ஆணவக் கொ*கள் என்பவை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு அல்லது தலித் மக்களுக்கு மட்டுமான பிரச்சினை அல்ல; அவை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரான பிரச்சினையாகும். ஆணவக் கொ*களுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுவது மிக அவசியமான ஒன்றாகும்.
தற்போதைய குற்றவியல் சட்டங்கள் ஆணவக் கொலைகளை வெறும் தனிநபர் சார்ந்த "சாதாரண கொ*களாகவே" கருதுகின்றன. ஆனால், ஆணவக் கொ*கள் என்பவை ஒரு தனிநபரின் உடனடி ஆத்திரத்தால் நடப்பவை அல்ல; மாறாக, சாதிப் பெருமை மற்றும் குடும்பக் கௌரவம் ஆகியவற்றின் பின்னணியோடு, திட்டமிட்டு நடத்தப்படும் சமூகக் குற்றங்களாகும்.
தனிச் சட்டம் இல்லாததால், இக்குற்றங்கள் துல்லியமாகத் தரவுப்பதிவு (Data tracking) செய்யப்படுவதில்லை. இதனால் குற்றவாளிகள் சட்டத்தில் உள்ள இடைவெளிகளைப் பயன்படுத்தி எளிதில் தப்பிவிடுகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட தம்பதியருக்கான முன்கூட்டிய பாதுகாப்பு, இதற்கான சிறப்புப் பிரிவு, விரைவு நீதிமன்ற (Fast-track court) விசாரணைகள் மற்றும் உரிய நஷ்டஈடு போன்ற அம்சங்கள் தற்போதைய சட்டமைப்பில் முழுமையாக இல்லை.
இது தொடர்பாக விமலாதேவி வழக்கில் (2016) சென்னை உயர் நீதிமன்றமும்; சக்தி வாஹினி வழக்கில் (2018) உச்ச நீதிமன்றமும் முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன.
இரண்டு தனிநபர்கள் தங்களுக்குப் பிடித்த துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் தலையிடப் பெற்றோர், குடும்பம் அல்லது சமூகக் குழுக்கள் என யாருக்கும் எந்தச் சட்டபூர்வ உரிமையும் இல்லை" — உச்ச நீதிமன்றம்.
ஆனால், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்கள் தமிழ்நாட்டில் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா ?
கடந்த 2024 ஆம் ஆண்டு, திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத் தாக்குதல் குறித்த சிறப்புக் கவன ஈர்ப்புத்தீர்மானத்தின் போது, "தற்போதைய வன்கொடுமைத் தடுப்பு மற்றும் குற்றவியல் சட்டங்கள் மூலமே உரிய நீதி உறுதி செய்யப்படும்" என அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், ஓராண்டுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில், ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் இயற்ற அரசுக்குப் பரிந்துரை செய்ய, முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் புதிய ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் தொடர்ச்சியாக 5 சாதி ஆணவக் கொ*கள் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நடந்து உள்ளது. மேலும், தமிழ்நாட்டில்தான் சாதி மறுப்பு திருமணங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, காதல் திருமணம் செய்வோரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இக்குற்றங்களுக்குத் தூண்டுகோலாக இருக்கும் சாதிய சங்கங்களைக் கண்காணிக்கவும் தமிழ்நாட்டில் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
இத்தகைய சூழலில், தற்போதைய தமிழ்நாடு அரசாங்கம் இதற்கான தனிச் சட்டத்தை இயற்றுமா ?
#HonourKilling #Caste #TamilNadu #SpecialLaw #TNUEF