அமெரிக்க விண்வெளி நிறுவனமான
#NationalSpaceSociety (NSS) பன்னாட்டு மாணவர்களுக்கிடையே நடத்திய விண்வெளி அறிவியல் போட்டியில், உலகின் 19 நாடுகளிலிருந்து 26,725 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் விஜேந்திரகுமார் – மேனகா இணையரின் அன்புமகன் அர்ச்சிகன் 5ஆவது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.
இலங்கை அரசால் இனவழிப்புக்கு உள்ளாகி மண்ணையும், மக்களையும், உறவுகளையும், உடைமைகளையும் இழந்து விடுதலைப்போரின் வலி சுமந்து, ஈழத்தாயகத்திலிருந்து பெற்றோருடன் தமிழ்நாட்டில் ஏதிலியாக வாழ்ந்துவரும் நெருக்கடிமிகு நிலையிலும், கிடைக்கப்பெற்ற மிகச்சொற்ப வாய்ப்பினைப் பயன்படுத்தி, தமது அயராத முயற்சியினாலும், அபாரத் திறமையினாலும் தமிழினத்தைத் தலைநிமிரச் செய்துள்ளதோடு, தன் இனத்தை அடிமைப்படுத்திய இலங்கை நாட்டிற்கும் சேர்த்து பெருமை சேர்த்துள்ள அன்புமகன் அன்புமகன் அர்ச்சிகனுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!
கடுமையான உழைப்பும், தளராத மன ஊக்கமும் இருந்தால் எத்தகைய சூழலிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து, புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் அன்புமகன் அர்ச்சிகனுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
I am proud and happy to learn that Archchihan, son of Vijendra Kumar and Menaka, who migrated from Tamil Eelam and are living in Tamil Nadu, has won 5th place in the Gerard K. O’Neill Space Settlement Contest conducted by the U.S. space agency, the National Space Society (NSS), at the international level.
I express my love and appreciation to Archchihan, who has seized the smallest opportunity to showcase his brilliance and made not only the Tamil race stand tall but also made Sri Lanka that treated Tamils has slaves with his untiring efforts and extraordinary skills, bearing the brunt of the decades-long war, having suffered genocide perpetrated by Sri Lanka and losing the land, loved ones, and possessions, and living in Tamil Nadu with his parents, far away from the Tamil Eelam motherland.
My heartiest congratulations to Archchihan, who has proved that anything can be achieved under any hardship with hard work and untiring self-motivation and has set an example for the Tamils living in exile.
naamtamilar.org/anel8t