Joined November 2022
11,655 Photos and videos
ஈழத்தமிழர்கள் மீது இலங்கை சிங்கள இனவாத அரசால் நடாத்தப்பட்ட இனப்படுகொலைகள் 1956-2009 (பகுதி 01) 1:-இக்கியாகலை படுகொலை 05.05.1956 150பேர் உயிரிழப்பு 2:-1956 இனப்படுகொலை 01.05.1958 300க்கு மேல் உயிரிழப்பு 3:-தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை 10.01.1977 9பேர் உயிரிழப்பு
5
93
173
27,414
சகோதரி காளியம்மாளை கட்சியில் இருந்து நீக்கியதற்காகவும் கட்சியின் இணைய பாசறை பொறுப்பாளரின் ( @Sunandha_TS ) அவர்களின் செயற்பாடு மீது குற்றம் சுமத்தியும் கட்சிக்குள் நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும் என சங்க உறுப்பினர்கள் கட்சியின் தலைமையை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்கள் இதற்கு கட்சியின் தலைமையை பதில் கூறுமா? @Seeman4TN கட்சியின் துணை பொதுச்செயலாளரின் பதில் என்ன? @PackiaSe
சகோதரி காளியம்மாளை கட்சியை விட்டு நீக்கியதற்காக நியாயம் கேட்டு போராடும் அவரது ஆதரவாளர்கள்..! துரோகம் வீழட்டும் 🔥🔥🔥 (இதே குழுதான் X தளத்தில் அவரை வழிநடாத்தியதுவும் குறிப்பிடத்தக்கது)
1
4
101
வன்னியின் மைந்தன் retweeted
Hearing that the amazing #tamil Dr. Varatharajah who save so many 1000s of ppl in 2005-9 in North & East of #srilanka in war & was then wrongly detained - has had a heart attack in Canada. It would be tragic to loose him now.
1
6
21
1,260
வன்னியின் மைந்தன் retweeted
இந்த சீன் எனக்கு வேற எங்கேயோ சிங் ஆகிறமாதிரி இருக்கு … உங்களுக்கும் அப்படி தோன்றினால் லைக் ஷேர் பண்ணாதிங்கோ அவருக்கு பிடிக்காது 🤣🤣🤪
2
2
4
180
வன்னியின் மைந்தன் retweeted
பெருசு நீங்க அடிச்சு விட்ட புழுகுகதைக்கு ஏற்பாக உங்கள இப்படித்தான் திட்டனும் போல தோன்றியது நான் அப்படி செய்ய மாட்டேன் …. ஆனால் @karikalaseelan அண்ட் ஈழநேசனும் திட்டுவது உங்களுக்கு சரியாக பொருந்துகிறது @KariRuban அண்ணே x.com/_outisk/status/2066622…
2
4
9
834
இலங்கையில் அதிக எண்ணிக்கையான 380 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட மனித புதைழியாக செம்மணி மனித புதைகுழி இன்றைய தினம் (17) பதிவாகியுள்ளது இதற்கு முன்னர் மன்னார் சதொச மனித புதைகுழியில் 376 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்தது
15
23
360
செம்மணி மனித புதைகுழி மூன்றாம் கட்டம் நாள்-27 17.06.2026 இன்றைய அகழ்வின் போது மேலும் புதிதாக 14 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் கானப்பட்டுள்ளன செம்மணி மனித புதைகுழி அகழ்வாயின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 380 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவற்றுள் 362 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன 380 மனித எலும்புக்கூட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் செம்மணி மனித புதைகுழி தற்போது இலங்கையில் அதிகளவான மனித எலும்புக்கூடுள் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியாக பதிவாகியுள்ளது இதற்கு முன்னர் மன்னார் சதொச மனித புதைகுழியில் 376 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்தன
