🥰📵 மொபைல் பெரியவர்களும் நகராத கைப்பேசிகளும்.
இணைய உலகில் நாம் வாழ்ந்தாலும், நம் வீட்டுப் பெரியவர்கள் மட்டும் எப்போதும் 'நாட்-ரீச்சபிள்' தான். அவர்களுக்கென்று ‘மொபைல்’ இருந்தாலும், அவர்கள் மொபைலாக இருக்க, கைப்பேசியோ நிலையாக எங்கேயோ ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கும்.
ஏன் இப்படி என்ற கேள்விக்கு ஒவ்வொரு முறையும் வரும் விளக்கங்களும் சுவாரஸ்யமானவை.
சமீபத்தைய மூன்று விளக்கங்கள்:
அம்மா: “காய்கறி வாங்கும்போது போனையும் ஏன் சுமக்கணும்?” 🥹
அமுதா அக்கா: “கடைக்குப் போய் சாமான் வாங்கும்போது மறந்துபோய் போனை கடையிலே வெச்சிடறேண்டா. பின்னாடியே ஓடிவந்து கொடுக்கறாங்க. ஒன்னு ரெண்டு தடவை வீடு தேடி வந்து கொடுத்துட்டுப் போனாங்க. அதனால தான் எடுத்துக்கிட்டுப் போறது இல்லை.” 🤣
மாமா: “போன் பயன்பாட்டைக் குறைக்கணும்னு அதைப் பக்கத்திலேயே வெச்சிக்கிறது இல்லைப்பா. ஆனா, சமீபத்திலே ஒரு எசகுபிசகான சம்பவம் நடந்திடுச்சு. வாடிக்கையான கடைக்கு போன் எடுத்துக்காம போனேன். சில்லறை எடுத்துப் பாக்கட்டில் வைக்கும்போது பழக்கதோஷத்தில் அங்கே இருந்த ஒரு போனையும் எடுத்துப் போட்டுக்கிட்டிருக்கேன். வீட்டுக்கு வந்து ஸ்கூட்டர் சாவியை அலமாரில வைக்கும்போது பார்த்தா என் போன் இங்கேயே இருக்கு! அலறி அடிச்சிக்கிட்டு மறுபடியும் கடைக்குப் போனேன். தெரிஞ்ச கடைக்காரர் தான். “அதனால என்ன சார்,”ன்னு வாங்கிக்கிட்டார். ஆனா, பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த ஒரு ஆளு, கடைக்காரர் கிட்டே, “இவரு தானா?”ன்னு கேட்டதையும் நான் கவனிச்சேன்” 😂
#FamilyMoments #DigitalLife #GenerationalHumor
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்