'தவெக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டுள்ள இலவச சைக்கிள்', உண்மையை போட்டு உடைத்த யூடர்ன்!
கெங்கபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீபரமேஸ்வர் நினைவு உயர்நிலைப்பள்ளியில், தனியார் அமைப்பு சார்பில் இலவச சைக்கிள் கொடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது. இவை தமிழ்நாடு அரசு சார்பில் கொடுக்கப்பட்ட சைக்கிள்கள் அல்ல.
இது தொடர்பாக, ஸ்ரீபரமேஸ்வர் நினைவு உயர்நிலைப்பள்ளியின் தாளாளரை யூடர்ன் சார்பில் தொடர்பு கொண்டு பேசியதில், இவ்வாறு இலவச சைக்கிள் கொடுக்கும் சேவையை நாங்கள் எட்டு ஆண்டுகளாக செய்து வருகிறோம். எங்கள் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் அமைப்பு மூலம் கிடைத்த நிதியுதவியுடன் இவ்வாறு இலவச சைக்கிள் வழங்கியுள்ளோம். இது தமிழ்நாடு அரசு சார்பில் கொடுக்கப்பட்ட இலவச சைக்கிள் அல்ல” என்று உறுதிபடுத்தினார்.
இந்நிலையில் தனியார் அமைப்பு மூலம் கொடுக்கப்பட்ட இலவச சைக்கிளை, தவெக ஆட்சியில் தரம் உயர்த்தி வழங்கப்பட்ட இலவச சைக்கிள் என்று கூறி பலரும் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.