Official Handle of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee

Joined March 2014
31,327 Photos and videos
சோசலிச கியூபாவைப் பாதுகாப்போம்! ஏகாதிபத்திய எதிர்ப்பு போர் குரல் எழுப்புவோம்! புரட்சியாளர் சேகுவேராவின் பிறந்த தினத்தையொட்டி கியூபா ஆதரவு கருத்தரங்கம் மதுரையில் துவங்கியது
1
5
59
கரூர் ஒன்றியம், வேடிச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் செல்வகுமார், தனது மகன் மீது நிகழ்த்தப்பட்ட சாதி வெறித் தாக்குதலைத் தட்டிக்கேட்டதற்காக சாதி வெறி கும்பலால் மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்வகுமாரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலார் பி.சுகந்தி, துணைத் தலைவர் ஜி.ராணி, கரூர் மாவட்டத் தலைவர் கே.சக்திவேல் மற்றும் மாவட்டச் செயலாளர் இரா.முத்துச்செல்வன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியைப் பெற்றுத்தரவும், குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நீதிக்கான போராட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தனர்.
2
3
121
கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் புரட்சியாளர் சேகுவேரா பிறந்த தினம் மற்றும் பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழாவையொட்டி ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க பிரச்சார பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ற தலைப்பில் பேசினார். எழுத்தாளர் மாதவராஜ் என்றும் தேவைப்படுகிறார் சே குவேரா என்ற தலைப்பில் உரையாற்றினார். பிடல் காஸ்ட்ரோ உருவப்படத்திற்கு கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
1
131
ஏகாதிபத்திய எதிர்ப்பு - கியூப ஆதரவு இயக்கம்! சோசலிச கியூபாவை நசுக்க அனைத்து வகைகளிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அண்மைக் காலமாக, பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடிகளை கியூபாவிற்கு அமெரிக்கா கொடுத்து வருகிறது. எனினும், “கடைசி கியூபக் குடிமகனின், கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம், ஒரு போதும் சரணடைய மாட்டோம்” என அறிவித்து, கியூபா போராடி வருகிறது. இந்நிலையில், உலக ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாய் மாறிப்போன மகத்தான புரட்சியாளர் சேகுவேராவின் பிறந்த தினத்தையொட்டி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, கியூப ஆதரவு இயக்கத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்திருந்தது. தமிழகத்தில், இன்று சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய மையங்களில் கியூப ஆதரவு இயக்கம் இன்று நடைபெறுகிறது. #Cuba #LongLiveCuba #SocialismIsFuture
3
10
256
ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறை இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவில்லை மாறாக பாஜகவுக்கு உதவுவதாகவே அமைகிறது. இதுபோன்ற செயல்களின் மூலம், ராகுல் காந்தி பாஜகவின் நலன்களுக்குத் துணைபோகும் ஒரு சூழலை உருவாக்குகிறார். தோழர் பினராயி விஜயன், கேரள முன்னாள் முதலமைச்சர் #CPIM #ED #ராகுல்காந்தி #ModiGovt
3
18
356
ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறை இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவில்லை மாறாக பாஜகவுக்கு உதவுவதாகவே அமைகிறது. இதுபோன்ற செயல்களின் மூலம், ராகுல் காந்தி பாஜகவின் நலன்களுக்குத் துணைபோகும் ஒரு சூழலை உருவாக்குகிறார். தோழர் பினராயி விஜயன், கேரள முன்னாள் முதலமைச்சர் #CPIM #ED #ராகுல்காந்தி #ModiGovt More: youtube.com/shorts/xVLh1DDGn…
1
7
27
728
100 நாள் வேலைத் திட்டத்தை நம்பியிருந்த மக்களின் வயிற்றில் அடித்த மோடி அரசு! - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #June19Protest #SaveLabourRights #WorkersRights #100DaysWork More: youtu.be/LNOkiIL-wNQ
2
8
179
“ஒரு மனிதனின் வாழ்க்கை பூமியிலுள்ள பணக்காரனின் எல்லா சொத்துக்களையும் விட ஒரு மில்லியன் மடங்கு அதிகம்” - தோழர் சேகுவேரா (14 ஜூன் 1928 - 9 அக். 1967) கொல்லப்பட்ட நாள் இன்று... #Comrade #CheGuevara #CommunistLeader #Revolution #Socialism #Cuba #ClassStruggle #Communism #SocialismIsFuture
5
18
411
முற்போக்கு எழுத்தாளர் தோழர் கு.சின்னப்ப பாரதி நினைவு தினம்! #Comrade #CommunistLeader
1
6
192
உலகையே நேசித்த பெருங்காதல் தோழர் சேகுவேரா (14 ஜூன் 1928 - 9 அக். 1967) பிறந்த நாள் இன்று. #Comrade #CheGuevara #CommunistLeader #Revolution #Socialism #Cuba #ClassStruggle #Communism #SocialismIsFuture
6
17
492
புரட்சியாளர்களுக்கு அதீத மனிதத்தன்மையும், நேர்மை மற்றும் நியாய உணர்வும் அவசியம் – தோழர் சேகுவேரா #CheGuevara #KarlMarx #Revolution #Socialism #Communism #MarxistQuotes #QuoteOfTheDay #motivationalquotes
2
8
25
498
