🚌🇦🇪 பயணிகள் தங்களது பயணத்தை எவ்வித தடங்கலும் இன்றி எளிதாக திட்டமிடுவதற்கு வசதியாக, ஷார்ஜாவில் இருந்து ஓமானின் சோஹார் மற்றும் மஸ்கட் நகரங்களை இணைக்கும் 203-ஆம் எண் வழித்தடத்தில் இயங்கும் பேருந்து சேவையின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) தெரிவித்துள்ளது.
🕡 புதிய அட்டவணையின்படி, ஷார்ஜாவில் இருந்து மஸ்கட் செல்லும் பேருந்துகள் காலை 6:30 மணி, மதியம் 3:30 மணி மற்றும் இரவு 8:30 மணிக்கு புறப்படும்.
🚌 அதேபோல், மஸ்கட் மற்றும் சோஹாரில் இருந்து ஷார்ஜா நோக்கி இயக்கப்படும் பேருந்துகள் காலை 7:00 மணி, மதியம் 1:30 மணி மற்றும் மதியம் 3:00 மணிக்கு புறப்படும் என SRTA அறிவித்துள்ளது.
#Sharjah #Oman #Muscat #UAETransport #BusServiceUpdate