#தீ_பரவட்டும் !!!
இனவாதம் அழிய
வர்க்க உணர்வின் தீ பரவட்டும்
சமீபத்தில் "YouTube பரிதாபங்கலின்" கோபி சுதாகரின் ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பரவி பேசு பொருளாகி வருகிறது... உண்மையைச் சொல்வதென்றால் அவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது.. இந்த இனவாத சிந்தனை காலனி காலத்திலிருந்தே தமிழக அரசியல் போக்கு.. தமிழகத்தில் இது பொது புத்தியாகவும் கட்டமைப்பட்டுள்ளது.
வட இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் மீதான வெறுப்பு, தமிழ்நாட்டில் ஒரு அசிங்கமான கட்டத்தை எட்டியுள்ளது... அதில் இங்கு நடந்திருக்கும் வேலை இழப்பு,
#Globalisation வேகப்படுதிய தொழிலார்களின் இடப்பெயர்வு (Migration) முக்கிய காரணம்.. ஆனால் இந்த வெறுப்பு ஏறக்குறைய பெரியார் - அண்ணாதுரை காலத்திலிருந்து தென்னிந்தியாவின் ஆளும் நிலவுடைமை மற்றும் மேல்தட்டு வர்க்கங்களால் வளர்க்கப்பட்டிருக்கிறது.. சமூக ஊடகங்களை மட்டும் குறை சொல்ல முடியாது, அவர்கள் பொது புத்தியை பிரதிபலித்துள்ளனர்.. தமிழக அரசியலின் மரபு பல ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறது
காலனிய காலம் முதல் தன்னிச்சையான மக்கள் போராட்டம் எழும்போதுலாம், இனவாதம் தூண்டி விடப்படுகிறது.. பின்பு வந்த முதலாளித்துவ அரசுகளும் அதை பயன்படுத்தியுள்ளன. இரு ஆளும் வர்க்கங்களுக்கு ( வட இந்திய மற்றும் தென்னிந்திய ) இடையேயான போட்டிக்கு இந்த வெறுப்பு வளர்க்கப்பட்டு மக்களை பிளவுப்படுத்தி அறுவடை செய்துள்ளனர்....
திராவிட இயக்கங்கள் , மாபொசி, திமுக தொடங்கி மாபொசி சீமான் வரை நீள்கிறது..
வடமாநிலங்களில் அக்காலதி தல், சிவசேனா,, மோடி பாஜக, TMC இதே யுக்தியை தன் பயன்படுத்தியுள்ளனர்.
1960 களில் மொழிப் போராட்டம் பற்றிப் பலர் பேசினாலும், அந்த ஆண்டுகளில் பஞ்சத்தையும், உழைக்கும் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் கூட்டுப் போராட்டத்தையும் நிச்சயம் மறைத்துவிடுவார்கள். திமுகவும் அண்ணாதுரையும் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி அறிவிக்க வைத்தது... அப்போது திமுக கூட்டணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. பசுமைப்புரட்சி முழுமையாக வராத காலம் அது.. வர்க்கப் போராட்டத்தை, மொழிப் போராட்டமாக மாற்றி எழுத இந்த முதலாளித்துவத்தின் கீழ் எப்போதும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும், ஏனெனில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு உள்ளது.
மாநில சுயாட்சியும் மொழிப் பிடிப்பும் இந்த இனவெறிக்கு முற்போக்கான முகமூடியைக் கொடுக்கிறது...
மாநில சுயாட்சி பற்றி பேசும் தமிழறிஞர்கள் 15 வருடங்கள் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த போது எங்கே போனார்கள்? மாநில சுயாட்சி ஒடிசா, பீகார் மற்றும் ஜார்கண்ட் போன்ற அனைத்து மாநிலங்களுக்கும் உள்ளது அல்லவா ?? எங்கே போனது இந்த குரல்கள்?? அந்த மாநிலங்கள் 2000கள் மற்றும் 1990 களில் பட்ஜெட் மற்றும் வளர்ச்சி இல்லாமல் நரகமாக பாதிக்கப்பட்டன. மது வியாபாரிகள் கல்வித் தந்தையாக மாறி தமிழகம் வளர்ந்தது, ரியல் எஸ்டேட் குழுக்கள் தமிழ்நாட்டை ஆதிக்கம் செலுத்தியது.
