுடியாத ஆழ்கடல் - விலக்க முடியாத விரிவானம் த.வெ.க என்று. நேர்மையின் நெருப்புக்கோளம் - மக்களின் நெஞ்சில் நீக்கமறக் குடியிருப்பது த.வெ.க என்று. சமூகநீதிக் காவலரண் - ஜனநாயகப் பேரரண் த.வெ.க என்று. இப்படிப்பட்ட த.வெ.கவை ஊழல் விஷ சக்திகளாலா வீழ்த்த முடியும்?. பாசிச சக்திகளாலா பகைவெல்ல முடியும்?. மக்களே…மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும் இத்தனை நிர்பந்தங்களையும் இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான். எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை ‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை. இப்போதும் சொல்வேன். எப்போதும் சொல்வேன். உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த ‘மற்றும் பலர்’ சக்தியாலும் பிரிக்கவே இயலாது. அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி. பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும். ஆகவே, எப்போதும்போல அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் – லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, நீங்கள் அனைவரும் திருவிழாக் கோலம் பூண்டு, விசில் புரட்சிக்குத் தயாராகி, குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்க வேண்டிய, எவ்வித மறுசிந்தனைக்கும் இடம் தராத ஒற்றைத் தேர்வாக “விசில் சின்னம்” மட்டுமே இருக்க வேண்டும் என உங்களை இருகரம் கூப்பி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். வாகை சூடுவோம். வரலாறு படைப்போம். வெற்றி நிச்சயம்..
1,985
11,470
29,579
1,104,245
எல்லா ஆயுதங்களும் சோடை போன பிறகு, அவதூறை மட்டுமே நம்பியுள்ளது ஒன்றியத்தை ஆளும் பாஜக. திரு பியூஷ் கோயல் அவர்களின் கருத்துகள் தவறானது மட்டுமல்ல நகைப்புக்குரியது. இதில் சிறப்பு என்ன என்றால், தங்களின் கூட்டாளி என்று சொன்னால் தமிழ்நாட்டில் அது அவமானம் என்று அவர்களுக்கேத் தெரிந்திருக்கிறது. அதனால் அவர்களின் கள்ளக் கூட்டணியோடு சேர்த்து வைத்து அவதூறு பரப்புவதா? உங்களின் கற்பனைகளை பார்த்து 'யாருமே இல்லாத கடைக்கு யாருக்கு டீ ஆத்துறீங்க ?' என கேட்க தான் தோன்றுகிறது. அதனால், குறைவாய் நகைச்சுவை செய்யுங்கள் அமைச்சரே. கொஞ்சநஞ்ச ஓட்டுக்களையும் இழந்துவிடாதீர்கள். கடைசிவரை உங்களுக்கு தமிழ்நாட்டை தெரியாது. தமிழ் நாட்டிற்கும் உங்களை தெரியாது. ஆனால் இந்தியத்துணைக்கண்ட வரலாற்றிலேயே முதல் மாநாட்டிலேயே கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என்று அடையாளம் காட்டிய ஒரே கட்சி தமிழக வெற்றிக்கழகம் என்பது உலகத்திற்கே தெரியும். இது இளைஞர் படை என்ற இரும்பு இதயங்களாலும், இணையப்படை என்ற போர் வீரர்களாலும் காக்கப்படும் குடும்பம். ஒன்றிய அமைச்சரின் இத்தகைய அவதூறுகள் வெறும் 'புஸ்வானம்' போன்றது. மக்களின் பேராதரவு எனும் ஆழிப்பேரலைக்கு முன்னால், இத்தகைய சிறுபிள்ளைத்தனமான பொய்ப் பிரச்சாரங்கள் செல்லுபடியாகாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். ராஜ்மோகன் துணைப் பொதுச் செயலாளர் தமிழக வெற்றிக் கழகம்
60
946
2,253
58,816
முக்கிய அறிவிப்பு : பொய் செய்திகளைப் புறக்கணிப்போம்! நமது கழகத்தின் அசுர வளர்ச்சியைக் கண்டும், மக்களிடையே நமக்குக் கிடைத்து வரும் பேராதரவைக் கண்டும் அச்சமடைந்துள்ள அறிவாலய வட்டாரம், திட்டமிட்டே கழகத்தின் மீது சேறு பூசும் வேலைகளில் இறங்கியுள்ளது. குறிப்பாக, அடுத்தடுத்து அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளை (Fake News) சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரப்பி வருகின்றனர். சில ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் உண்மையை ஆராயாமல், ஒருதரப்பு தரும் தவறான தகவல்களை அப்படியே செய்திகளாக வெளியிட்டு வருவது தவறு. ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், இது போன்ற உள்நோக்கம் கொண்ட பொய்ப் பிரச்சாரங்களுக்குத் துணை போக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். வெற்றிக் கழக கண்மணிகளே.. வெற்றிக் கழகத்தின் உண்மையான போர்வீரர்களான நீங்கள், இது போன்ற மலிவான அரசியலால் உங்கள் கவனம் சிதற இடமளிக்காதீர்கள். இத்தகைய சலசலப்புகள் நமது பயணத்தின் வேகத்தைக் குறைக்க எடுக்கப்படும் முயற்சிகள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். மக்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தோழர்களே, தொடர்ந்து மக்களுக்கான பணிகளில் கவனம் செலுத்துங்கள். எவை உண்மை, எவை ஜோடிக்கப்பட்ட பொய்கள் என்பதைப் பிரித்தறியும் தெளிவு தமிழக மக்களுக்கு நன்கு உண்டு. அரசியல் ரீதியாக எங்களை எதிர்கொள்ளத் திரணியற்றவர்கள் நடத்தும் இந்த "Fake News Factory" (பொய் செய்தித் தொழிற்சாலை) மீது விரைவில் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டத்தின் வாயிலாக இத்தகைய அவதூறுகள் முடக்கப்படுவது உறுதி. பொய் செய்திகளைப் புறக்கணிப்போம்! நீதி வெல்லும்! வெற்றி நிச்சயம்! ராஜ்மோகன் துணைப் பொதுச் செயலாளர் தமிழக வெற்றிக் கழகம்
447
2,333
5,368
245,264
Rajmohan retweeted
#TVKElectionCampaignSong — Out Today at 6 PM.
214
2,399
6,725
268,025
வில்லிவாக்கம் TVK பொதுக் கூட்டத்தில் பெண்கள் மீது பாட்டில் வீச்சு! எறியப்பட்ட பாட்டில்கள் எங்களின் இலட்சியத்தை ஒருபோதும் சிதைக்க முடியாது : மாற்றுக் கருத்துக்களை நேருக்கு நேர் சந்திக்கத் துணிவில்லாத கோழைகள் மட்டுமே, கூட்ட நெரிசலைப் பயன்படுத்திப் பின்புறமிருந்து தாக்குதல் நடத்துவார்கள். பொதுக்கூட்டங்களில் வன்முறையை ஏவி விடுவது எந்த விதத்தில் நியாயம்? மேடைகளில் பேசுவதற்குப் பதில், வீதிகளில் பாட்டில்களை வீசுவதுதான் உங்கள் அரசியலா? இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் மூலம் தொண்டர்களை அச்சுறுத்தி விடலாம் என்று யாராவது நினைத்தால், அது அவர்களின் அறியாமையே தவிர வேறில்லை. தமிழகத்தின் அமைதியான அரசியல் சூழலைச் சீர்குலைக்கத் துடிக்கும் இத்தகைய திமுக சமூக விரோத சக்திகளை தேர்தல் ஆணையம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். காவல்துறையினர் வேடிக்கை பார்க்காமல், இந்த வன்முறைக்குப் பின்னால் இருக்கும் மூளை எது? யாருடைய தூண்டுதலில் இந்த அராஜகம் அரங்கேறியது? என்பதை உடனடியாகக் கண்டறிந்து அவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும். சட்டத்தின் பிடியிலிருந்து ஒருவனும் தப்பக்கூடாது. இனியும் இதுபோன்ற சகிப்புத்தன்மையற்ற செயல்கள் தொடருமானால், தகுந்த பதிலடி கொடுக்கத் தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள். வன்முறை அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் வரும் காலங்களில் தக்க பாடம் புகட்டுவார்கள். எறியப்பட்ட பாட்டில்கள் எங்களின் இலட்சியத்தை ஒருபோதும் சிதைக்க முடியாது. ஜனநாயகக் களத்தில் நேர்மையாக மோதத் துணிவில்லாதவர்கள், இனி அரசியலை விட்டே ஒதுங்குவதுதான் அவர்களுக்கு அழகு! ராஜ்மோகன் துணைப் பொதுச் செயலாளர் தமிழக வெற்றிக் கழகம்
246
2,073
4,808
87,851
