~
நான் வெறும் மண். என் அலைகள் அவளைப் போல்
பரிபூரணம் கொண்டவை.
இப்போதைக்கு சலம்பிக்
கொண்டிருக்கிறது. பின்னர்
கொதித்தெழும், கொஞ்சும்,
சபலம் துடைக்கும், தோல்
சாயும், சண்டையிடும். இந்த
மண்ணாங்கட்டியைக் கரைப்பதும்
அவளே, உருவாக்குவதும் அவளே
மண்ணாங்கட்டிகள் கொடுத்து
வைத்தவர்கள்.