Joined August 2019
2,128 Photos and videos
Pinned Tweet
80s Kids இதை உணரத்தொடங்கி இருப்பார்கள் என நினைக்கிறேன் - அவர்கள் வளரும் காலத்தில் பார்த்து வியந்த, கைதட்டி ஆரவாரம் செய்த, தங்கள் மனங்களில் தனியறை ஒதுக்கி தங்க வைத்து மகிழ்ந்த ஆளுமைகளும் பெரியவர்களும் ஒவ்வொருவராக இவ்வுலகிலிருந்து விடை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இங்கு யாரும் நிரந்தரம் இல்லைதான். ஆனால், ஒரு கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது - விடை பெற்றவர்கள் இந்த உலகுக்கு தந்த பரிசுகளை, பொக்கிஷங்களை நீட்டிக்க அடுத்த தலைமுறையில் ஆட்கள் உருவாகிவிட்டார்களா?!
8
31
131
8,581
2026 வெள்ளை அறிக்கை குறித்த பதிவு #1 2021ல் திமுக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் இருந்த ஒரு வரி - "This leaves Tamil Nadu in an unsustainable fiscal situation" (பக்கம் 8). 2026ல் தவெக அரசின் வெள்ளை அறிக்கையில் உள்ள ஒரு வரி - "The inescapable conclusion is that the current fiscal trajectory is unsustainable" (பக்கம் 39). இரண்டு அறிக்கைகளிலும் பொதுவாக உள்ள சொல், நாம் கவனிக்கவேண்டிய சொல் - "unsustainable". (தொடரும்)
1
1
51
"லஞ்சம் >> No லஞ்சம்" நிலை 2024ல் திமுக அரசு கட்டுமான ஒப்புதல்களுக்கு ஆன்லைன் வழியே Single Window System கொண்டு வந்தது. இதன் மூலம் 3500 சதுர அடி வரையிலான built-up area உள்ள கட்டிடங்களுக்கு ஆன்லைனிலேயே ஒப்புதல் பெற முடியும். எந்த அதிகாரியையும் சந்திக்க வேண்டியதில்லை, லஞ்சம் தர அவசியம் இல்லை. (குறிப்பு: இன்னும் பெரிய அளவு கட்டிடங்களுக்கு அதிகாரிகளை சந்திக்கத்தான் வேண்டும்). கட்டுமான தொழிலில் இருக்கும் என் மாமா சொன்ன விவரம் - * Single Window System வருவதற்கு முன் 1000 சதுர அடி வீட்டுக்கு ஒப்புதல் பெற அரசுக்கு ₹35000, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் ₹10000 என ₹45000ல் முடிந்தது. * ஆனால், Single Window System வழியே ஆன்லைனில் அரசுக்கு மட்டுமே ₹66000 கட்டவேண்டி இருக்கிறது. அதாவது, லஞ்ச நடைமுறையை விட லஞ்சத்தை தவிர்க்கும் நடைமுறை பொதுமக்களுக்கு 50% அதிக செலவை ஏற்படுத்தி உள்ளது. இப்படி ஒரு நிலை இருந்தால், லஞ்சத்தை ஆதரிக்கும் மனப்பான்மைதானே வளரும்?! 🤔
6
18
887
ஒரு பக்கம் குறிப்பிட்ட மதுக்கடைகள் மூடப்படும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் Elite பார்கள் முளைப்பதாக பேசிக்கொள்கிறார்கள். ஒரே நேரத்தில் குடிமக்கள், "குடி"மக்கள் - இரு தரப்பினருக்கும் திருப்தி.
1
6
17
313
என்ன சொல்றாருன்னா - "நாங்க live-in relationshipல இருக்கோம், ஆனால் கல்யாணம் பண்ணிக்கல". அரசியலில் மேற்கத்திய தனிமனித கலாச்சாரத்தை கொண்டுவந்த புரட்சி கூட்டணி 😜
5
8
24
673
திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் Party Fund, "M" Fund (Minister Fund) என இரண்டு "நிதி" வகைகள் உண்டு என்பது பரவலான பேச்சு. முன்பு திமுகவும் அதிமுகவும் எதிர்க்கட்சியாக இருந்தபோது அப்போதைய ஆளுங்கட்சியை "Collection, Commission, Corruption" ஆட்சி என குற்றம்சாட்டியவைதான். இப்போது தவெக அமைச்சர்கள் வெளிப்படையாகவே "Party Fund, M Fund தரவேண்டியதில்லை" என பேசும்போது, திமுகவோ அதிமுகவோ "அப்படி எந்த Fundம் எங்கள் ஆட்சியில் கிடையாது" என மறுத்து பேசாதது/பேச முடியாதது ஏன்?! தவெக மீது பல்வேறு விமர்சனங்கள் வைத்தாலும், ஊழல் என்ற புள்ளியில் தங்களை கொஞ்சம் கூட தூய்மையாக காட்டிக்கொள்ள முடியாத நிலையில் திமுகவும் அதிமுகவும் இருப்பது தவெகவின் மிகப்பெரிய பலம்.