#UnfairelectioninTN என்ன நடக்கிறது?? தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகியும், சில அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டு, பெரும்பான்மையான பல முக்கிய அதிகாரிகளை மாற்றம் செய்யப்படவில்லை. உள்துறை உள்ளிட்ட மிக முக்கியப் பொறுப்புகளில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான அதிகாரிகளே நீடிக்கிறார்கள். இனி அவர்கள் மாற்றப்பட்டாலும், நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஏப்ரல் 2-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலினின் பிரச்சாரம் மார்ச் 31-க்கே மாற்றப்பட்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் (வெற்றித் தலைவர்) பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டால், மக்கள் அலை அவருக்குப் பின்னால் இருப்பது தெரிந்துவிடும் என்பதால் அதற்கு முன்னதாகவே ஸ்டாலின் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறார். தவெக-வுக்கு முன்னால் திமுக வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் நாடகமே இது. இதைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. பரப்புரை அனுமதி முதல் வேட்புமனுத் தாக்கல் வரை எதையும் நேர்மையாக நடைபெற விடாமல் தடுக்க திமுக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு இன்று நடக்கும் நிகழ்வுகளே சாட்சி. ஆளும் காபந்து திமுக அரசும், அவர்களுக்கு ஆதரவான சில அதிகாரிகளும் இணைந்து செய்யும் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். ராஜ்மோகன் துணைப் பொதுச் செயலாளர் தமிழக வெற்றிக் கழகம்
272
2,121
4,911
173,246
Rajmohan retweeted
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும். நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?? இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!
1,778
10,017
19,985
1,922,874
Rajmohan retweeted
தமிழகத்தின் அடையாளமான அண்ணா பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ஒருவர் மாணவிக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார், மிகுந்த அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. தொடர்ச்சியாக இத்தகைய பாலியல் குற்றங்கள் நிகழ்வது தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்புச் சூழல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் மாடல் ஆட்சியில் உயர்கல்வி நிறுவனங்கள் கூடப் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற இடங்களாக மாறிவருவது வெட்கக்கேடானது. ஏற்கனவே 2024 டிசம்பரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகும், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் திமுக அரசு தவறியது ஏன்? தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கோவி.செழியனின் நேரடிப் பார்வையில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தில், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதற்கு அவர் பதில் கூற வேண்டும். தொடர்ந்து பலமுறை, பேராசிரியர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாக, மாணவி புகார் கூறியிருக்கிறார். இதனால் வேறு மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனரா என முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தி, உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு, தமிழக காவல்துறைக்கு உள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மாணவி மற்றும் அவரது வகுப்பு மாணவியர் அனைவரிடமும், ரகசியமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அனைத்து மாணவிகளுக்கும், பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். 2024ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளானபோது காவல்துறை செய்த தவறுகளை, மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். முதலமைச்சர் அவர்களே! விளம்பரப் படங்களிலும், ஸ்டிக்கர் ஒட்டுவதிலும் காட்டும் கவனத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் காட்டுங்கள். குற்றச்சாட்டுக்கு ஆளான அந்தப் பேராசிரியர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
31
1,224
2,520
45,363
