தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் ரயில் போக்குவரத்தின் தேவையை கருத்தில் கொண்டு, இரயில்வே துறை அமைச்சர் மாண்புமிகு திரு.
@AshwiniVaishnaw அவர்களை நேரில் சந்தித்து, தமிழகத்தில் சில புதிய இரயில் வழித்தடங்கள் கட்டமைப்பது குறித்து வலியுறுத்தியிருந்தேன்.
அதன்படி, தமிழகத்தில் ஆறு முக்கியமான இரயில் வழித்தடங்களுக்கான இறுதி ஆய்வறிக்கையை (Final Location Survey) தயாரிக்க உத்தரவிட்டுள்ளது.
1) சென்னை- அரக்கோணம் (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்)
2) அரக்கோணம்-ரேணிகுண்டா (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்)
3) சென்னை-குடூர் (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்)
4) விழுப்புரம்-திருச்சி-நாகர்கோயில் (3 மற்றும் 4 ஆம் வழித்தடம்)
5) பாலக்காடு-பொள்ளாச்சி-போத்தனுர் (2 ஆம் வழித்தடம்)
6) திருச்சி-காரைக்குடி-மானாமதுரை-மதுரை (2 ஆம் வழித்தடம்)
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் முன்னுரிமை அளித்து, இரயில் கட்டமைப்புகளை அசுர வேகத்தில் மெருகேற்றிவரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.
@narendramodi
ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.
@AshwiniVaishnaw அவர்களுக்கும், தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.