#TVKManifesto2026
1. ஒவ்வொரு பெண்ணும் அதிகாரம் மிக்கவர் என்பதை பறை சாற்றும் வெற்றி மகளிர் திட்டங்கள்
- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500
- ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர்கள்
- மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம் பட்டுச்சேலை
- பள்ளி மாணவர்களின் அம்மாக்களுக்கு ₹15,000 கல்வி உதவி
- மகளிர் குழுக்களுக்கு ₹5 லட்சம் வட்டியில்லா கடன்
2. உலகத் தரம் வாய்ந்த கல்விக்கான உத்தரவாதம்
- உறைவிடத்துடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள்
- அனைத்து அரசுப்பளிக்களிலும் உலகத்தர நவீன கட்டமைப்பு
- உயர்கல்விக்கு ₹20 லட்சம் வரை கல்விக்கடன்
- AI தொழில்நுட்பத்துடன் போட்டித் தேர்வு பயிற்சி
3. மக்கள் நலம் பேணும் சுகாதார உத்தரவாதம்
- போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு
- குடும்பத்திற்கு ₹25 லட்சம் மருத்துவக் காப்பீடு
- அனைத்து ஊர்களிலும் நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை
- ஆண்டுதோறும் கட்டணமில்லா சுகாதாரப் பரிசோதனை
4. இளைஞர்களுக்கு ஏணிப்படிகளாக இருக்கும் உத்தரவாதத் திட்டங்கள்
- வேலையில்லா பட்டதாரிகளுக்கு ₹4,000 வரை உதவித்தொகை
- ₹10,000 வரை ஊதியத்தில் 5 லட்சம் இன்டர்ன்ஷிப்
- தொழில் தொடங்க ₹25 லட்சம் கடன்
- ₹18,000 ஊதியத்தில், 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
- அரசுத் தேர்வுகளுக்கு கால அட்டவணை
5. உழவர்கள் உள்ளம் மகிழும் திட்டங்க
- 5 ஏக்கர் வரை முழு கடன் தள்ளுபடி; அதற்கு மேல் 50% தள்ளுபடி
- நிலமுடைய விவசாயிகளுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி
- MSP: நெல் குவிண்டால் ₹3,500; கரும்பு டன் ₹4,500
- விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ₹10,000
- 5 லட்சம் சோலார் பம்புகள், 100% பயிர் காப்பீடு
6. மீனவர் நலன் காக்கும் மேம்பாட்டுத் திட்டங்கள்
- மீன்பிடித் தடைகால நிவாரணம் ₹27,000
- ₹25 லட்சம் விபத்துக் காப்பீடு
- மீன்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP)
- அனைத்து மீனவர்களுக்கும் வீடுகள்
7. மக்கள் உரிமை, கண்ணியமான வாழ்க்கை மற்றும் சமூகப் பாதுகாப்பு உத்தரவாதம்
- முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ₹3,000
- மாதம் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்
- அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர்
- நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா
8. அரசு ஊழியர்கள் நல உத்தரவாதம்
- மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)
- ஒப்பந்த ஊழியர்களுக்கு ஐந்தாண்டில் பணி நிரந்தரம்
- அங்கன்வாடி ஊழியர்களுக்கு ₹18,000; சுகாதார உதவியாளர்களுக்கு ₹10,000 ஊதியம்
- பணி ஓய்வின் போது ₹15 லட்சம்
- சம வேலைக்குச் சம ஊதியம், பணி நிரந்தரம்
9. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான உத்தரவாதம்
- 2036-க்குள் $1.5 டிரில்லியன் பொருளாதாரம்
- MSME-களுக்கு ₹15,000 கோடி ஆதரவு, ₹50,00,000 மேம்பாட்டு நிதி
- மாவட்ட வாரியான வளர்ச்சிக்கான 'மாஸ்டர் பிளான்'
- பிரத்யேக AI அமைச்சகம், பல்கலைக்கழகம், AI நகரம்
- தமிழகத்தில் முதலீடு செய்யும் வெளிநாட்டுவாழ் தமிழர்களுக்கு 21 நாட்களுக்குள் வணிக உரிமம்
10. நேர்மையான நல்லாட்சிக்கான உத்தரவாதம்
- அரசுச் சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலில்
- அனைத்து அரசு சேவைகளுக்கும் சட்டப்பூர்வக் காலக்கெடு
- லஞ்சமில்லா நிர்வாகம்
- நிதி ஒதுக்கீட்டில் 10% திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம்
- சட்டமன்றத்தில் மக்கள் முறையீட்டுக்காக ஒருநாள்