நா கண்ணாடி மாதிரிலே... !!!

Joined November 2010
1,930 Photos and videos
👨🏻‍🎤கேடி👨🏻‍🎤 retweeted
இது தான் டா திமுக..🖤❤️‍🔥 Firey Speech By @Udhaystalin Na Dear #TVK Ian’s Unge Anne ke Guts Iruntha Pesa solunge parpom 🤭
127
1,282
5,759
192,407
😂😂😂
Current scenario 😂😂😂😂 Editor செதைச்சுட்டான்..
88
😂😂😂
Congress to TVK ~ “நாங்க அஞ்சு பேர் உங்க கூட சேர்ந்து governor மாளிகை வர்றோம்.. என்ன ஆகுதுன்னு மட்டும் பாருங்க…”
73
👨🏻‍🎤கேடி👨🏻‍🎤 retweeted
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் இந்த சைக்கோவின் இயலாமைக்கு முட்டுக்கொடுக்க, இந்தக் கட்சியை பிரச்சனைகளிலிருந்து காக்க தமிழ்நாட்டின் குழந்தைகள் தான் அழுது செண்டிமெண்டை தூண்ட வேண்டும் என்றால் இதன் ஆபத்து புரிகிறதா?! நாளை நூறு பேரை சுட்டுக்கொன்றுவிட்டால் வரும் விமர்சனத்தைக் கூட, யாரோ பண்ணின தப்புக்கு விஜயை எல்லாரும் திட்டுறாங்கனு குழந்தைகளை அழவைத்து வீடியோ போடுவார்கள். இந்த blue whale சைக்கோத்தனம் சினிமா கவர்ச்சியால் மட்டுமே செல்லுபடியாகிறது. கொடூரமான மதவெறி அரசியலால் கூட இதைச் சாதிக்க முடியாது. தமிழ்நாடு தன்னையும் தன் எதிர்காலத்தையும் காத்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டம் இது.
45
594
857
67,007
👨🏻‍🎤கேடி👨🏻‍🎤 retweeted
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! 💐 95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். @Anbil_Mahesh அவர்கள் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன். மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்! கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை! #12thResults #ExamResult
430
5,127
20,494
806,294
👨🏻‍🎤கேடி👨🏻‍🎤 retweeted
திமுக ஏன் 40MLAவை தவெகவுக்கு அனுப்புலன்னு மட்டும்தான் நீங்க இன்னும் கேட்கல - செந்தில்வேல்🔥 #இது_தான்_மாற்றமா😂😂
27
1,169
3,342
55,259
👨🏻‍🎤கேடி👨🏻‍🎤 retweeted
We have Created A Two Storey hospital building from Residential House at Singanallur, #coimbatore within 6 months of last year 2025 @havisha #construction #commercialproject #hospital #buildings Video edit done by @i_mathan @Vemora360 company owner @vemora3
10
6
442
👨🏻‍🎤கேடி👨🏻‍🎤 retweeted
15 Oct 2025
தீபாவளிக்கு முதல் நாள் இரவு மதுரை போன்ற தென் மாவட்டங்களில் இருந்து தனியே சென்னைக்கு பயணிப்பவர்களில் பெரும்பாலானவர்கள், அலுவலக அரசியல், குடும்ப அரசியல் போன்றவற்றினால் ஒதுக்கப்பட்டவர்கள், அதற்கு முன்னதான தங்கள் வாழ்க்கையில் சில தவறுகளை இழைத்தவர்கள், தற்போதைய சூழலில் பிழைக்க தெரியாதவர்கள் என்றே இருப்பார்கள். பாண்டியன் எக்ஸ்ப்ரஸில் கூட அன்று ஃப்ரீயாக டிக்கெட் கிடைக்கும் சூழல் நிலவும். அது மாதிரியான ஒரு பயணத்தில், யாரை முதலில் சந்திக்க மிகவும் ஆசைப்பட்டேனோ, அதன் பின் சந்திக்கவே கூடாது என நினைத்தேனோ அவனை சந்திக்க‌ நேர்ந்தது.