16
16
111
19,129
உண்மையை சொல்லவேண்டும் என்றால், தவெக அரசின் சாதாரண செயல்பாடுகள் கூட "ஆஹா ஓஹோ" என பெரிதாக காட்டப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் விஷயங்களையும் ஏதோ தவெக அரசு கொண்டு வந்த புதுமை போல் காட்டுகிறார்கள். இது மக்களுக்கு சலிப்பும் அயற்சியும் தரக்கூடியது. அந்த கோபத்தைக் காட்ட அவர்கள் யாருக்கு வாக்களிப்பது? அந்த எதிர்ப்பு வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்யும் அளவுக்கு இன்று தயாராக உள்ள கட்சி எது?!
5
13
31
2,475
நேற்று ஒரு உணவகத்தில் அரசு ஊழியர் ஒருவரும் அவர் நண்பரும் பேசியதை கேட்க நேர்ந்தது. நண்பர்: இந்த நெல் கொள்முதல் இடங்கள்ல மூட்டைக்கு ₹40 வாங்குறது எதுக்கு? அரசு ஊழியர்: லோடு ஏத்தி இறக்குற லோடுமேன்களுக்குதான் நண்பர்: கவர்மெண்ட் loading, unloadingக்கு பணம் கொடுக்கறதில்லையா? அரசு ஊழியர்: கவர்மெண்ட் ஒரு டன்னுக்கு ₹20 கொடுக்கும். ஒரு டன்னுன்னா 1000 கிலோவாச்சே. இங்கே 7லேர்ந்து 10 லோடுமேன் வரை அந்த லோடு இறக்கி ஏத்துவாங்க. அந்த பணம் எப்படி பத்தும்? மேலும், அந்த அரசு ஊழியர் சொன்னது - இந்த டெண்டர்ன்னு போடுறாங்களே, லாரி லோடு அடிக்க கிலோமீட்டருக்கு ₹5, ₹6ன்னு போடுறாங்க. எப்படி கட்டுப்படியாகும்? நாம தனியா கார் எடுத்திட்டு வெளியூர் போனாலே கிலோமீட்டருக்கு குறைஞ்சது ₹8 போடுறான். இப்படி இருந்தா அவன் வேற வழியிலதான் பணம் தேத்த பார்ப்பான். இதெல்லாம் இங்கே இருக்க எல்லாருக்கும் தெரியும். சும்மா பூசி மொழுகிட்டு இருக்காங்க.
3
33
127
23,041
2006ல் கலைஞர் "இலவச டிவி" தேர்தல் வாக்குறுதி தந்தார். அது அப்போதைக்கு trend setting வாக்குறுதி. அடுத்து 2011ல் கலைஞர் "இலவச மிக்ஸி, கிரைண்டர் - இரண்டில் ஒன்று" என வாக்குறுதி தர, அம்மா "இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி" என வாக்குறுதி தந்தார். இரண்டு பக்கமும் மாறி மாறி இலவச லிஸ்ட் பெரிதானது. இருபுறமும் இலவச மழை என்றானதால், அப்போது சோ துக்ளக்கில் இப்படி எழுதினார் - "இந்த தேர்தலில் இலவசம் Irrelevant ஆகிவிட்டது". அப்படித்தான், சமீப வருடங்களில் திமுக பெரியாரை முன்னிறுத்தி தனித்துவமாக காட்டியது. "திமுக vs பிஜேபி" என்ற narrativeக்கும் அது துணையாக இருந்தது. இப்போது தவெகவும் அதே பெரியாரை கொள்கைத் தலைவர் என்று சொல்லி (அவரது கொள்கைகள் எதையும் பேசவில்லை என்பது வேறு விஷயம்), ஆட்சியையும் பிடித்துவிட்டதால் பெரியார் factorஐ Irrelevant ஆக்கிவிட்டார்கள்.
