🦉பூமியின் பரப்பில் நான்கில் மூன்று பகுதியைத் தன்னுள் அடக்கி, மனிதகுலம் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஜீவராசிகளும் உயிர்வாழ்வதற்கான 80 விழுக்காடு ஆக்சிஜனை வாரி வழங்கி, இந்த உலகைக் காக்கும் உண்மையான நுரையீரலாகத் திகழும் கடல்களின் முக்கியத்துவத்தைப் போற்றிப் பாதுகாக்கும் உன்னதமான நாள் இன்று.
நிலத்தில் இருக்கும் காடுகளை விடவும் நாம் சுவாசிக்கும் காற்றில் பெரும் பகுதியை அள்ளித் தரும் இந்த நீலப் பேரதிசயம், உலக மக்களின் பசி தீர்க்கும் பிரம்மாண்ட உணவுப் பெட்டகமாகவும், அத்தியாவசிய மருந்துகளின் பிறப்பிடமாகவும், கணக்கிலடங்கா அரிய கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது.
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் தொடங்கி, பூமியின் வெப்பநிலையைச் சீராக வைப்பது வரை கடல்களின் பங்கு அளப்பரியது என்றாலும், மனிதர்களின் சுயநலத்தால் பிளாஸ்டிக் கழிவுகளும், ரசாயன நச்சுகளும் கலந்து இன்று கடல்வளம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்தச் சூழலில், நடப்பு ஆண்டிற்கான உலகப் பெருங்கடல்கள் நாளின் மையக்கருத்தாக "Reimagine" என்பது அறிவிக்கப்பட்டுள்ளது; அதாவது, "நாம் அறிந்த உலகிற்கு அப்பால், நம் கடலுடன் ஒரு புதிய உறவை மறுவடிவமைப்பு செய்வோம்" (Reimagine: Beyond the world we know, a new relationship with our ocean) என்ற உன்னத நோக்கில், வெறும் விழிப்புணர்வோடு நின்றுவிடாமல், கடல்களைப் பாதுகாப்பதற்கான கடமைகளை உணர்ந்து, இயற்கையோடு இணைந்த ஒரு புதிய வாழ்க்கை முறையை நாம் தொடங்க வேண்டியதன் அவசியத்தை இந்தத் தினம் மிக ஆழமாக வலியுறுத்துகிறது.
#ஆந்தைரிப்போர்ட்டர் #உலகப்பெருங்கடல்கள்நாள் #சுற்றுச்சூழல் #கடல்வளம் #இயற்கை #Reimagine #WorldOceansDay #SaveOurOceans #OceanConservation #NatureFirst #AanthaiReporter