முதலில் அவர்கள் (Other states) என்ன செய்தார்கள் ? என உடனே ஒரு கூட்டம் வருவார்கள் முதலில்....
1960 களில் மேற்கு வங்க எம்.பி பூபேஷ் குப்தாவால் ( அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி) இந்த நிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயரிடும் மசோதா முதலில் நிறைவேற்றப்பட்டது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற பிரச்சாரமும் !! ( உண்மையான மக்கள் பிரச்னையும் அரசியல் பொருளாதார சிக்கலையும் மறைக்கும் நாடகமே )
வடக்கன், பானிபூரி வாயன் என இனவெறி விதைத்தது தென்னிந்திய ஆளும் வர்க்கமும், திராவிட கும்பல் தான். அதை தான் இன்று சீமான், பிஜேபியும் போன்ற கட்சிகளும் செய்கிறது. மேலும் கடந்த ஆண்டு பீகார் தொழிலாளர்கள் குறித்து திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசியது பலராலும் விமர்சிக்கப்பட்ட ஒன்று.
60s -70s பம்பாய் கலவரம் வடக்கு பிராந்தியத்தில் இனவெறி எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான ஒரு முக்கிய சம்பவம். தமிழகத்தில் மொழிப் போராட்டத்துக்கு எதிராக, மகாராஷ்டிராவில் திரையரங்குகள் சிவசேனா அமைப்பினரால் தாக்கப்பட்டன. தென்னிந்திய மக்கள் தங்களுடைய வேலைகளையும் செல்வத்தையும் பறிப்பதாக சிவசேனா தலைவர் கூறினார்.. "மதராஸி" "லுங்கிவாலா" " பஜாவோ புங்கி, ஹட்டாவோ லுங்கி" என்றெல்லாம் அன்று இழிவாக பேசப்பட்டுள்ளதாகா செய்திகள் அதிகம் வந்தன..
இது சிவசேனாவுக்கு அரசியல் ஆதாயமாக இருந்தது ஆனால் மகாராஷ்டிர தொழிலாள வர்க்கத்திற்கு என்ன நடந்தது? அவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். 1990 களில் நடந்த கலவரம் அது எங்கு கொண்டு செல்லும் என்பதற்கு சாட்சி.. இப்போது மகாராஷ்டிராவை சிவசேனாவும் பிஜேபியும் கூட்டாக ஆளுகிறார்கள். இப்போது மகாராஷ்டிராவும், தமிழகமும் வளர்ந்த மாநிலங்களாக கருதப்படுகின்றன.. ஆனால் அதில் யார் வளர்ந்தவர்கள் என்பது தான் பிரதான கேள்வியே ?
மக்களை இனவாதத்தில் மூலம் சீரழித்தது, இந்திய ஆளும் வர்க்கமும் இந்திய அரசும் தான், அதில் திமுக, காங்கிரஸ், பிஜேபி அணைத்து முதலாளித்துவ காட்சிகளும் அடங்கும். சமூகவலைத்தளங்கள் இருந்திருந்தால் அன்றைய பல சீமான்கள் பகடி செய்யப்பட்டு இருப்பார்கள்...
வடமாநிலங்களில் பன்முகத்தன்மை, கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் இருப்பதால், வட மாநிலங்களின் ஒரே மாதிரியான பார்வை முற்றிலும் முட்டாள்தனமானது. புலம்பெயர்ந்து வேலைக்கு வருபவர்கள் பணக்கார நில உடைமை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல மாறாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் விழும்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.இதை பற்றி விழுப்புணர்வு ஏற்டப்படுத்தும் வகையில் பாஸ்கர் சக்தி "ரயில்" என்னும் திரைப்படம் வெளியிட்டார் அனால் அது கவனம் பெறவில்லை.