1
5
6
106
"பெண்கள் படையினருக்கு விருந்தாகட்டும்" "அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்" என்று இறுதி யுத்தம் மிகத் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் படையினர் மத்தியில் உரையாற்றியதாக அந்நாளில் சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன இன்று அந்த இணையத்தளங்கள் செயல்பாட்டில் இல்லா விட்டாலும் அச்செய்தியை மேற்கோள் காட்டி கீற்று இணையத்தளத்தில் 2010 ஆம் ஆண்டு மகளிர் தினத்தையொட்டி ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது அதிகாரமும் இனவெறியும் கலந்த கொடூர அரசியலின் பெயரில் பலரது இரத்தத்தை சிந்தச் செய்தவர் இன்று தம்மை கைது செய்ய வேண்டாம் என்று நீதிமன்றத்தின் முன் இறைஞ்சுகிறார் எந்தச் சட்டத்தை பயன்படுத்தி அப்பாவி இளைஞர்களை கைது செய்து கொடுமைப்படுத்தினார்களோ அதே சட்டத்தின் முன் இன்று அவர்கள் தஞ்சம் தேடி நிற்கின்றனர் காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டு இதுவாகும் அதிகாரம் என்பது நிரந்தரமானதல்ல சட்டத்தை தமது கையில் வைத்திருப்பதாக எண்ணியவர்களும் ஒருநாள் அதே சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டிய சூழலை சந்திக்க நேரிடலாம் அரசின் வலிமையை நம்பி செயல்பட்டவர்கள் பின்னர் நீதிமன்றத்தின் கருணையும் சட்டத்தின் பாதுகாப்பையும் நாடும் தருணங்கள் வரலாற்றில் பலமுறை நிகழ்ந்துள்ளன இதற்கு உதாரணங்கள் உள்ளன "கம்போடியாவில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கும் துன்பத்திற்கும் காரணமானதாகக் கருத்தப்படும் பொல்பொட் ஆட்சி ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாகதா தோன்றியது ஆனால் இறுதியில் அந்த ஆட்சியும் சிதறிப் போனது அதிகாரத்தின் உச்சியில் இருந்தவர்கள் தனிமையிலும் அச்சத்திலும் தங்கள் இறுதிக் காலத்தை எதிர்கொண்டனர் அவர்களின் அதிகாரம் நிலைத்திருக்கவில்லை ஆனால் அவர்கள் ஏற்படுத்திய மனிதத் துயரத்தின் நினைவுகள் மட்டும் வரலாற்றில் நிலைத்து விட்டன" அதே போல் எந்த நாட்டிலாயினும் அதிகாரம் மனிதாபிமானத்தை மீறி செல்லும் போது சட்டம் அரசியல் பழிவாங்கலின் கருவியாக மாறும் போது இனவெறி அரசின் மொழியாக மாறும் போது அதன் விளைவுகள் ஒருநாள் திரும்பி வந்து கேள்வி கேட்கும் அது தனிநபர்களிடமும் கேட்கும் அமைப்புகளிடமும் கேட்கும் அரசுகளிடமும் கேட்கும் இன்று தங்களை கைது செய்ய வேண்டாம் என்று நீதிமன்றங்களின் முன் முறையிடும் சிலர் கடந்த காலத்தில் அதிகாரத்தின் பெயரில் எத்தனை பேரின் குரல்களை பொருட்படுத்தாமல் விட்டார்கள் என்பதையும் வரலாறு நினைவுபடுத்துகிறது நீதியின் நடை மெதுவாக இருக்கலாம் ஆனால் வரலாற்றின் நினைவு நீண்டது அதிகாரம் மறைந்து போகலாம் பதவிகள் மாறலாம் ஆனால் மனித உரிமை மீறல்களும் அநீதிகளும் பற்றிய கேள்விகள் எளிதில் மறைந்து போவதில்லை keetru.com/literature/essays…
1
5
5
135
பிள்ளையான் மீது மேலும் 5 கொலை குற்றச்சாட்டுக்கள்
2
1
99