‌ ராகேஷ். கிட்டத்தட்ட 10 வயது இளையவன். எங்கள் ஊர் வத்தலகுண்டு. முன்னர் கூடைப்பந்து விளையாட்டுக்கு மிகவும் புகழ் பெற்ற ஊர். பொங்கல் விடுமுறை சமயத்தில் நடைபெறும் மாநில அளவிலான சில சமயம் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி அங்கே மிக பிரபலம். வேலை போன்ற காரணங்களுக்காக வேறு ஊருக்கு சென்ற பழைய ஆட்டக்காரர்கள் கூட, அந்த சமயத்தில் பொங்கல் திருவிழாவிற்காக வருகிறார்களோ இல்லையோ இந்த போட்டிகளைப் பார்க்க வருவார்கள். All star match என்று சொல்வதைப் போல, அதுவரை விளையாடிய, தற்போது விளையாடும் நிலையில் உள்ள ஆட்டக்காரர்களை எல்லாம் சேர்த்து, கலந்து போட்டு நான்கு அணிகளை தேர்வு செய்வார்கள். ஒரிஜினல் டோர்னமெண்ட் முடிந்து எல்லோரும் கிளம்பிப் போன பின்னர், அடுத்த நாள் அந்த ஆல் ஸ்டார் டீம்களுக்கு இடையில் ஒரு லீக் போட்டி நடக்கும். உண்மையில் அந்தப் போட்டியை ஆடத்தான் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக சென்று செட்டில் ஆனவர்கள் திரும்பி வருவார்கள். 40 வயது வரை இருப்பவர்கள் ஆடுவார்கள். அதற்கு மேல் இருப்பவர்கள் கோச்சாக, ரெப்ரியாக பார்வையாளர்களாக இருப்பார்கள். அது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். நாம் பார்த்து வியந்த சீனியர்கள், நம்மை மிரட்டிய ஜூனியர்கள் என எல்லோரும் ஒரு டீமில் இருப்பார்கள். காலம் முழுவதும் நம்முடனே ஆடியவன் எதிரியாக ஆடும் பொழுது பார்ப்பது, அவனை பார்வையாளனாக இருந்து பார்ப்பது என பல சுவாரசியங்கள் கிட்டும். அப்படிப்பட்ட ஒரு பொங்கல் டோர்னமெண்ட்டின் போது, நண்பன் ஒருவன் சொன்னான். நாலஞ்சு வருஷமா நீ இந்த பக்கம் வரல இல்ல. ராகேஷ்னு ஒருத்தன் செமையா ஆடுறான்டா. உங்க சீனியர் செட்டில் சொல்லுவீங்களே வினையத்தான், வெள்ளத்துரை, ரங்கராஜ், ரமேஷ்.. அப்புறம் உங்க செட்டுல ஆடுனாங்களே முத்துக்கருப்பன், சீனிவாசன், மணிகண்டன் அவங்களை எல்லாம் மிஞ்சுற ஒரு பிளேயர். அவன எதிர் டீம்ல இப்ப யாராலயும் அவன மேன் எடுக்கவே முடியல. வேகமான காத்துல கோழி றெக்க பறக்கும் போது அதை பிடிக்க நாலு அஞ்சு சின்ன பசங்க ஓடி கைக்கு அகப்படாமல் திணறுவாங்களே, அதுபோல அவன் பால தட்டி வரும்போது அவன் பின்னாடியே ஓடுறாங்க. ஒன்னும் முடியல‌ அவன் பேஸ்கட் பண்ணிக்கிட்டு போய்கிட்டே இருக்கான். பழைய செட்டு ஆள் ஒருத்தர் , பிச்சமணி, ஓம் முருகேசன் அப்படின்னு அவங்க செட்டு ஆளுக தான் வத்தலகுண்டிலேயே பெரிய பேஸ்கட்பால் தலைக்கட்டுன்னு நினைச்சாராம்‌‌. இந்தப் பையன் இப்பவே அவங்கள தாண்டி ஆடுறான் அப்படின்னு சொன்னாரு. என சொல்ல சொல்ல எனக்கு ராகேஷ் ஆட்டத்தை காண வேண்டும் என்று பயங்கர ஆவல். அந்த ஆல் ஸ்டார் மேட்ச்சுக்கு காலையில் டீம் பிரிக்கும் போது, என்னிடம் கேட்டார்கள் நாலஞ்சு வருஷமா வரல பிராக்டிஸ்ல ஏதும் இருக்கியா இல்ல கீழே விழுந்து வாரிருவாயா என்று‌. எனக்கும் சந்தேகம். இல்ல நான் ஆடல என்று ஒதுங்கிக் கொண்டேன். ஆட்டம் ஆரம்பித்தது. நண்பன் ராகேஷ் பற்றி சொன்னது மிகை இல்லை. சில நடிகைகள் இருப்பார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னாலும் அழகாக இருப்பார்கள், பின்னாலும் அழகாக இருப்பார்கள். ஆனால் அந்த குறிப்பிட்ட காலத்தில் பேரழகாக இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களை ரசிக்க கிடைப்பது ஒரு பேரனுபவம். அதுபோல தான் ஆட்டக்காரர்களுக்கும். சில ஆண்டுகள் தான் அவர்கள் உச்சத்தில் இருப்பார்கள். அப்போது அவர்களின் ஆட்டத்திறனை ரசிப்பது ஒரு பேரனுபவம். அதுபோல பல ஆட்டக்காரர்களின், உச்சகட்ட பார்ம் பார்த்த அனுபவத்தில், ராகேஷ் அவர்களை விட சிறப்பாக இருந்ததாகவே தோன்றியது. ஆட்டம் முடிந்ததும் நேரடியாக பாராட்டி மகிழ்ந்தேன். (1/n)
