அட கொடுமையே!! என்னது?!!
"மா ஏகம் சரணம் வஜ்ர" என்று 18வது அத்யாயத்தை ஆரம்பிப்பார்களா?! அதென்ன வஜ்ர?!!!
கொடுமையடா
@annamalai_k கொடுமை!!
18ஆம் அத்யாயத்தின் முதல் ஸ்லோகம், அர்ஜுனன் கேள்வி கேட்பதாக அமைந்துள்ளது.
அர்ஜுன உவாச -
ஸந்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்|
த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேஶ ப்ர்தக்கேஶிநிஷூதந || (18-1)
अर्जुन उवाच |
सन्न्यासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुम् |
त्यागस्य च हृषीकेश पृथक्केशिनिषूदन || 18-1||
arjuna uvācha
sannyāsasya mahā-bāho tattvam ichchhāmi veditum |
tyāgasya cha hṛiṣhīkeśha pṛithak keśhi-niṣhūdana ||18-1||
அதாவது அர்ஜுனன் ஸ்ரீ க்ருஷ்ணரிடம் உபநிஷதுக்களில் சொல்லப்பட்ட "ஸந்யாஸம்" மற்றும் "த்யாகம்" ஆகியவை வேறு வேறா அல்லது ஒன்றா? அதன் ஸரூபம் என்ன? என்று கேட்பதாக அமைந்துள்ளது.
இதற்கு ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா கூறுவது
ஸ்ரீபகவாநுவாச -
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது: |
ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ் த்யாகம் விசக்ஷணா: || 18-2 ||
श्रीभगवानुवाच |
काम्यानां कर्मणां न्यासं सन्न्यासं कवयो विदु: |
सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणा: || 18-2||
śhrī-bhagavān uvācha
kāmyānāṁ karmaṇāṁ nyāsaṁ sannyāsaṁ kavayo viduḥ |
sarva-karma-phala-tyāgaṁ prāhus tyāgaṁ vichakṣhaṇāḥ || 18-2 ||
இது தொடங்கி இந்த 18வது அத்யாயத்தில் மொத்தம் 78 ஸ்லோகங்கள் உள்ளன.
அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு பதில் அளிப்பதாக இந்த அத்யாயம் துவங்கி 66வது ஸ்லோகத்தில் ஸ்ரீ க்ருஷ்ணர் சொல்கிறார்
ஸர்வதர்மாந் பரித்யஜ மாமேகம் ஶரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஶுச: || 18-66||
सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज |
अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच: || 18-66||
sarva-dharmān parityajya mām ekaṁ śharaṇaṁ vraja |
ahaṁ tvāṁ sarva-pāpebhyo mokṣhayiṣhyāmi mā śhuchaḥ || 18-66 ||
இந்த ஸ்லோகத்தை ஸ்ரீவைஷ்ணவர்கள் சரம ஸ்லோகம் என்று போற்றுகின்றனர். இதை கொச்சை படுத்தாமல் இருக்கலாமே
@annamalai_k
ஸ்லோகம் தெரியவில்லை என்றால் எதற்கு அதை கொலை செய்ய வேண்டும்!!
இந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தை அறியத்தான் ஸ்வாமி ராமாநுஜர் திருக்கோஷ்டியூருக்கு 18 முறை ஸ்ரீரங்கத்திலிருந்து நடந்து திருக்கோஷ்டியூர் நம்பி என்கிற ஆசார்யனிடம் அதன் அர்த்தத்தை பெற்று, அந்த கோவில் கோபுரம் சென்று "ஆசையுடையவர்களுக்கு" உபதேசித்தார்.
இந்த ஸ்லோகம் சரணாகதி தத்வத்தை விவரிக்கிறது.
பகவத் கீதையின் நோக்கு மோக்ஷம். இந்த மோக்ஷத்தை அடைய கர்ம, ஜ்ஞான, பக்தி, ப்ரபத்தி (சரணாகதி) என்கிற மார்கங்கள் மூலம் ஒருவர் மோக்ஷத்தை அடையலாம் என்கிறது.
முந்தைய அத்யாயங்களில் கர்ம, ஜ்ஞான பக்தி யோகங்களை பற்றி ஸ்ரீ க்ருஷ்ணர் விளக்கினார். இதில் கர்ம யோகத்தை விளக்கும் பொழுது சாஸ்திரங்களில் அதாவது வேதத்தில் சொல்லப்பட்ட கர்மாக்களை பின்பற்றுவதால் ஒருவனுக்கு மோக்ஷம் கிட்டும் என்று சொன்னாரே ஒழிய ஏதேதோ வேலைகளை, வேத சம்பந்தமில்லாத வேலைகளை கர்மா என்ற சொல்லால் குறிப்பிடவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளவும்.
அப்பேர்ப்பட்ட ஸ்வாமி ராமாநுஜருக்கே 18 முறை நடையாக நடந்து பெற்ற அர்த்தத்தை ஏதோ மேடை கிடைத்தது என்று அரசியலுக்காக பேசுவதை கைவிடவும்.
இந்த ஸ்லோகங்களின் அர்த்தங்கள் ஆழமானது. சின்மயா மிஷன் போன்ற அத்வைதிகளின் ஆங்கில விளக்கவுறைகளால் விவரிக்க முடியாதவை!!
சொல்லப்போனால் பகவத் கீதையின் முக்கிய கருத்தே ஸ்ரீமந் நாராயணனை பரதெய்வமாக ஸ்தாபனம் செய்வது. இதை ஆதிசங்கரரும் ஏற்கிறார்.
ஆனால் இன்றைய குழம்பி கிடக்கும் அத்வைதிகள் சிவபெருமானை வழிபட்டுக் கொண்டு தங்களை சைவர்கள் என்று நினைத்து தானும் குழம்பி மற்றவரையும் குழப்பிக் கொண்டு உங்களைப் போன்ற அறைவேக்காடுகளுக்கு மேடை போட்டு பகவத் கீதையை பற்றி பேச வைத்து மேலும் மக்களை குழப்புகின்றனர்.
அத்வைதிகளில் ஒருவர் கூட ஆதி சங்கரரின் பாஷ்யத்தை குறிப்பிடுவதில்லை என்பதற்கான காரணத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் சொல்வதை
நீங்கள் தப்பும் தவறுமாக பிதற்றிய ஸ்லோகத்தின் சரியான வடிவில் (18வது அத்யாயம் 66வது ஸ்லோகம்) இரண்டு சொற்கள் உள்ளன - அஹம், த்வா - ஆகியவை.
அஹம் என்றால் நான், த்வா என்றால் உன்னை என்று அர்த்தம். அதாவது அத்வைத ஸம்ப்ரதாயத்திற்கு சம்மடி அடி இது. இந்த ஒரு ஸ்லோகமே அத்வைத ஸம்ப்ரதாயத்தை முற்றிலும் தகர்க்கக்கூடிய ஸ்லோகமாகும்.
ஏனென்றால் அத்வைதத்தில் இரண்டாவது என்று ஒன்று இல்லவே இல்லை. ஆதலால் உன்னை என்று எப்படி பரம்பொருளான பெருமான் மற்றொன்றை குறிப்பிடுவான்?!!!!!
இதற்குத்தான் பெரியவர்களிடம் கேட்டு கற்கவேண்டும் என்பது. மேடையில் இருப்பவர்கள் எல்லோரும் பெரியவர்கள் ஆகிவிட முடியாது.