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி என்கின்ற இடத்தில் தமிழ்த் தேசத்தை பிரித்தானியர் ஆக்கிரமித்த காலம் தொட்டு பூர்வீகமான உறுதியைக் கொண்ட அமைந்த தமிழர்களின் காணியில் சிங்களை தேசத்தைச் சேர்ந்த அரசியல் செல்வாக்குள்ள நபர் ஒருவருக்கு உப்பளம் அமைப்பதற்காக மகாவலி அபிவிருத்தி அதிகார சபை காணி வழங்கிய செயற்பாடு சட்டவிரோதமானதகும் இந்த செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டு அந்தக் காணி உறுதி வைத்திருக்கும் உரிமையாளரிடம் வழங்கப்பட வேண்டும் கயேந்திரக்குமார் பொன்னம்பலம் MP ( @GGPonnambalam ) அவர்கள் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்
1
3
134
வரிசையாக கைது செய்யப்படும் ராஜபக்சே குடும்பத்தின் உறுப்பினர்கள்
1
1
2
197
வன்னியின் மைந்தன் retweeted
🛑வரலாற்றைப் படுகொலை செய்யும் கோழைத்தனத்திற்கு எதிராக... பொய்களையும், சுயநலப் புனைவுகளையும் தோலுரித்துக் காட்டுவோம். அண்மைக்காலமாக ஈழத்தமிழ் புலம்பெயர் சமூக ஊடகங்களில் ஒரு புது விளையாட்டு தொடங்கியிருக்கிறது. “தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் சார்ந்தும், தமிழீழ விடுதலைப்புலிகள் சார்ந்தும், ஆதாரமற்ற, சரிபார்க்கப்படாத தனிப்பட்ட கதைகளை recording space லைவ் பேச்சுகளிலும், போஸ்ட்களிலும் பரப்புவது அதிகரித்திருக்கின்றது” இவ்வாறான தவறான வரலாற்றுப் பிறழ்வுமிக்க செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகி, பின்னர் “வரலாறு” ஆக மாற்றப்படும் அபாயம் உண்மையில் உள்ளது என்பதை உணர்ந்தும் எம்மால் கடந்து செல்ல முடியாது.. தலைவர்.வே பிரபாகரன் அவர்கள் பற்றிய உண்மையான வரலாறு, அவரது வாழ்க்கை, தமிழீழ விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள், 2009 முடிவு என அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தனிப்பட்ட வருகை/சாப்பாடு போன்ற கதைகள் - இவை நம்பகமான பல ஆதாரங்களுடன் (multiple corroboration) இருந்தால் மட்டுமே வரலாற்று உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படும். ஒரு லைவ் பேச்சில் ஒருவர் சொன்னதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு “வரலாறு” என்று பரப்புவது தவறு. வரலாற்றைப் பாதுகாப்பது முக்கியம். உணர்ச்சி, அரசியல் அல்லது “ஹீரோ” உருவாக்கும் நோக்கத்துடன் உண்மைகளை மாற்றுவது எதிர்காலத்தில் பெரிய பிரச்சினையை உருவாக்கும் இது போன்ற சரிபார்க்கப்படாத தனிப்பட்ட கதைகள்/அனெக்டோட் (Anecdote) தான். (அதாவது நகைச்சுவையான சிறு கதையே அனெக்டோட் (Anecdote) எனப்படும். தமிழில் இது உபகதை, குட்டிக்கதை என்றும் சொல்வார்கள் ) ஆகவே உண்மைகள் உறங்குவதில்லை என்று உறுதியாக நம்புகின்றவன் என்ற வகையில், நான், 1979ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பயிற்சி முகாமில் காலடி வைத்தவன். தலைவர் பிரபாகரனின் குரல் என் செவிகளில் முதன் முதலில் ஒலித்த நாளிலிருந்து, அவரது ஒவ்வொரு அடியையும், ஒவ்வொரு முடிவையும், ஒவ்வொரு தியாகத்தையும் நேரடியாகக் கண்டவன். காட்டிலும், மலையிலும், கடலிலும், இரவு-பகலாக நடைபெற்ற போராட்டத்தின் ஒவ்வொரு துளி வியர்வையிலும், இரத்தத்திலும் பங்கெடுத்தவன். அந்தப் புலிகள் இயக்கத்தின் உண்மையான வரலாற்றை என் எலும்புகளில் பதித்துக் கொண்டவன். ஆனால் இன்று, புலம்பெயர் தளத்தில் சிலர் செய்யும் செயல் என் இரத்தத்தை கொதிக்க வைக்கிறது. 