தமிழக வெள்ளை அறிக்கை - வெற்று அறிக்கை - 2021-2026 திமுக திராவிட மாடல் அரசு ., தமிழக அனைத்து துறை மக்களுக்கும் சமூக நல திட்டங்களை செயல்படுத்தி தமிழக வரலாற்றில் சாதனை படைத்த பெருமை முன்னாள் முதல்வர், முத்தமிழறிஞரின் மைந்தர் திரு ஸ்டாலின் தலைமையில் ஆண்ட அரசிற்கே . இதற்கு முக்கிய காரணம் … அவரின் நீண்ட கால அரசியல் அனுபவத்தின் முதிர்ச்சியே . மிசா கண்ட தானைத் தலைவர்., கலைஞர் பள்ளியில் அரசியல் பயின்று , உதவி முதலமைச்சாராக திறம் பட்ட செயல் பட்டு அனுபவம் கொண்டவர் . சட்ட ஒழுங்கை நிலை நாட்டி , அதிகாரிகளுக்கு உற்ற தோழனாக இருந்து , அதிகாரிகளையும் கட்சி அமைப்பையும் , மக்களையும் தன் அன்பால் தன் கட்டுக்குள் வைத்து கோலோட்சியவர் . அரசியல் கரையைக் கண்டவர் . அரசியல் வித்தகர் / ஆசிரியர்; - இவர் சமீப ஆட்சியில் மக்கள் நலம் காக்க வாங்கிய கடன்கள் அனைத்தும், ஒன்றிய அரசின் அனுமதியுடன், வரம்பிற்குட்பட்டதே. திராவிட மாடல் ஆட்சி அரசியலில் நுளையும் மாணவர்களுக்கு நல்ல பாடம் .
2. மக்களுக்கு சேவை செய்யும் அரசு - லாபம் தீட்டும் பப்ளிக் லிமிட்டெட் கம்பெனியாக எதிர்பார்ப்பது அறியாமையே !
3. தமிழகத்தில் தற்போது எல்லாவற்றிலும் மாற்றமே …. அப்போதைய முதல்வர் ரூ 20K - ரூ 50 k ல் வழிச் செலவில் சென்று வந்தார் .
4. *மே 2014-இல் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது, இந்திய அரசின் மொத்த நிலுவைக் கடன் மற்றும் பொறுப்புகள் சுமார் ரூ. 55.87 லட்சம் கோடியாக இருந்தன. அதன்பிறகு, உள்கட்டமைப்பு மற்றும் நலத்திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக இத்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது; தற்போதைய மதிப்பீடுகளின்படி, பொதுக் கடன் நிலுவை சுமார் ரூ. 197.18 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2014 முதல் 2026 வரையிலான இந்தியாவின் நிலுவைக் கடன்கள் மற்றும் பொறுப்புகளின் விவரங்கள், பொதுக் கடன் மற்றும் வெளிநாட்டுக் கடனின் பெருகிவரும் அளவைக் காட்டுகின்றன: காலப்போக்கில் முக்கியக் கடன் புள்ளிவிவரங்கள் - மே 2014: மொத்தப் பொறுப்புகள் சுமார் ரூ. 55.87 லட்சம் கோடியாக இருந்தன. அக்காலத்தில், வெளிநாட்டுக் கடன் இருப்பு சுமார் 446 பில்லியன் அமெரிக்க டாலராக (ரூ. 26.82 லட்சம் கோடி) இருந்தது. மார்ச் 2019: மொத்தப் பொதுக் கடன் நிலுவை ரூ. 91.01 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்தது.
ஜனவரி 2023: மொத்த அரசுப் பொறுப்புகள் சுமார் ரூ. 155.31 லட்சம் கோடியை எட்டின.
மார்ச் 2025: மத்திய அரசின் கடன் சுமார் ரூ. 181.7 லட்சம் கோடியை எட்டியது; அதேவேளையில் இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் 736.3 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.
2025-2026: மொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பொறுப்புகள் ரூ. 197.18 லட்சம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; இதில் நீண்ட கால வெளிநாட்டுக் கடன் சுமார் ரூ. 6.74 லட்சம் கோடியாக இருக்கும்.
*( மேலை உள்ள புள்ளி விவரங்கள் அனைத்தும் மத்திய அரசு / பத்திரிக்கை செய்தி வாயிலாக சேகரிக்கப்பட்டவை )