அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரர் கோவில் (Thread):-
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் தென்கரையில் அமைந்த அழகிய ஊர் திருவிரிஞ்சிபுரம்.
அங்கு சுமார் 1300 ஆண்டுகள் பழமையான கோவில் உள்ளது,
இதன் புராணப்பெயர்கள்
#திருவிரிஞ்சை #கரபுரம் தேவாரப்பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பினை உடையது.
'திருவாரூர் தேர் அழகு திருவிரிஞ்சை மதிலழகு’
என்பது சொல் வழக்கு.
வேலூர் மாவட்டத்தில்
சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ வடக்கில் அமைந்துள்ளது,அருகிலேயே அழகிய பாலாறு அமைந்துள்ளது.
இறைவன் : மார்க்கபந்தீஸ்வரர்,
மார்க்கசகாயர், வழித்துணைநயினார்.
இறைவி : மரகதாம்பிகை.
தல மரம் : பனை மரம்.
தீர்த்தம் : பாலாறு, சிம்மதீர்த்தம்.
இத்தலம் மிக்க பழமையான தலம்.
அடி முடி காணும் போட்டியில் பொய் கூறிய பிரம்மாவின் தலை கொய்யப் பட்டவுடன்,
அவர் இறைவியை வேண்ட இறைவி இத்தலத்து இறைவனை நோக்கி தவமியற்ற பிரம்மனுக்கு அறிவுரை வழங்கினார்.
பிரம்மனும் இறைவனை நோக்கி தவமியற்ற பிரம்மனின் சாபம் போக்க பிரம்மனை மனிதனாய் பிறக்க வைக்கிறார் இறைவன்.
பிரம்மன் சிவசர்மன் என்ற பெயரில் கோயில் அந்தணருக்கு குழந்தையாய் பிறக்கிறார்.
சிறுவனாக இருக்கும் போதே தன் தந்தையை இழக்கிறார் சிவசர்மன்.
தனது தந்தை செய்யும் கோயில் பூஜை முறைமைகள் தன் மேல் விழுகிறது.
கோயில் செல்லும் சிவசர்மனை அந்தணர்களும் ஊர்மக்களும் எதிர்க்கின்றனர்,
செய்வதறியாது இறைவனை மனமுருகி வேண்டி நிற்க்கிறார் பிரம்மனின் மறுபிறவியான சிவசர்மன்.
அன்று இரவு கனவில் வந்த இறைவன் காலை சிம்ம குளத்திற்க்கு வா என்று கூறிகிறார்.
மறுநாள் காலை சிவசர்மனும், சிம்மகுளத்திற்க்கு வர,
சிவசர்மனாகிய பிரம்மனுக்கு உபநயனம் செய்வித்து
4 வேதங்கள்,
6 சாஸ்த்திரங்கள்,
18 புராணங்கள் மற்றும்
64 கலைகளையும் உபதேசம் செய்து ஈசனே ஆட்கொண்டார்.
பிரம்மனுக்கு சிவபெருமானே சிவ தீட்சை அளித்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம்.
நாமும் இத்தலத்தில் சிவ தீட்சை பெற்றால் அதை விட பெரிய பேறு இவ்வுலகில் இல்லை.
இத்தலத்து இறைவன் அறிவின் சிகரம் இத்தலத்து இறைவன் பிரம்மனுக்கு போதித்து வழிகாட்டியதால் மார்க்கசகாயர் என்றழைக்கப்படுகிறார்.
உபநயனம் பெற்ற சிவசர்மன் இறைவனை பூஜை செய்ய ஆயுத்தமாகிறார்.
சிவசர்மன் சிறுவனாக இருந்ததால் சிவலிங்கத்திற்கு (6 அடி) நீருற்ற முடியவில்லை.
சிவசர்மனாக பிறந்த பிரம்மன் தன் ஊழ்வினை தவற்றை உணர்ந்து, இறைவனிடம் முடியை காண இயலவில்லை என்று மனமுருகி வேண்ட அவரும் தனது முடியை சாய்ந்து கொடுக்கிறார்.
அண்ணாமலையில் இறைவனின் முடியை காணாத பிரம்மா இத் தலத்தில் தான் இறைவனின் முடியை கண்டார்.
மொத்தம் 12 அடி, ஆவுடையுடன் 6 அடி, லிங்கம் சுயம்பு லிங்கமாக சற்று முன்னோக்கி சாய்ந்துள்ளது.
பிரம்மன் சாபவிமோச்சனம் நிகழ்வு நடந்த தினம் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு ஆகும்.
வருடா வருடம் கடை ஞாயிறு விழா மிகவும் சிறப்பாக நடை பெற்று வருகிறது.
இங்குள்ள சிம்மக்குளம் தீர்த்தம் பீஜாட்சர யந்திரம் ஆதிசங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் இத்தீர்த்த குளத்தில் கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு 11.55 மணிக்கு திறக்கப்படும்.
முதலில் அருகில் உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு கோயிலின் அருகில் உள்ள பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தொடர்ந்து சிம்ம வாய்முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மூழ்கி எழ வேண்டும்.
பின்னர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில்,
ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக் கொண்டு கோயில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், அவர்களது கனவில் சிவபெருமான் மலர் வடிவில் தோன்றி குழந்தை வரம் அருள்வார் என்பது ஐதீகம்.
இந்த குளத்தில் நீராடினால் பேய், பிசாசு, பில்லி, சூனியம், வலிப்பு, தீவினைகள் நீங்குவதோடு,
திருமண வரம் கிடைக்கும் என்பதும் தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.
மறுநாள் பிரம்மக்குளத்தில் தீர்த்தவாரியும், பாலகனுக்கு உபநயன சிவதீட்சை அதன்பிறகு திருமாட வீதி உலாக்கள் மிக சிறப்பாக நடைபெறும்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகாவில் இருந்தும் திரளான மக்கள் கலந்துகொள்வர்கள்.
இந்த வருட கடை ஞாயிறு திருவிழா வருகிற 13/12/25 & 14/12/25 அன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது,
அனைவரும் கலந்து கொண்டு வழித்துணை நயினாரின் அருளை பெறுமாறு வழித்துணை நாயனார் திருக்கூட்டம் சார்பாக தங்களின் திருவடிகளை வணங்கி கேட்டுக்கொள்கிறோம் 🙏
சிவயநம 🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏
#SSRThreads
#நோக்கம்சிவமயம்