🔊 “தலைவர் அவர்கள் சீமானின் அப்பா வீட்டுக்கு வந்து சாப்பிட்டார்”, “இப்படிச் சொன்னார்”, “அப்படிச் செய்தார்” என்றெல்லாம் ஆதாரமற்ற, அடிப்படையற்ற, புனைந்து பரப்பப்படும் அவதூறுகளைப் பார்க்கும் போது, எம் உள்ளம் கொதிக்கிறது. 🛑இது தலைவருக்கு செய்யும் அவமானம் மட்டுமல்ல. இது புலிகள் இயக்கத்தின் முழு வரலாற்றுக்கும் செய்யும் படுகொலை. தலைவர் பிரபாகரன் ஒரு கௌதம புத்தர் போன்ற முற்றும் துறந்த ஞானி அல்ல; அவர் ஒரு புரட்சியாளர். அவர் தவறுகள் செய்திருந்தால் அதையும், சாதனைகள் செய்திருந்தால் அதையும், உண்மையாகவே பதிவு செய்ய வேண்டும். ஆனால் ஒரு recording space பேச்சில் ஒருவர் சொன்ன “கதை”யை ஆதாரமாக வைத்து பலர் வரலாற்றை எழுத முயல்வது- இது மிகப் பெரிய துரோகம். இது எமது தியாகிகளின் இரத்தத்திற்கு இழைக்கப்படும் அநீதி. 🔊மேலும் கொடுமை என்னவென்றால், இந்தப் பொய்களை எதிர்த்து நாங்கள் பேசும் போது, சிலர் உடனடியாக ஒரே ஆயுதத்தை உபயோகிக்கிறார்கள்: “திராவிடக் கைகூலி” என்று முத்திரை குத்தி, விவாதத்தை முடித்து விடுகிறார்கள்... இது மிகப் பெரிய வரலாற்றுத் துரோகம். 1979 இல் புலிகள் இயக்கத்தில் இணைந்த என்னைப் போன்றவர்களை, தமிழ்நாட்டு உறவுகளை, இந்தியத் தமிழ் மக்களின் ஆதரவை - “திராவிடக் கைகூலி” என்று முத்திரை குத்தி ஒதுக்குவது என்பது, எமது போராட்டத்தின் ஒரு பெரும் பகுதியை மறுப்பதாகும். தமிழீழப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டு மண் கொடுத்த உதவி, இரத்தம், அரசியல் ஆதரவு இவற்றையெல்லாம் ஒரே அடியில் மறுப்பதாகும். தலைவர் பிரபாகரனே, தமிழ்நாட்டுத் தோழர்களுடன், இந்தியத் தமிழ் மக்களுடன் கொண்டிருந்த உறவை நாங்கள் அறிவோம். அந்த உறவை மறைத்து, “திராவிட” என்ற வார்த்தையை அவதூறாகப் பயன்படுத்தி, உண்மையான புலிகள் இயக்கப் பயணிகளை ஒதுக்குவது - ஓர் வரலாற்றுப்பிறழ்வு மிக்க கற்பிதமேயாகும் ? 👉உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்றால் மௌனம் சாதியுங்கள். ஆனால் உண்மையை அறிந்த நாங்கள் மௌனம் சாதிக்க மாட்டோம். 👉பொய்களால் தலைவரைப் புனிதப்படுத்த முயல்வது அவருக்கு அவமானம். 👉உண்மையைப் பேசுபவர்களை “திராவிடக் கைகூலி” என்று ஒதுக்குவது இயக்கத்திற்கே செய்யும் துரோகம். 🔊நாங்கள் உயிர் துறந்த தோழர்களின் பெயரால் சொல்கிறோம்: 💥வரலாறு என்பது உணர்ச்சியல்ல-உண்மை. 💥புலிகள் இயக்கம் என்பது புனைவல்ல -உண்மையான தமிழ்த்தேசியத்தின் அடையாளம். எனவே, எமது தலைவரின் உண்மையான வரலாற்றைப் பாதுகாப்போம். எமது இயக்கத்தின் உண்மையான பயணத்தைப் பதிவு செய்வோம். தமிழீழம் விடியும்! புலிகள் வரலாறு அழியாது! புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் இவண், அ.தொல்காப்பியன்
Jun 15
