NEW OFFICE CHAIR :
ஒரு வழியா Install செஞ்சாச்சு.
நான் இந்த Chair வாங்குவதற்கு முன் குறைந்தது 20 ல இருந்து 30 chair ஆவது local office chairs experience செஞ்சிருப்பேன் (CLR, Selva Furnitures, Royal Oak) னு நிறைய showroom visit செஞ்சிருந்தேன் - காரணம் பத்தாயிரம் ரூபாய் கிட்ட செலவு செய்ய போறோம் , உண்மையாகவே அதற்கு worth ஆ இருக்குமா ? இல்லை சும்மா Brand க்காக காசை தூக்கி கொடுக்க போகிறோமோ ? என்று தெரிந்து கொள்ள தான் இவ்ளோ கடை ஏறி இறங்கினேன்.
Local Furniture showroom ல பார்க்க எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்கும் . . ஆனா அதில் உட்காரும் போது தான் அதன் உண்மையான comfort தெரியவரும். எங்கேயுமே எனக்கு Lumbar support பிடிக்கலை..
சரி , இந்த chair வாங்க மிக முக்கிய காரணம் - இதன் Thighs support மற்றும் Back support . இந்த வீடியோ பார்த்தாலே தெரியும் , நாம் அமரும் பகுதி எவ்ளோ Broad ஆ இருக்கு என்று ? நேத்து install செய்த பிறகு ஒரு இரண்டு மணி நேரம் வேலை செஞ்சிருப்பேன் - நல்லா comfortable ஆ இருந்தா மட்டும் வீடியோ எடுக்கலாம் இல்லை என்றால் return அனுப்பிடலாம் என்று தான் பயன்படுத்த தொடங்கினேன். உண்மையாகவே செம worth. Seating Comfort தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது , இதை நம் height க்கு தகுந்த மாதிரி சுலபமா adjust கூட செஞ்சுக்கலாம். Back Support கூட நாம் adjust செஞ்சுக்கலாம்... இது இன்று ஒரு நாளில் சொல்ல முடியாது . . கொஞ்ச நாள் ஆக ஆக தான் எவ்ளோ useful னு சொல்ல முடியும் . நாம் அமரும் position க்கு தகுந்த மாதிரி adjust செய்து Lock செஞ்சுக்கனும் (நான் இன்னும் இதை செய்யவில்லை) . கண்டிப்பா இதை ஒரு 2 மாதம் கழித்து மீண்டும் review செய்யறேன் .
என்னுடைய அனுபவத்தில் சொல்றேன் , உங்க வேலை system முன்னாடி தான் என்றால் தயவு செய்து குறைந்த விலை மாடல் தேர்வு செய்யாதீங்க. கொஞ்ச நாள் நல்லா இருக்கும் , பிறகு முதுகு வலி லைட்டா எட்டி பார்க்கும். அதற்கு ஆரம்பத்திலேயே நல்ல chair தேர்வு செஞ்சுக்கங்க.
நீங்களும் இதே chair தான் கண்டிப்பா வாங்கனும் னு இல்லை .. ஆனா எந்த chair வாங்கினாலும் இந்த 3 விஷயம் பார்த்து வாங்குங்க.
1. Ergonomics & posture support
2. Adjustability (customization to your body & desk setup)
3. Seat Size, Depth & Backrest Size
இந்த மூன்றும் தான் மிக முக்கியம் . . அதன் பிறகு வேண்டுமானால் , Tilt Lock , Armrest எல்லாம் கவனியுங்கள். நான் மேல சொன்ன 3 விஷயம் கூட Tilt Lock , Armrest Adjustment, Backsupport Adjustment னு எல்லாமே இந்த chair ல திருப்தியா இருக்கு.
நான் இதை Order செய்து 3 நாளில் Delivery செஞ்சிட்டாங்க. Install செய்ய நேற்றே வர வேண்டியது , நான் வெளிய போயிட்டேன் என்று இன்று install செய்ய வந்தாங்க . install செய்து பொறுமையா எல்லாத்தையும் explain செஞ்சாங்க .
ஒரு 10k range ல நல்ல chair வாங்க நினைத்தால் கண்டிப்பா இந்த chair consider செய்யலாம்.
Price: Rs.10,990
Reviews: 4.3* | 16,665 Ratings
Link to Buy :
amzn.to/48FbLo6