விசித்திரமான அனுபவமான்னு தெரில, ஆனா இத படிக்கிறவங்களுக்கு கண்டிப்பா வேடிக்கையான அனுபவத்தை குடுக்கும்னு நம்புறேன்.
சிரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் :)
ஸ்கூல்லயும் சரி, காலேஜ்லயும் சரி , எனக்கு இந்த பிட் அடிக்கிறதுக்கு,
காபி அடிக்கிறதுக்குலாம் சுத்தமா தைரியமே இல்லீங்க.
பரிட்சை ஹாலுல பின்னாடி உக்காந்திருக்க நண்பன் ஆன்சர் கேட்டாலும் எனக்கு நேக்கா சொல்லவும் தெரியாது. அப்படி ஒரு பயந்தான் கொள்ளி நான்.
ஆறாவது படிக்கிறப்போ அரையாண்டு விடுமுறை முடிஞ்சு திரும்ப ஸ்கூலுக்கு போன முதல் நாள் முதல் பீரியட்ல எல்லா பாடத்தோட திருத்திய அரையாண்டு விடைத்தாள்களை குடுத்தாங்க.
கிளாஸ் டீச்சர் ரேங்க் போடுறதுக்கு முன்னாடியே நல்லா படிக்கிற பசங்க எங்களுக்குள்ளயே டோடல் போட்டு நாங்களே யார் யார் என்னென்ன ரேங்க்னு கண்டுபுடிச்சிடுவோம்.
அப்படி நாங்களே ரேங்க் போட்டு முடிச்சதுக்கு அப்பறம், ஒவ்வொரு சப்ஜெக்ட்லயும் யாரு டாப்பர் னு எங்களுக்குள்ள டிஸ்கஷன் ஓடுச்சு.
கணிதத்துல யாரு டாப்பர் னு பேச்சு வந்தப்போ தான் என்னோட என்ட்ரி அதாவது ஹீரோ என்ட்ரி.
95 மார்க்ஸ் வாங்கியிருந்தேன்.
எங்க பசங்களுக்கு என்னப்பத்தி நல்லா தெரியும், எப்படி எனக்கு காபி அடிக்க வராதோ அதே மாதிரி Mathsஉம் வராதுன்னு.
அப்டி இருக்குறப்போ இவன் எப்படி டாப்பரா வந்தான்னு எல்லாருக்கும் ஆச்சர்யம்.
பேப்பர் eh குடுடானு வாங்குனானுங்க.
மோத பக்கம் சூஸ் தி கரெக்ட் ஆன்ஸர்லயே 5 தப்பு.
அடுத்த பக்கம் 2 மார்க் கொஸ்டின் ல 2 தப்பு.
டோடல் பண்ணி பாத்தா 95 வருது, எல்லாருக்கும் செம ஷாக், ஆச்சர்யம் எப்படினு .
என்னடா பண்ணணு கேட்டானுங்க ,அப்போ தான் என்னோட யுக்தியை சொன்னேன்.
எனக்கு கரெக்ட்னு தெரிஞ்ச ஒரு 2 மார்க் கொஸ்டின்க்கு விடைத்தாளுல மூணு வெவ்வேறு எடத்துல கொஸ்டின் நம்பர போட்டு ஆன்சர் எழுதி வச்சிட்டேன்.
வாத்தியாரும் திருத்தி மார்க் போட்டுட்டாரு.
300 பேப்பர் திருத்துற வாத்தியாருக்கு கண்டிப்பா எத்தனை தடவ எழுதிருக்கேன்னு யோசிக்கவோ பாக்கவோ டைம் இருக்காது.
பிட் அடிக்கிறது
காபி அடிக்கிறதுல ரிஸ்க் இருக்கு ,
இதுல ரிஸ்க் சுத்தமா இல்லனு சொன்னேன்.
இத கேட்டதும் பசங்க ஆடி போய்ட்டானுங்க, காபி அடிக்க கூட தெரியாத இவனுக்கா இவ்வளவு திறமைனு ஆடிபோய்ட்டானுங்க.
நானும் கெத்தா எதையோ சாதிச்ச பீல் ல வீட்டுக்கு போய்ட்டேன்.
இப்போ தான் கதைல பெரிய ட்விஸ்டு.
அடுத்த நாள் காலைல வழக்கம் போல ஸ்கூலுக்கு போனேன்,First Period நடக்குறப்போ சி செக்ஷன் பையன் கிளாஸ்க்குள்ள வந்து "Excuse Sir,Our Maths sir is calling A Bharath Kumar னு சொன்னான்".
எனக்கு உள்ளுக்குள்ள ஒரு சந்தோசம் ,Mathsல கிளாஸ் Topper eh வந்ததால பாராட்ட கூப்பிடறாரு போலன்னு நெனச்சுட்டு நானும் போனேன்.
புன்னகை பூத்துக்கிட்டே உள்ள நொழஞ்சேன்.நொழஞ்ச அடுத்த வினாடி இடியுடன் கூடிய பலத்த மழை,அப்படி ஒரு தாக்குதல் எனக்கு நடந்துச்சு .ஏன் சார் அடிக்கிறீங்க னு கேக்க கேக்க அடி பின்னி எடுத்துட்டாரு .அப்பறமா அவர் கை வலிச்சு ரெஸ்ட் எடுக்குறப்போ தான் சொன்னாரு,
ஏன்டா இப்டி ஒரு கேள்விக்கு மூணு எடத்துல ஆன்சர் எழுதி என்னையே ஏமாத்திட்டல,
சொன்னப்போ அந்த கிளாஸ் பசங்க என்ன ஹீரோ ரேஞ்சுக்கு பாத்தானுங்க.அப்புறம் சாரே,போடா கிளாஸ்சுக்கு அனுப்பிவிட்டாரு.
நானும் ஒன்னும் நடக்காத மாதிரி என் கிளாஸ்சுக்கு போய்ட்டேன்.
இன்டெர்வல் பிரேக் ல பசங்க என்னடா ஆச்சுன்னு கேட்டானுங்க.
"துரோகிகளா எவனோ ஒரு எட்டப்பன் என்ன போட்டு குடுத்துட்டான்,
சார் அடி பின்னிடார்"னு சொன்னேன்.
எல்லாரும் சிரிக்க ஆரமிச்சிட்டானுங்க.
இந்த சம்பவத்துக்கு அப்புறம் எங்க ஸ்கூல்ல எல்லா ஆசிரியர்களும்,திருத்திய விடைத்தாள்களை பல முறை பரிசோதனை செய்த பின்னே மாணவர்களுக்கு வழங்க ஆரம்பித்தனர்.
ஆனா விதை நான் போட்டது...