2
11
39
4,630
தமிழ்நாட்டில் சமீப வருடங்களில் பல்வேறு கதைகள் உலாவி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் வருகை குறித்த அறிவிப்புகள் இரண்டு பேருக்கு மட்டுமே உரியது - 1. ரஜினி 2. விஜய் இவர்களுக்கு இணையாக தன்னை ராகவா லாரன்ஸ் நினைத்துக்கொண்டரா என தெரியவில்லை. அரசியல் அறிவிப்புக்கு நாள் குறிப்பது, அறிவிப்பு வீடியோவில் ட்விஸ்ட் வைப்பது என கொஞ்சம் அலப்பறையாக தெரிகிறது. அரசியலைப் பொறுத்தவரை ராதாரவி, வாகை சந்திரசேகர், SS சந்திரன் போன்றோரின் வரிசையில் நிற்கவேண்டியவர் லாரன்ஸ்.
10
12
60
8,659
theAnalyst retweeted
Replying to @tn2point0
அந்த தொடரில் மயில் உடனான காதலை சொல்லும் போது,0 அல்லிநகரத்து ராஜகோபுர வீதிகளில் ஒரு குட்டி மயில் என் கண்களில் மின்னலை பாய்ச்சிவிட்டு செல்கிறது. ராஜகோபுரமா? அல்லிநகரத்திலா? ஒ.. குட்டிச் சுவர்களைக்கூட கோபுரமாக்கியது அந்த குட்டி மயில் தானோ! எனச் சொல்லி இருப்பார்.
1
1
4
531
பாரதிராஜா பற்றி மற்றுமொரு நினைவலை - 1990களின் மத்தியில் ஜூனியர் விகடனில் "காதல் படிக்கட்டுகள்" என்றொரு கட்டுரைத் தொடர் வெளிவந்தது. காதல் பற்றிய பார்வையை, தங்கள் காதல் அனுபவங்களை பிரபலங்கள் பகிர்ந்து கொண்ட தொடர் அது. அதில் பாரதிராஜா தன் இளம் வயது காதல்களைப் பற்றி சொல்லியிருப்பார். அவர் பால்பாண்டியாக இருந்தபோது மயிலையும் (பெயர் மாற்றியிருந்தார் என நினைக்கிறேன்), பின்னர் சின்னசாமியாக குயிலையும் காதலித்ததாக சில சம்பவங்களோடு எழுதியிருந்தார். எத்தனையோ பிரபலங்கள் தங்கள் காதல் படிக்கட்டுகளைப் பற்றி சிலாகித்து எழுதியிருந்தாலும், இன்னமும் மனதில் தங்கியிருக்கும் ஒரு சில கட்டுரைகளில் ஒன்று பாரதிராஜாவினுடையது. அதற்கு முக்கிய காரணம் அந்தக் கட்டுரையின் கடைசி வரிகள். அந்த வரிகளை என் ஞாபகத்தில் பதிந்த அளவில் இங்கே தருகிறேன் (சொற்களில் சிற்சில மாற்றங்கள் இருக்கலாம்) - "என் அந்திம காலத்தில் மரணப்படுக்கையில் இருக்கும்போது என்னைச் சுற்றி சில முகங்கள் இருக்கவேண்டும் என்பது என் ஆசை. மயிலே, குயிலே - வருவீர்களா அப்போது?!"
3
11
71
9,565
"தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படை காரணம் போதைப்பொருள் நடமாட்டம். போதைப் பொருள், பெண்களுக்கு உள்ள பாதுகாப்பின்மை, சட்டம் ஒழுங்கு - இவை interlinked. இது பல வருடங்களாகவே இருக்கின்றது" - முதலமைச்சராக விஜய்யின் பேச்சு. இது பல வருடங்களாகவே இருக்கும் ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினை என்றால், அரசியலுக்கு வருவதற்கு முன் விஜய் இதைப் பற்றி எவ்வளவு தீவிரமாக குரல் கொடுத்தார்? போதைப்பொருளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க விழிப்புணர்வு முயற்சிகளையோ, தொடர்ச்சியான சமூக அழுத்தத்தையோ உருவாக்கினாரா? குறைந்தபட்சம், இளைஞர்களையும் பெண்களையும் சீரழிக்கும் ஒரு பிரச்சினை என்று கருதியிருந்தால், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தளபதியாக "லியோ" படத்தில் (2023) நடிப்பதையாவது தவிர்த்தாரா?! வணிகத்துக்காக "லியோ தாஸ்" ஆக இருந்தது ஒரு பக்கம்; ஆட்சி அதிகாரம் வந்த பிறகு "போதைதான் காரணம்" என்று பேசுவது இன்னொரு பக்கம். இதில் எது உண்மையான அக்கறை, எது சூழ்நிலைக்கேற்ற பேச்சு என்பதே கேள்வி.
