Access நிகழ்ச்சித்திட்டத்தின் 22 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக, Access முன்னாள் மாணவர்களை ஒரு மாநாட்டிற்காக காலியில் ஒன்றுகூட்டினோம்!
இவ்வலையமைப்பினை விரிவுபடுத்துவதற்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், மற்றும் இந்நிகழ்ச்சித் திட்டம் தொடர்ந்தும் நல்ல பலன்களை அளிப்பதை உறுதி செய்வதற்கும், நாடு முழுவதிலுமிருந்து முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்தனர். இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, எமது முன்னாள் மாணவர்கள் அஹங்கமவில் அமைந்துள்ள ஒரு ஆரம்பப் பாடசாலை வகுப்பறையினை, Freedom250 எனும் தொனிப்பொருளைக் கொண்ட சுவரோவியங்கள் மற்றும் நன்கொடையாக வழங்கப்பட்ட ஆங்கில மொழிப் புத்தகங்களுடன், ஒரு ஊக்கமளிக்கும் ஆங்கில மொழி செயற்பாட்டு அறையாக மாற்றியமைத்தனர்.
அமெரிக்கத் தூதரகத்தின் Access நிகழ்ச்சித்திட்டமானது, பரஸ்பர செழிப்பினை மேம்படுத்தி, அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை பலப்படுத்துகின்ற நீடித்த தொடர்புகளை உருவாக்கும் வகையில், இளம் இலங்கையர்களிடையே ஆங்கில மொழித் திறன்களையும், தலைமைத்துவ வாய்ப்புகளையும் விருத்தி செய்வதில் முதலீடு செய்துள்ளது.