இன்று (29.04.2026), தலைமை தேர்தல் அதிகாரி / அரசு முதன்மைச் செயலாளர் திருமதி அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப., அவர்கள் 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணும் செயல்முறை குறித்த பயிற்சியில் கலந்து கொண்டு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள்(Returning Officers), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்(Assistant Returning Officers), மாவட்ட கணினி நிரலாளர்கள்(District Programmers) மற்றும் உதவி கணினி நிரலாளர்கள்(Assistant Programmers) ஆகியோர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வில், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி /அரசு சிறப்புச் செயலாளர் திரு. அ. சிவஞானம், இ.ஆ.ப., இணை தலைமைத் தேர்தல் அதிகாரி / அரசு துணைச் செயலாளர் திரு. ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், இ.ஆ.ப., திரு. வே. ஸ்ரீதர், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி /அரசு கூடுதல் செயலாளர், இணை தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.ஆர். மேனுவல்ராஜ், அவர்கள் மற்றும் திரு.ஞானவேல் முதன்மைப் பயிற்சியாளர், பாண்டிச்சேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
@ECISVEEP
#ECI #tnelections2026