திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவானைக்கோவில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுக்கு பேருந்து வரும் நேரத்தை துல்லியமாக தெரிந்து கொள்ளும் வகையில் பேருந்து வருகை நேர விவரம் குறித்த அறிவிப்பு பலகையை (Real Time Bus Tracking System Display Board) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தேன்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அமித்குப்தா, இ.ஆ.ப., அவர்கள், நகரப் பொறியாளர் திரு.சிவபாதம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் திரு.முத்துகிருஷ்ணன், துணை மேலாளர் (வணிகம்) திரு.சுரேஷ்குமார், கோட்ட மேலாளர் திரு.ராஜேந்திரன், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#MKStalin |
#KNNehru |
#DMK |
#DravidanModel |
#Trichy |
#Thiruvanaikovil |
#Busstand |
#RealTime |
#BusTracking |
#Bustime