நமஸ்காரம் 🙏
நாம் ஒவ்வொருவரும் கூடுமானவரை அடிக்கடி குக்கிராமங்களில் உள்ள கோயில்களுக்கு செல்ல வேண்டும். அப்படி செல்லும்போது முக்கியமாக சிலவற்றை மனதில் கொண்டு முடிஞ்சவரை அவற்றை நிவர்த்தி செய்தல் அவசியம்.
கோயில்களில் மடப்பள்ளி சேவை செய்பவர்கள் ரொம்ப முக்கியம்.
ஒவ்வொரு கோயிலிலும் நாம் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியது.
1.வைஷ்ணவ மற்றும் சிவ ஆலயங்களில் மடப்பள்ளி கைங்கர்யம் செய்பவர்கள் யார்?அவர்கள் சந்தோஷமாக போதுமான அளவு வருமானத்துடன் இருக்கிறார்களா? நகரத்தில்
சராசரியாக ஒரு கோயிலில் அர்ச்சகருக்கு தினமும் தட்டில் விழும் பணத்தை ஒரு வாரம்,10நாட்கள் ஆனாலும் குக்கிராமங்களில் கோயில் கைங்கர்யம் பண்ணுபவர்கள் கண்ணால் பார்க்க முடியாத பல கோயில் அர்ச்சகர்கள் இன்றும் சிறிய குக்கிராமங்களில் உள்ள கோயில்களில் தர்மத்துக்காக சேவை செய்து புண்யம் சம்பாதித்து கொண்டு வந்துள்ளார்கள்.இதில் பலருக்கு மாச வருமானமே இல்லை.
இன்றைய நிலை நீடிக்குமானால் இவர்களை வருங்காலத்தில் இந்த உத்யோகத்தில் பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறி. இப்போதே இவர்களை எல்லா கோயில்களிலும் பார்க்கறது மிகவும் அபூர்வம்.
2.குக்கிராமங்களில் கோயில்ல சிவாச்சார்யாள் யாரு,அர்ச்சகர் யாரு,அவாளுக்கு வருமானம் சரிவர போதுமான அளவு வருகிறதா? அவர்கள் குடும்ப நிலை பற்றி புரிதல்,தெரிதல் அவசியம்.
குக்கிராமங்களில்
ஸ்வாமிக்கு தினப்படி நெய்வேத்யம், பூஜை நடக்க இவர்கள் ஆரோக்கியமாக சந்தோஷமாக இருத்தல் ரொம்ப ரொம்ப முக்கியம்.
குக்கிராமங்களில் அடிக்கடி கோயில்களுக்கு நேரில் சென்று
அவர்களுக்கு நாம் நிறைய பொருள் உதவி செய்யவேண்டும். குக்கிராமங்களில்
இவர்கள் இல்லையேல் நாம் இல்லை. குருக்கள்ட்ட க்ளோஸா போய் விஜாரிச்சா பல உண்மைகள் தெரியவரும். ஊரில் இருக்கும் அந்த தெய்வம் அங்க இருந்து வெளில போன சில குடும்பங்களுக்கு குல தெய்வம்னு இருந்தும் அவர்கள் நேரில் ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வருவதில்லையாம். குல தெய்வம்னா எப்படி தெரியுமோ?
பெரிய இடி அந்த குடும்பத்துல வந்து இறங்கினதும் யாரோ சொல்லி,அலறிப்பொடைத்துக்கொண்டு வருவதாக தெரிகிறது.
கோயிலில் கைங்கர்யம் பண்ணறவா ள்ளாம் தெய்வத்துக்கு நிகராக ரஷிக்கப்பட வேண்டியவர்கள்.
3. பிறகு நாயனம்,வாத்யம் வாசிப்பவர்கள்,ஓதுவார்,வேதம் சொல்பவர்கள்,குக்கிராமங்களில்
கோயிலில் இருக்கும் சிப்பந்திகள், உழவாரப் பணி செய்பவர்கள் என்று இது போன்ற முக்கியமான,மிக முக்கியமான VIPs களை நன்றாக இருக்கிறார்களா என்று அவர்களை கண்டு நேரில் விஜாரித்தல்,இயன்ற
பண உதவி புரிதல் மிக மிக அவசியம்.
என்னுடைய நெருங்கிய நண்பர்,அவரது மனைவி இருவரும் குக்கிராமங்களில் உள்ள கோயில்களுக்கு செல்லும்போது வேஷ்டி,புடவை,(அலமாரியிலிருந்து புதுசா,யூஸ் பண்ணாதவை,ஓதி குடுத்த ட்ரெஸ்கள்)சில்லறை காசு,ரூபா நோட்டுகள், நிறைய இட்லி,சாம்பார் இவைகளுடன் சென்று தரிசனம் ஆனதும் இவைகளை விநியோகம் சுமார் 20,22 வருஷமா செய்கிறார்கள். அவர்கள் குடும்பம் இன்று அளவற்ற மகிழ்ச்சியுடன்,சௌக்கியமா இருக்கு.
4. சனாதனம் தழைக்க,ஆலயங்கள்
சிறப்புடன் செயல்பட குக்கிராமங்களில் இருக்கும்
இவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி துகையை முடிந்த போது ஒவ்வொரு தடவையும் கண்டிப்பாக தனி தனியாக ஒவ்வொருவருக்கும் அடிக்கடி தரணும்.
5. வரும் காலங்களில் நாம் மட்டுமின்றி,நம் சந்ததிகளுக்கும் குக்கிராமங்களில் உள்ள
கோயில்கள் பற்றி சொல்லி குடுத்து அவர்கள் நன்றாக இருந்தால் நம் குடும்பம் தழைத்தோங்கும் என்று சொல்லி அதன்படி நடக்க செய்தால் நம் சந்ததிகள்,அவர்களின் சந்ததிகள் அமோகமா இருப்பார்கள்.
குக்கிராமங்களில் உள்ள
கோயில்களுக்கு உதவுவோம்.
அந்த கோயில்களை நன்கு பாதுகாப்போம்.
நமஸ்காரம்🙏.