*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை,
*மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA* அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
அங்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு *போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.R.அபிஷேக்* மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாண்புமிகு அமைச்சர் அவர்கள், தொகுதி மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை சார்ந்த திட்டங்களை விரைந்து முடிப்பது குறித்தும் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இவ்விழாவில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.