2
28
50
1,923
பாரதிராஜா & ரஜினி ❤️
1
363
1,534
24,448
பாரதிராஜா என்றதும் என் நினைவுக்கு வரும் முதல் விஷயம் - 1980களில் அவரது படங்களுக்கான ஆடியோ கேசட்களில் அவரது உரை இருக்கும். கேசட்டின் ஆரம்பத்தில் தன் கணீர் குரலில் "என் இனிய தமிழ் மக்களே, நான் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன்" என்று தொடங்குவார். ஒவ்வொரு பாடலுக்கும் சிறிய முன்னுரை தருவார். "மண் வாசனை", "வேதம் புதிது", "முதல் மரியாதை", "கடலோர கவிதைகள்", "கிழக்கு சீமையிலே" - இவை மறக்கமுடியாத படங்கள். பாடல்களுக்காக மனதில் தங்கிவிட்ட படங்கள் என "நாடோடி தென்றல்", "கருத்தம்மா", "தாஜ் மகால்" ஆகியவற்றை சொல்வேன். "ஆய்த எழுத்து" படத்தில் மூன்று ஹீரோக்களைத் தாண்டி மனதில் பதிந்த வில்லன் பாரதிராஜா. சமீப காலங்களில் அவரது குணச்சித்திர பாத்திரங்கள் சில நெகிழச் செய்தன. தமிழ் பற்று என்ற கோணத்தில் அவர் ரஜினியுடன் நடத்திய Off-screen மோதல்களால் அவ்வப்போது கொஞ்சம் கோபம் உண்டு. என்றாலும், இருவரும் நண்பர்கள் என்பதால் அது கரைந்துவிடும். இந்த மண்ணின் வீரத்தையும் ஈரத்தையும் திரையில் பதிவிட்ட இயக்குனர் இமயத்திற்கு அஞ்சலி.. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
2
32
105
3,432
1950களில், 60களில் இருந்த காங்கிரஸ்காரர்கள் இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்களாக மதிக்கப்பட்டவர்கள். அதனாலேயே பல மாநிலங்களில் காங்கிரஸின் ஆட்சி மக்களின் இயல்பான தேர்வாக இருந்தது. காலப்போக்கில் இந்த "இயல்பான தேர்வு" காங்கிரஸுக்கு தந்த இறுமாப்பு, அவர்களிடம் "மக்களுக்கு நாம் சேவை செய்கிறோம்" என்ற எண்ணத்தை குறைத்து "மக்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள நம்மிடம் வருகிறார்கள்" என்ற எண்ணத்தை அதிகரித்தது. 1967ல் இங்கே காங்கிரஸ் தோற்றதற்கு அந்த மனப்பான்மையும் ஒரு காரணம். காங்கிரஸை வீழ்த்திய திமுக சாமானியர்களின் கட்சியாகவே ஆட்சியை தொடங்கியது. அதன்பின் 1977ல் ஆட்சிக்கு வந்த அதிமுகவும் அப்படியே தொடங்கியது. ஆனால், பிறகு மாறி மாறி ஆட்சிக்கு வந்து பழகியதால் இரண்டு கட்சிகளிலுமே முன்பு காங்கிரஸில் இருந்த அதே மனப்பான்மை வளர்ந்து நன்றாகப் பற்றிக்கொண்டது. "இந்த மக்களுக்கு நம்மை விட்டால் வேறு வழியில்லை" என்ற எண்ணம் இந்த கட்சியினரிடம் ஆழமாக வேரூன்றிவிட்டது. அந்த எண்ணத்தின் விளைவு அவர்களது நடவடிக்கைகளில் பிரதிபலித்தது. திறந்த மனதோடு யோசித்தால், இந்த உண்மையை திமுகவோ அதிமுகவோ மறுக்கமுடியாது. "தவெக உருப்படியான அரசியல் செய்யவில்லை, விஜய் பல இடங்களுக்கு பிரச்சாரத்துக்கே செல்லவில்லை, தவெக வேட்பாளர்கள் யார் என்றே தெரியவில்லை, கரூர் சம்பவத்துக்கு விஜய் சற்றும் பொறுப்பேற்கவில்லை" - இப்படி தவெகவுக்கு பல குறைகள் இருந்தும், தேர்தல் முடிவில் திமுகவும் அதிமுகவும் பின்னுக்குப் போனதற்கு மேலே சொன்ன அந்த மனப்பான்மையும் அணுகுமுறையும் ஒரு முக்கியமான காரணம். திருத்திக்கொள்ளாவிட்டால், அவர்களது இருப்பே கேள்விக்குறியாகிவிடும்.
