02 - THEATRE 🎭 🎥
#ThalaivarThambiThalaimaiyil
பக்கத்து பக்கத்து வீட்டில் ஒரே நேரத்தில் நடக்கும் கல்யாணமும், சாவு வீடும். இதனால் வரும் ஈகோ மோதலை பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ஜீவா எப்படி சமாளிக்கிறார் என்பதே
கதை.
இந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையே மாட்டித் தவிக்கும் ஜீவா, எப்படி இந்தப் பிரச்சனையைச் சமாளித்து சுப காரியத்தையும், துக்க காரியத்தையும் நடத்தி வைக்கிறார் என்பதே மீதிக்கதை.
பஞ்சாயத்து தலைவராக ஜீவா செம ஃபிட். பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல் திணறும் காட்சிகளிலும், காமெடியிலும் ஸ்கோர் செய்கிறார்.
தம்பி ராமையா & இளவரசு படத்தின் பெரிய பலமே இவர்கள் இருவரின் ஈகோ மோதல்கள்தான். தம்பி ராமையாவின் டைமிங் காமெடிகள் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றன.
மாப்பிளை, மாப்பிள்ளை தம்பி
இரண்டு கதாபாத்திரங்கள் கச்சிதம்.
மலையாள இயக்குனர் நிதீஷ் சகாதேவ் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார். ஒரு சிறிய கதையை எடுத்துக்கொண்டு, அதைத் தொய்வில்லாமல் காமெடியாகக் கொண்டு சென்ற விதத்தில் ஜெயித்திருக்கிறார்.
பின்னணி இசை கதைக்குக் கச்சிதம்.
பெரிய ட்விஸ்ட்கள் எதுவும் இல்லாத எளிய கதை.
முதல் பாதியை விட இரண்டாம் பாதி எனக்குப் பிடித்திருந்தது.
இது ஒரு சீரியஸான படமல்ல. லாஜிக் பார்க்காமல், குடும்பத்தோடு ரசிக்கலாம். டீசன்ட் என்டர்டெய்னர்.
ரேட்டிங்: 3/5
@JiivaOfficial#TTT#TTTReview
தீ கொஞ்சம் குறைவு.
ஓப்பனிங் காட்சி, இடைவெளி காட்சி, கிளைமாக்ஸ் - சில காட்சிகள் நன்றாக இருந்தது.
சிவகார்த்திகேயன் - அதர்வா
காட்சிகள் ❤️
ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை செம்ம 🔥
எமோஷனல் கனெக்ட் சரியா கிளிக் ஆகல.
மொத்தத்தில் ஒரு டீசன்ட் வாட்ச் இந்த பராசக்தி.
பசில் ஜோசப் காட்சி அரங்கம் அதிர்ந்தது 🔥
#Parasakthi#ParasakthiReview
எங்க ஊரு தியேட்டர்ல TTT
போடலன்னு திருநெல்வேலி போய் பார்க்கலாம்னு டிக்கெட் புக் பண்ணுனேன்.
இப்ப என்னடானா எங்க ஊர் தியேட்டர்ல இன்னைக்கு ஈவினிங்ல இருந்து ஷோ போட்டு இருக்கான் 😭😭
#TTT#ThalaivarThambiThalaimaiyil
சிறை திரைப்படத்தில் வர அந்த பையன படம் பார்க்கும்போது எங்கேயோ பார்த்த மாதிரியே இருந்துச்சு.
"மாஸ்டர்ல அர்ஜுன் தாஸ் ஓட சின்ன வயசு கேரக்டரா பண்ணி இருக்காப்ல"
சிறை, அப்துல் என்ற கதாபாத்திரத்தில் மிக எதார்த்தமாக நடித்துள்ளார். ஒரு கைதியின் பயம் மற்றும் தவிப்பை அழகாகக் காட்டியுள்ளார்.
வரும் காலங்களில் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க பாராட்டுக்கள் 👏
#Sirai@7screenstudio
படத்தின் வேகம் முதல் பாதியில் சற்று மெதுவாக உள்ளது. இரண்டாம் பாதியில் வரும் சில விசாரணைக் காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது போலவும், ஒருவித சலிப்பையும் ஏற்படுத்துகின்றன.
மொத்தத்தில் ஆஹா, ஓஹோ அளவிற்கு எல்லாம் இல்லை.
இது ஒரு ஆவரேஜான படமே.