1996ஆம் ஆண்டு ஜோதி பாசு அவர்களை பிரதமராக வர விடாமல் தடுத்தது “வரலாற்றுப் பிழை” என்று இடதுசாரி கட்சிகளே பின்னாளில் ஒப்புக்கொண்டன. அந்த முக்கியமான தருணத்தில், அரசியல் நிதர்சனத்தை விட கட்சியின் உள் பிடிவாதமும் கோட்பாட்டு கடுமையும் மேலோங்கியது. அதன் விளைவாக, இந்தியா ஒரு மாற்று நிலையான தலைமையை இழந்தது.
இன்று தமிழ்நாடும் அதேபோன்ற ஒரு அரசியல் தருணத்தில் நிற்கிறது.
பல தசாப்தங்களாக தமிழகத்தை ஆட்சி செய்த திமுக–அதிமுக அரசியல் சுழற்சியை மீறி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்த நேரத்தில், விஜய் ஆதரவு கோரியுள்ள நிலையிலும், ஒரு புதிய அரசியல் எழுச்சியை தடுக்கவே அதிமுக அரசை ஆதரிக்க முயற்சிப்பது மிகப்பெரிய அரசியல் தவறாக மாறலாம்.
இது அரசியல் தந்திரமாக பார்க்கப்படாது. பழைய அதிகார அமைப்பை காப்பாற்றும் முயற்சியாகவே மக்கள் பார்க்கத் தொடங்குவார்கள். குறிப்பாக இளைஞர்கள், வெளியில் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டு உள்ளுக்குள் அதே அரசியல் அமைப்பை பாதுகாக்கும் “fixed match politics” மீது விரக்தியடைந்துள்ளனர்.
தேசிய அரசியலில் சரியான தருணத்தை புரிந்து கொள்ளாமல் இடதுசாரிகள் ஒரு வரலாற்று வாய்ப்பை இழந்தனர். அதே தவறை தமிழ்நாட்டில் மீண்டும் செய்வது, அவர்களை மேலும் அரசியல் பொருத்தமற்ற நிலைக்கு தள்ளக்கூடும். அரசியலில் துணிச்சலும் சரியான நேர முடிவும் தான் வரலாற்றை உருவாக்கும்; தயக்கமும் பழைய கணக்குகளும் அல்ல.
வரலாறு எப்போதும் இரண்டாவது வாய்ப்பை தராது. ஜோதி பாசு சம்பவம் ஒரு தலைமுறைக்கு பாடமாக மாறியது. இன்று தமிழ்நாட்டில் உருவாகும் மாற்ற அரசியல் உணர்வை புறக்கணித்து, பழைய கூட்டணிகளை மட்டும் காப்பாற்ற முயல்வது, அதே வரலாற்றுப் பிழையின் இன்னொரு வடிவமாக பதிவாகலாம்.
#TamilNadu #DMK #AIADMK #TVK #Congress #RahulGandhi #ThalapathyVijay #Vijay #TNPolitics #2026Elections #ChangeForTamilNadu #FixedMatch
#vazhapadi