விஜயை வளர விட்டு பெரும் தவறை செய்து விட்டது தமிழ் சமூகம், அடுத்து சிவ கார்த்திகேயன் இப்படி வர துடிக்கிறான், மக்களுக்கான படங்களை அவன் நடிக்காமல் விஜய் மாதிரி ஒரு வானர கூட்டத்தை வளர்க்க நினைக்கிறான் அதை பற்றியான பதிவு:
உயிரை உறிஞ்சி எடுக்கும் கொடூர வெயிலில் மதியம் இரண்டு மணிக்கு அரசியல்வாதியான நடிகரைப் பார்க்கப் போகும் பைத்தியக்காரத்தனத்தை ஏன் தமிழகம் இன்னும் விடவில்லை என்ற கேள்வி அடிக்கடி தோன்றுகிறது.
எங்கள் கல்லூரி காலத்தில் மா லெ மாணவர் அமைப்பான Airsf கூட்டங்களுக்காக பிஹார் தன்பாத், கல்கத்தா, வாரங்கல் என்று போய்க் கொண்டே இருப்போம். அன் ரிசர்வ் டு கம்பார்ட்மென்ட். கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாது. குளிக்க முடியாது. சாப்பாடு கூட நினைத்தபடி கிடைக்காது. இந்தியாவை மாற்றப் போகிறோம் என்ற நம்பிக்கையில் பல்லாயிரம் மாணவர்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொண்டார்கள்.
விஜய் ரசிகர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்க கூடும்? ஒரு தோழர் சொன்னார்: கிராமசபை கூட்டங்களில் சில பிரச்சினைகளை எழுப்ப வேண்டும் என்று சில இளைஞர்கள் வந்தார்களாம். இப்போதுதான் கொங்குப் பகுதி கிராமங்களில் சத்தியமங்கலம் தவிர வேறு எங்கும் I, M, ML எதுவும் குறிப்பிடத் தக்க அளவில் இல்லையே. வேறு ஏதாவது அமைப்பில் சேருங்கள் என்றாராம். அந்த இளைஞர்கள் த வெ காவில் சேர்ந்து உள்ளூர் எம் எல் ஏவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார்களாம்.
இது போல சிறு அரசியல் நம்பிக்கைகளுக்கு, செயல்பாடுகளுக்கு இந்தக் கட்சி வாய்ப்பு அளிக்கிறது போலும். இந்தக் கட்சியால் எதுவும் நடக்காது என்று சொல்ல மக்கள் நம்பக் கூடிய கட்சி அமைப்புகள் நம்மிடம் இல்லை.
நடிகனை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பும், அந்த நாயக பிம்பத்தில் மூழ்கிப் போன பெரும் எண்ணிக்கையிலான முட்டாள்களை என்ன செய்வது என்று தெரியவில்லை.
தமிழகத்தின் மட்டமான மசாலா பட வணிகத்தை ஏதாவது ஓரிடத்தில் தகர்க்க வேண்டும். அதுவரை விஜய் இல்லா விட்டாலும் வேறு யாரையாவது கொண்டு வந்து நம் தலையில் திணித்து கொண்டே இருப்பார்கள்.
தோழர் முருகவேள் பதிவு.
#அறிவோம்_தவெக