வட இந்திய தொழிலாளர்கள் நமது வேலையை திருடிவிட்டார்களா?..கண்டிப்பாக இல்லை...
தனியார்மயம் தாராளமயம் ( Neo liberal ) கொள்கைகளால் குறைந்த ஊதியத்திற்கு, தென்னிந்தியாவின் ஆளும் வர்க்க முதலாளிகளும்,
#MNC நிறுவனங்களும் அவர்களை வேலைக்கு அமர்த்தி தமிழக தொழிலாளர்களின் வேலைகளை அழிக்கின்றன. அவர்களை சுரண்டுவதில் ஆளும் வர்க்கத்திற்கு அரசு துணை நிற்கும்.
அக்கறை இருக்கிறவர்கள் ஏன் உள்ளூர் மக்களுக்கு வேலை கொடுக்கவில்லை ?
காரணம் கூலி அதிகமாக தரவேண்டும் அதற்கு தான் வட மாநில மக்களை மோசமா சூழலிலும் வேலைக்கு எடுக்கிறார்கள்... அவர்களும் வாழ்வாதாரத்துக்கு வேறு வாழியின்றி இங்கு வருகிறார்கள்.. பிரச்சனை எழுந்தவுடன் அவர்கள் இன்று பாதிக்கப்படும் தொழிலாளர்கள் மீது பழி போடுகிறார்கள்...
இவர்களின் அதிகார போட்டிக்கும் லாபவெறிக்கும் இனரீதியாக தொழிலார்களை பிளவுபடுத்தி மோதவிடுகிறார்கள்.. இது தான் இன்று வரை தொடர்கிறது.. அது சரி தானா?? இதை நாம் காலம் காலமாக வேடிக்கை பார்க்கிறோமா?
தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர் மற்றும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு சொல்கிறது. சமீபகாலமாக வட இந்திய தொழிலாளர்கள் தமிழகத்திற்கு பயனுள்ளதாக இருப்பதாக முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறினார்...
யாருக்கு பயன் ???
அவர்களை வைத்து Contract எடுத்து சுரண்டும் முதலாளிகளுக்கா? அல்லது வேலை வாய்ப்பு இழந்து நிற்கும் தமிழக மக்களுக்கா? இது நாம் எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வி.
இந்தியா போன்ற ஒரு நாட்டில் மக்கள் ஆட்சியை உருவாக்குவதற்கு பிற தேசிய இனங்களின் ஆதரவும், பல்வேறு வர்க்க ஆதரவும் தேவை. மக்களின் விடுதலையை வர்க்க போராட்டத்தின் மூலம் வெற்றி கொள்ள முடியும். முதலாளித்துவ அரசியலில் இருந்து எழும் இனவாதம் அப்பட்டமான மக்களை ஒடுக்கும் சந்தர்ப்பவாதம் என்கிறார் பேராசான் லெனின்.
இது வர்க்கப்போர், இந்தப் போரில் இந்திய உழைக்கும் வர்க்கங்கள் ஒன்றுபட வேண்டி இருக்கிறது, சகோதரதும் கரம் பிடிக்க வேண்டி இருக்கிறது ஆளும் முதலாளித்துவ அமைப்புயையும் ஏகாதிபத்திய ஆதிக்கத்தையும் தகர்க்க ஒன்றுப்பட வேண்டும், அதை விளிம்பு நிலை மக்கள் மீதி திசை திருப்பவும் இழிவான வேலையை எவரும் செய்ய வேண்டாம்..
அதற்கு முதலில் தமிழக அரசியலை சீர்தூக்கி பார்க்க வேண்டும் வர்க்க உணர்வு எனும் சுட்டெரிக்கும் தீ மேலோங்கட்டும்.. முதலாளித்துவம் வீழ இனவாதம் அழிய அந்த தீ பரவட்டும்
Not North Vs South ❌
It's North South Vs West ❌
Its the Indian Working Classes Vs Ruling Class ✅
#ClassUnity
#WorkingClass
P.S: தேசிய இன அணுகுமுறை பற்றி மற்றொரு பதிவில் விரிவாக பார்க்கலாம்..