கோபி சுதாகரின் Society பாவங்கள் வீடியோ வெளியானபோது அது வழக்கம்போல அந்த நேரத்து Contentஐ தேற்றி போட்ட வீடியோ போல இருந்தது..
ஆனால் வீடியோ ஜாதிய பெருமை பேசிய கூட்டத்தை கடும் கேலி செய்து அப்பெருமை பேசிக்கொண்டு திரிந்தவர்களை அமைதியாக்கிவிட்டது.. ஆணவ"க்கொ"லை நடந்து அதை வைத்து வீரப்பரம்பரை வசனம் பேச எத்தனித்த கூட்டத்தை கண்ணுல மொளகா பொடிய போட்டு வெ"ட்டிருக்க நீ வீரனா என இறங்கி துப்பியுள்ளது..
நம்ம பரம்பரை எப்புடி தெரியுமானு பேசும் கூட்டத்தை பஸ்டாண்ட்ல பொரி கடலை கடை போட்ருந்தார் வள்ளலார் மடத்துல ஓசில சோறு வாங்கி தின்னாருனு கடும் கிண்டலால் வறுத்து எடுத்திருக்கிறது..
ஜாதிய கூட்டத்தின் படிப்பறிவில்லாத தன்மை, ஜாதிக்காக ஏத்தி விட்டு குற்றம் நடந்ததும் கழன்றுகொள்ளும் கோமாளிகள் இருபக்க நியாயத்தையும் பாருங்கள் என வித்தியாசமாக உருளும் ஜந்துகள் என அனைத்தையும் உடைத்திருக்கிறார்கள்
ஜாதி ஒழிப்பை நீண்டகால குத்தகைக்கு எடுத்தது போல் திரியும் கூட்டம் எல்லாம் சட்டம் வந்தால் ஆணவக்கொ"லை நடக்காமல் இருக்குமா அதுவும் வரட்டும் என பல்லுபடாமல் பாத்து பாத்து செய்து கொண்டு இருந்த நிலையில் இந்த வீடியோ ஒரு கூட்டத்தின் பெருமையை பகடியாக்கி அதுல ஒன்னும் இல்ல கீழ போட்ரு என உச்சியில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறது.
இந்த ஜாதிய கோமாளித்தனங்களை இங்கே மாஸ் மீடியாவில் அவை கோமாளித்தனம் என கூறி பகடி செய்து விட ஆள் இல்லாமல் கிடந்தது.. இந்த வீடியோ அதை கச்சிதமாக கடுமையாக செய்திருக்கிறது.
கோபி சுதாகர் டீமுக்கு வாழ்த்துகள் அவர்களுக்கு வரக்கூடிய அழுத்தத்திற்கு உடன்நிற்க வேண்டியது அவசியம்.