Rajmohan retweeted
தலைநகரிலேயே தலைவிரித்தாடும் அரிவாள் கலாச்சாரம் - திமுக காபந்து அரசின் நிர்வாகத் தோல்வி! தன் தங்கையை கேலி செய்த கும்பலை தட்டிக்கேட்ட அண்ணன் மற்றும் தந்தை மீது, ஒரு கும்பல் அரிவாளால் வெறித்தனமான தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய திமுக அரசு, விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு, களத்தில் மக்களைக் காக்கத் தவறிவிட்டது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த 'விடியா அரசு' போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவை இன்று ரத்தச் சகதியில் மக்கள் அனுபவித்து வருகின்றனர். காவல்துறையின் கைகள் அரசியல் தலையீடுகளால் கட்டப்பட்டிருப்பதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாகப் பேசப்பட்ட தமிழகக் காவல்துறை, இன்று ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாற்றப்பட்டிருப்பது வேதனையானது. பெண்களுக்குப் பாதுகாப்பு, சமூக நீதி என்று மேடைக்கு மேடை முழங்கும் இந்த திமுக அரசு, ஒரு பெண்ணைக் கேலி செய்தவர்களைத் தட்டிக்கேட்ட குடும்பத்திற்கே பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில் இருப்பது வேடிக்கையாக உள்ளது. இதுதான் உங்கள் 'திராவிட மாடல்' ஆட்சியா? சாமானிய மனிதன் தன் குடும்பத்தைப் பாதுகாக்க வீதியில் இறங்கினால், அவனுக்கு அரிவாள் வெட்டுதான் பரிசா? முதலமைச்சர் அவர்கள் வெறும் புகைப்படங்களுக்குப் போஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டு, சென்னை மாநகரத்தின் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, சென்னையில் நிலவும் அரிவாள் கலாச்சாரத்தை ஒடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க முடியாத இந்த அரசுக்கு மறக்க முடியா பாடத்தை மக்கள் விரைவில் உணர்த்துவார்கள்.
34
1,204
2,510
45,467
Rajmohan retweeted
இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார். தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி.
2,400
12,166
29,181
2,676,313
தன் திமுக எஜமானர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, மாற்றுக் கருத்து கொண்ட பெண்களை 'விபச்சாரி' என்று பொதுவெளியில் சாடியிருக்கும் பொன்ராஜ் என்பவரின் செயல், அவரது கீழ்த்தரமான மனநிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே... பெண்களை இப்படி இழிவாகப் பேசச் சொல்லி நீங்கள்தான் ஏவிவிட்டீர்களா? அறிவாலயம் என்ன செய்தாலும் தமிழகப் பெண்களின் வாக்கு வங்கியைத் தங்கள் பக்கம் திருப்ப முடியவில்லை என்ற ஆதங்கத்தில், பொன்ராஜ் போன்றவர்கள் மூலம் இத்தகைய கேவலமான வார்த்தைகளை மீது வீசுவதா? வாக்களிப்பது என்பது ஒரு பெண்ணின் அடிப்படை ஜனநாயக உரிமை. தனக்குப் பிடிக்காத கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்பதற்காக, பெண்களைப் பொதுவெளியில் 'விபச்சாரி' என்று இழிவாகப் பேசுவது, ஒட்டுமொத்தத் தமிழகப் பெண்களின் முகத்தில் காறி உமிழும் செயலாகும். இத்தகைய நாவடக்கமற்ற நபர்கள் சமூகத்தில் உலவுவது ஆரோக்கியமான அரசியலுக்கு விடப்பட்ட சவாலாகும். பெண்களை இழிவாகப் பார்க்கும் இவரது வக்கிர புத்தி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! தன்னுடைய அருவருக்கத்தக்கப் பேச்சிற்குப் பொன்ராஜ் நிபந்தனையற்ற முறையில், பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், பெண்களின் மாண்பைக் குலைத்ததற்காகவும், ஆபாசமாகப் பேசியதற்காகவும் அவர் மீது காவல்துறை கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைக்க வேண்டும். இதுபோன்ற திமுக விஷமிகளுக்குச் சரியான பாடம் புகட்டாவிடில், அரசியலில் நாகரிகம் என்பது கானல் நீராகிவிடும். பொன்ராஜ் போன்ற அரசியல் தரகர்களை ஊடகங்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்! ராஜ்மோகன் துணைப் பொதுச் செயலாளர் தமிழக வெற்றிக் கழகம் #RespectTamilWomen #ShameOnDMK
