இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச் செயலாளர், புரட்சித்தமிழர், அண்ணன் திரு.
@EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க,
ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம்,
சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப்பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தோம்.
மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO), கணக்கீட்டுப் படிவங்களை வீடு வீடாக வழங்க செல்லும் பகுதிகளை, வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு (BLA2) முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும்,
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (BLO) வாக்காளர்களுக்கு வழங்கப்படும் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பின், சில பகுதிகளில் ஆளும் கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்களால் (BLA2) பெறப்பட்டு வருவதை முற்றிலும் தவிர்த்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (BLO) மட்டுமே மீண்டும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் கோரிக்கையாக மனுவில் தெரிவித்தோம்.
உடன் முன்னாள் அமைச்சர்கள் திரு.
@kckaruppannan, திரு.A.K.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு.
@ABannari , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.S.தென்னரசு மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.