2
13
43
1,558
தவெக ஆட்சிக்கு வந்து நாளையுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. ஒவ்வொரு துறையிலும் சரிசெய்ய வேண்டிய முதல் மூன்று (Top 3) பிரச்சினைகளை அந்தந்த துறையின் அமைச்சர்கள் அடையாளம் கண்டுவிட்டார்களா?!
1
9
21
333
"சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" - தனிப்படை, சிறப்பு இலச்சினை, சிறப்பு சீருடை, தனி வாகனம் என தனித்த அம்சங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில், இந்தப் படை பேசுபொருளாகும். அரசு பெண்கள் பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகள் எடுப்பதாக ஒரு அபிப்ராயம் உருவாகும். இதன் வழியே அரசு ஒரு Positive Perceptionஐ உருவாக்கிக் கொள்ளமுடியும் என்பது புரிகிறது. ஆனால், உண்மையிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்க எந்த அளவுக்கு இந்தப் படை உதவும் என்பது பற்றி இப்போதைக்கு தெளிவில்லை. காரணம் - ஏற்கனவே இருக்கும் காவல் படைகள் (அனைத்து மகளிர் காவல் நிலையங்களும்) செய்யாத எந்தெந்த செயல்பாடுகளை இந்தப் படை செய்யும் என புரியவில்லை.
14
32
981
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீது இரண்டு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. "House tresspass, Voluntarily causing hurt by dangerous weapons" என்று ஒரு வழக்கும் "Culpable homicide not amounting to murder" என்று ஒரு வழக்கும் உள்ளன. இவற்றை அவரது தேர்தல் affidavit சொல்கிறது. பொதுவாக, தங்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவானால் அந்த அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வழக்கை சந்தித்துவிட்டு பின்னர் நிரபராதி என தீர்ப்பு வந்தபின் பதவி ஏற்பார்கள். அதுதான் குறைந்தபட்ச தார்மீகம். போன ஆட்சியில் செந்தில் பாலாஜி ED வழக்கில் ஜாமீனில் வந்தபோது உடனடியாக மீண்டும் அமைச்சராக்கப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டதும் அந்த தார்மீக கோணத்தில்தான். பின்னர் உச்சநீதிமன்றம் கண்டித்ததால் அவர் பதவி விலக நேரிட்டது. பதவியேற்றபின் பதியப்பட்ட வழக்கு என்றால் கூட "பழிவாங்கும் செயல்", "காழ்ப்புணர்ச்சி" என சொல்லலாம். ஆனால், ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் உள்ள ஒருவரை மாநிலத்தின் நிதியமைச்சர் ஆக்கி அழகு பார்க்கிறார் விஜய். இந்த செயல் தனது கொள்கைத் தலைவர்கள் என விஜய் சொல்லும் அம்பேத்கருக்கும் காமராஜருக்கும் செய்யும் ஆகப்பெரிய அவமரியாதை. இந்த லட்சணத்தில் இவர்கள் தூயசக்தியாம்...
77
112
2,221
பெரிய கல்லூரியில் அட்மிஷன் கிடைத்தும், நடிப்புக்காக படிப்பை உதறிய ஒருவரிடம் தலைமையைத் தேடி முதலமைச்சராக கண்டிருக்கிறது தமிழ்நாடு. நல்லவேளை, இதைப் பார்க்க காமராஜர் இல்லை.
1
22
73
1,128