அடங்கொய்யா இது என்னடா புது கதையா இருக்குது!! சீமானின்ட அப்பாட வீட்ட தலைவர் போனாறாம், சாப்பிட்டாறாம் அதிட நீட்சி இப்ப தொடருதாம்.. இந்த விசயம் சீமானுக்கு தெரிஞ்சு இருந்தால் சீமான் மேடைகளில் இதை கதைக்காம விட்டிருப்பாராடா? 😂 ஈழத்து சீமான் தம்பிகளா உங்களுக்கு மனசாட்சியே இல்லையாடா!! சீமானுக்கு அடிவாங்கி குடுக்கிறதே இவனுகள் தான் சீமான் இவங்களை விட்டு தள்ளி இருந்தாலே ஒரு பிரச்சனையும் வராது!!
1
3
7
480
சான்றோருக்கு சமர்ப்பணம் தமிழிசை தென் மொழி நற்றேவன் திருமணத்தில் தேனிசை செல்லப்பா அவர்களின் தாமிழ்த்தாய் வாழ்த்து
6
46
708
வாக்குமூலம் அளிக்க வந்த யோசித்த ராஜபக்சே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது
1
6
148
இத்தாலிய நாடாளுமன்ற உறுப்பினர் மார்கோ கிரிமால்டி ( @marcogrimaldi_) முக்கிய அறிவிப்பு ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்தது ஒரு பெரிய தவறு என்றார் ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை புரிந்து கொண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று சித்தரித்தது தவறு என்று தெளிவாக கூறுனார் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்துக்கு சர்வதேச அரங்கில் ஆதரவு வலுப்பெறும் நல்ல சமிக்கை இது tamilguardian.com/content/it…
2
34
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் மக்களுடன் இறுதிவரை நின்று பணியாற்றிய வைத்தியர் வரதராஜா அவர்கள் கடுமையான உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுளாளார் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வரும் வைத்தியர் வரதராஜா அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் கடுமையான இருதய பிரச்சனைக்கு உள்ளாகியுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரை காப்பாற்றும் முயற்சியில் வைத்தியர்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது கடுமையான இருதயப் பிரச்சனையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்காக பிரார்திக்குமாறும் அவருடைய மனைவி முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இனப்படுகொலையின் போது தன்னுயிரை பணயம் வைத்து மக்களை அரவனைத்து காத்து நின்ற மனித நேயரும் இனப்படுகொலையின் வலிமை மிகு நேரடி சாட்சியமானவருமான வைத்தியர் வரதராஜா அவர்கள் தனது இருதய நோயிலிருந்து மீண்டு வந்து சர்வதேச அரங்கில் இனப்படுகொலையின் சாட்சியமாக தொடர்ந்து ஒலித்திட இயற்கை துணையிருக்கட்டும் அவர் பூரண குணமடைய நாமும் நலம்பெற இறைவனை பிரார்த்திப்போம் @drvarathan1
2
20
46
1,363
முக்கால்வாசி நிறைவடைந்த ஆக்கிரமிப்பு கொள்கிளாயில் தமிழர் நிலங்களை விழுங்கும் பௌத்த விகாரை இந்த காணொளியில் நீங்கள் காண்பது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கொள்கிளாயில் தமிழ் மக்களின் பூர்வீக மற்றும் தனியார் சொந்த நிலங்களை ஆக்கிரமித்து தற்போது முக்கால்வாசி கட்டப்பட்டு வரும் பௌத்த விகாரை (சம்போதி விகாரை) ஆகும் சட்டங்களை மதிக்காமல் தமிழ் மக்களின் பூர்வீக உரிமைகளை நசுக்கி தொடரும் இந்த கட்டுமானத்தின் பின்னணியை உலகறியச் செய்வோம் இங்க வாழ்ந்தவர்கள் யார்? கொக்கிளாய் என்பது வரலாற்று ரீதியாக இலங்கைத் தமிழர்களின் பூர்வீக தாயக நிலம் தலைமுறை தலைமுறையாக தமிழ் மீனவ சமூகங்களும் விவசாயிகளும் இந்த இயற்கை வளமிக்க கொக்கிளாய் களப்பை நம்பி செழிப்பாக வாழ்ந்து வந்தனர் இது முற்றிலும் தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த ஒரு பாரம்பரிய தமிழ் கிராமம் எப்படி இடம்பெயர்ந்தார்கள்? 