276
2,774
5,719
231,375
Rajmohan retweeted
தமிழகப் பெண்களுக்கு எதிராக அறிவாலயத்தின் கைக்கூலி பொன்ராஜை ஏவிவிட்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா? பெருமதிப்பிற்குரிய தமிழகப் பெண்களை 'விபச்சாரிகள்' என்று கொச்சைப்படுத்துவது, பெண்களை இழிவுபடுத்தும் அருவருக்கத்தக்கச் செயலும், அநாகரீக அரசியலின் உச்சமுமாகும். இது பேச்சுரிமை அல்ல—தேர்தல் தோல்வி பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு முதலமைச்சரின் தூண்டுதலின் பேரில், தமிழகப் பெண் வாக்காளர்களைக் கண்ணியத்துடன் எதிர்கொள்ளத் திராணியின்றி, நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது வீசப்பட்ட அருவருக்கத்தக்க அவதூறு. பதவி விலகப்போகும் ஒரு முதலமைச்சரின் பயம் இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழகப் பெண்களுக்குத் தேவை மரியாதை, உங்களது அருவருப்பான வசவுகளல்ல. மாற்றுக் கருத்து கொண்ட பெண்களை 'விபச்சாரி' என்று பொதுவெளியில் சாடியிருக்கும் பொன்ராஜ் என்ற இழிபிறவியின் செயலுக்கு உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்! #RespectTamilWomen #ShameOnDMK
118
2,261
4,227
75,765
Rajmohan retweeted
அதிகார மிரட்டலுக்கு இரையாகிறதா ஏழை எளியோரின் உயிர்? திண்டுக்கல் நத்தம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரி ஒன்றில், ஒரு இளைஞரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டிருக்கும் செய்தி கேட்டு நெஞ்சம் பதறுகிறது. ஒரு உயிர் மர்மமான முறையில் போயிருக்கிறது... அதுவும் மிகக் கொடூரமான முறையில்! அந்த இளைஞரின் குடும்பத்தினர் இன்று நீதி கேட்டு கல்குவாரியை முற்றுகையிட்டுள்ள காட்சிகள், சாமானிய மக்களின் வேதனையை உரக்கச் சொல்கின்றன. இந்த கல்குவாரி, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி அவர்களின் மகனுக்குச் சொந்தமானது என்று சொல்லப்படும் நிலையில், இந்த விவகாரம் வெறும் விபத்தாகவோ அல்லது தற்கொலையாகவோ கடந்து போகப்படக்கூடாது. அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் இடங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கும்போது, உண்மைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கேள்விக்குறியாகும் பாதுகாப்பு: * அந்த இளைஞர் எப்படி இறந்தார்? * பாதுகாப்பு விதிமுறைகள் அங்கே பின்பற்றப்பட்டதா? * அல்லது அதிகார மிரட்டலால் ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டதா? * அழுகிய நிலையில் உடல் மீட்கப்படுகிறது என்றால், அங்கே மனித உயிர்களுக்கு எவ்வித மதிப்பும் இல்லையா? * மரணம் நிகழ்ந்தும் அது வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டதா என்கிற சந்தேகம் எழுகிறது. மகனை இழந்து தவிக்கும் அந்தப் பெற்றோரின் கண்ணீருக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை இந்த அரசுக்கும், காவல்துறைக்கும் இருக்கிறது. குற்றவாளிகள் எப்பேர்ப்பட்ட பின்புலத்தைக் கொண்டிருந்தாலும், அவர்களுக்குப் பின்னால் எந்த 'திமுக கரைவேட்டி' இருந்தாலும், சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் திமுக பதில் சொல்லாது, ஆனால் மக்கள் திமுகவிற்கு தேர்தலில் பதில் சொல்வார்கள்
23
1,681
3,026
62,486
Rajmohan retweeted
733
7,044
18,719
1,162,703
Rajmohan retweeted
இதயங்களில் ஏந்தி, தங்கள் இல்லங்களின் மகனாக எண்ணி இசுலாமியச் சொந்தங்கள் காட்டும் பேரன்பே - நம் தலைவர் விஜய் அவர்களின் தலைமைக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கும் அசைக்க முடியாத அச்சாணி!
55
2,036
4,935
90,560