சமீபத்தில் தி இந்து ஆங்கில நாளிதழின் யூடியூப்பில்
@dsureshkumar அவர்கள்
@TVKVijayHQ சார்பாக இணையத்தில் பரப்பப்படும் நிறைய பொய் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்திருப்பார். அதேமாதிரி,
@IndianExpress இதழில் தவெகவின் ஐ.டி.விங் யுக்திகள் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியிருக்கும். அதை முன்வைத்து
@pkr_madras சில சேனல்களில் பேசியிருக்கிறார்.
இரண்டிலுமே ஒரு பொதுவான பிழை இருக்கிறது. அதாவது இரண்டிலுமே சங்கராபுரம் பொது தொகுதியில் தவெக தலித் வேட்பாளரை நிறுத்தியதாக கூறுகிறார்கள். அதில் உண்மையில்லை. தவெக சார்பில் சங்கராபுரத்தில் போட்டியிட்டவர் ஜெகதீச பாண்டியன். நாம் தமிழர் கட்சியில் நீண்ட காலம் பயணித்தவர். அவர் தலித் இல்லை. சங்கராபுரம் பொது தொகுதியில் தவெக தலித்தை நிறுத்தவில்லை.