1984 ஆம் ஆண்டு ஈழப் போர் தீவிரமடைந்த போது அப்போதைய இலங்கை அரசால் பாதுகாப்பு மற்றும் இராணுவத் தேவைகளை காரணம் காட்டி இங்கிருந்த தம்பி மக்கள் தங்களின் சொந்த நிலங்களை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் 28 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாகவும் இடம்பெயர்ந்தும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த தமிழ் மக்கள் 2011-2012 காலப் பகுதியில் தான் தங்களின் சொந்த கிராமத்திற்கு மீள்குடியேறத் தொடங்கினர் பறிபோகும் தமிழர்களின் பூர்வீக நிலம் போரினால் இடம்பெயர்ந்து மீண்டும் தங்களின் சொந்த மண்ணிற்கு திரும்பிய தமிழ் மக்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி மட்டுமே அவர்களின் சொந்தக் காணிகள் மற்றும் கொக்கிளாய் அரசு மருத்துவமனைக்கு சொந்தமான நிலங்கள் பௌத்த துறவிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவ பாதுகாப்போடு இந்த விகாரை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன உள்ளூர் பிரதேச சபை மற்றும் முல்லைத்தீவு நீதிமன்றம் விதித்த தடைகளையும் தமிழ் நில உரிமையாளர்களின் தொடர் போராட்டங்களையும் மதிக்காமல் தற்போது இந்த விகாரை முக்கால்வாசி கட்டப்பட்டு இறுதி நிலையை எட்டியுள்ளது அநுர குமார திசாநாயக்க அரசின் நிலைப்பாடு என்ன? மாற்றம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தற்போதைய அரசும் வடக்கு-கிழக்கில் தொடரும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் மற்றும் நில ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்த எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை அண்மையில் யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய ஜனாதிபதி விகாரைகளைச் சுற்றி இனவாதத்தை தூண்டுபவர்களை விமர்சித்துப் பேசினாலும் நடைமுறையில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் இராணுவத்தின் துணையோடு தமிழர்களின் பூர்வீக நிலங்களில் விகாரைகள் எழுப்பப்படுவதை அநுர அரசு தடுத்து நிறுத்தவில்லை முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே பௌத்த மதத்தின் முன்னுரிமையை பாதுகாப்பதிலும் மத நிறுவனங்களின் கட்டுமானங்களுக்கு மறைமுக ஆதரவளிப்பதிலுமே தற்போதைய அரசும் ஆர்வம் காட்டுகிறது தமிழர்களின் பூர்வீக நில உரிமை அநுர அரசிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது காணொளியில் தெளிவாகத் தெரியும் இந்த அநீதியையும் தமிழர்களின் அடையாளத்தை அழிக்கத் துடிக்கும் இந்த நில ஆக்கிரமிப்பையும் உலகிற்கு உரக்கச் சொல்வோம்
1
12
25
506
வன்னியின் மைந்தன் retweeted
EVENT: Decades Without Justice - Sri Lanka’s Victims of Sexual Violence in Conflict. The event will be live-streamed on YouTube on the 17th of June, 14:30 Geneva/ 18:00 Sri Lanka. Livestream link: youtube.com/live/b-ufseryBfQ
13
13
525