உலகையே நேசித்த பெருங்காதல் தோழர் சேகுவேரா (14 ஜூன் 1928 - 9 அக். 1967) பிறந்த தினம் இன்று. #Comrade #CheGuevara #CommunistLeader #Revolution #Socialism #Cuba #ClassStruggle #Communism #SocialismIsFuture More: youtu.be/SeaMdFI8aS0?si=hdKT…
11
18
486
கியூபா தனித்து இல்லை; உலக மக்கள் அனைவரும் அவர்களுடன் இருக்கிறார்கள்! - தோழர் ஐ.ஆறுமுக நயினார், மாநிலக்குழு உறுப்பினர், #CPIM #FidelCastro #Cuba #CubanRevolution #CheGuevara #USAggression #EconomicWar More: youtu.be/ZOH3lS25ctQ
4
14
290
திருத்தணியில் பழங்குடியின கொத்தடிமைச் சிறுவன் சுரேஷ் அடித்துப் படுகொலை! குற்றவாளிகள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டங்களில் வழக்கு பதிவு செய்து பிணையில் வெளிவரவிடாமல் கடும் தண்டனை வழங்கிடுக! தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி எம்.ஜி.ஆர்.நகர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40), முருக்கம்பட்டு கிராமத்தில் குத்தகை நிலத்தில் கூட்டுப்பண்ணை விவசாயம் செய்து வருகிறார். அவரது நண்பர் வினோத் மூலம், திருத்தணி தாமரைக்குளம் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தனிப்பெண் வெண்ணிலா (38) மற்றும் மகன்கள் சுரேஷ் (15), சூர்யா (7), தேவா (3) ஆகியோரை தன் பண்ணையிலேயே தங்க வைத்து கொத்தடிமைகளாக வேலை செய்ய வைத்துள்ளார். இந்நிலையில் 13.02.2026 அன்று சிறுவன் சுரேஷ் மேய்த்துக் கொண்டிருந்த 50 கோழிகளும், 2 ஆடுகளும் காணாமல் போனதாகக் கூறி, சாதியவாதி பாலமுருகன், அவரது மனைவி புவனா, மகள் காமாட்சி ஆகியோர் சுரேஷை தூணில் கட்டி வைத்து இரும்பு கம்பி, சுத்தியலால் சிறுவன் சுரேஷை அவனது தாயின் கண்ணெதிரே கடுமையாக தாக்கியுள்ளனர். இக்கொடூர தாக்குதலில் சிறுவன் சுரேஷ் உயிரிழந்தான். அவனது உடலை அதே பண்ணையிலேயே புதைத்து, அதன் மீது சிமெண்ட் தளம் போட்டு பூசியுள்ளனர். இச்செய்தியை வெளியில் சொல்லிவிடக் கூடாது என்பதால் வெண்ணிலாவையும் அவரது இரு மகன்களையும் பாலமுருகன் அவரது பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்தரவதை செய்துள்ளான். தன் மகனை இழந்து கடும் மன உளைச்சலுடன் அடைபட்டு கிடந்த வெண்ணிலா 4 மாதங்கள் கழித்து 10.6.2026 அன்று தப்பித்து வெளியே வந்து திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் இக்கொடூர செயல் வெளியே தெரிய வந்துள்ளது. இக்கொடூர வன்கொடுமையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. திருத்தணி காவல் நிலையத்தில் குற்ற எண் 0322 / 2026 ஆக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தமிழ்நாடு பெண்கள் மீதான துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் பாலமுருகன், புவனா, காமாட்சி, வினோத் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட வெண்ணிலா மற்றும் அவரது குழந்தைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.மோகனா, தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் ஏ.வி.சண்முகம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாட்ட செயலாளார் ஆர்.தமிழரசு மற்றும் ஏ.அந்தோணி, அப்துல் அகமது ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின் கீழ் இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. உடனடியாக இச்சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகள் பிணையில் வெளிவரவிடாமல் வழக்கை நடத்தி கடும் தண்டனை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய தீர்வுதவி, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது என்று மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
3
6
303
"மின்வெட்டு குறித்து அமைச்சரின் பதில் ஏற்புடையது அல்ல!" - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #PowerCutIndia #TNPowerCut #TNGovtActNow More: youtube.com/shorts/dNbzpz6OQ…
7
15
384
சேலத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
1
8
12
313
அமலாக்கத்துறைக்கும் மோடி அரசுக்கும் உதவியாளராகச் செயல்படுவதை நிறுத்துங்கள்! "யாரும் ராகுல் காந்தியை பினராயி விஜயனை கட்டியணைக்கச் சொல்லவில்லை. மாறாக, பினராயி விஜயன் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்யக் கோருவதன் மூலம், அவர் அமலாக்கத்துறைக்கும் மோடி அரசுக்கும் ஒரு உதவியாளராகச் செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். அது எதிர்க்கட்சித் தலைவரின் வேலை அல்ல." - தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர் #CPIM #ED #ராகுல்காந்தி #ModiGovt
1
5
20
347
கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாதது எங்கள் செங்கொடி இயக்கம்! - தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர்,#CPIM #TVKK #JosephVijay #LeftParties #TamilNaduPolitics #PeoplesGovernment #Secularism #PrincipledSupport #PeopleFirst #SocialJustice More: youtube.com/shorts/x8JSwxHjK…
11
65
438
12,556