14
56
293
66,666
👨🏻‍🎤கேடி👨🏻‍🎤 retweeted
We are Creating a @havisha health care centre from an old home at Coimbatore . @Vemora360 @vemora3 #coimbatore #Construction
1
12
4
1,624
👨🏻‍🎤கேடி👨🏻‍🎤 retweeted
13 Jun 2025
கிரிக்கெட்டில் தோற்றால் கூட வீரர்களின் வீடுகளில் கல்லெறியும் மக்கள் இருக்கும் இதே நாட்டில் தான் நாட்டையே சுரண்டிக் கொழுக்கும் பனியா கார்ப்பரேட் பூதங்கள் கேட்பார் மேய்ப்பார் இல்லாமல் சொகுசாக பவனி வருகின்றன. 100 கோடி பேருக்கு சுரணையை மழுங்கடித்திருக்கிறார்கள் சங்கிகள் 🔥
8
222
543
16,517
👨🏻‍🎤கேடி👨🏻‍🎤 retweeted
முன்று உலகத்தில் என்னால் தோற்கடிக்க படுவதற்கு எவருமே இல்லை என்று 20 கைகளை சும்மா வைத்திருப்பது எப்பேர்ப்பட்ட கொடுமை. எப்பா டேய் எடிட்டரு யார்ரா நீ சிலிர்க்கிறது.🔥🔥🔥🔥🔥
10
460
1,892
79,474
♥️♥️♥️
6 Feb 2025
Interstellar meets uttama villain
1
128
👨🏻‍🎤கேடி👨🏻‍🎤 retweeted
9 Aug 2024
கல்வியை சிறுமைப்படுத்தும் தற்குறிகளை புறக்கணியுங்கள் கல்விதான் ஒரே ஆயுதம் #தமிழ்ப்புதல்வன்

14
487
1,605
33,506
🔥🔥🔥
"Wammala இதான்டா சினிமா" னு நீங்க நினைக்கிற Scene கோட் பண்ணுங்க.🔥 Power Of Constitution - jai bhim.🥵💥
658
நடந்துடுச்சி… கடவுள் இருக்கான் குமாரு….🤣🤣🤣 #பூஜ்ஜியம்சீட்டுபாஜக #TN #Annamalai
297
Logo Designing Day 01
203
👨🏻‍🎤கேடி👨🏻‍🎤 retweeted
ICSI is a specialized technique used in in vitro fertilization, where a single sperm is directly placed inside an egg x.com/Visionaledge/status/17…

80
245
2,177
1,034,973
என் பையனுக்கு இப்போ 2 வயசு என் பையன் வளர்ந்து தோணி யாருன்னு கேட்ட நான் இத காட்டுவேன். 👇👇👇
12 May 2024
தோனி 1993 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி, இந்திய சுற்றுப்பயணம் வந்திருந்த நேரம். அந்த அணியில் அலெக் ஸ்டீவர்ட் விக்கெட் கீப்பர். அவர் அந்த அணியில் இருந்த எந்த பேட்ஸ்மெனுக்கும் குறைந்தவர் அல்ல. அப்போது நம்முடைய விக்கெட் கீப்பர் கிரண் மோர். அவரை அம்மாதிரி சொல்ல முடியாது. கடைசி வரிசை பேட்ஸ்மென்களைப் போல தான் அவர் ஆடுவார். அதற்கடுத்து வந்த நயன் மோங்கியா, சபா கரீம் ஆகியோரும் அப்படித்தான். அதற்கு முன்னராவது நம்மிடம் பேட்ஸ்மென்களுக்கு நிகராக ஓரளவாவது ஆடக்கூடிய விக்கெட் கீப்பர்கள் இருந்தார்கள். ப்ரூக் எஞ்சினியர் நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென். துவக்க ஆட்டக்காரராகவும் இறங்குவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் சராசரி 31 வைத்திருந்தார். அவருக்கு அடுத்து வந்த சையது கிர்மானியும் ஓரளவு சமாளிப்பார். அவரும் சில சதங்களும், அரை சதங்களும் எடுத்தவர். கபில்தேவ் 1983 உலககோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக 175 ரன்களைக் குவித்த போது மறுமுனையைக் காத்தவர். இவர்களுக்கு அடுத்து யாரும் சோபிக்கவில்லை. சதானந்த் விஸ்வநாத் என்பவர் அதிரடியாக ஆடக்கூடியவர் என்று இறக்கினார்கள். அவரும் நன்றாக ஆடவில்லை. சந்திரகாந்த் பண்டிட் நல்ல பேட்ஸ்மென். ஆனால் விக்கெட் கீப்பிங் சுமார். தொடர்ச்சியாக நன்கு ஆடமாட்டார். 1986ல் இந்தியா – ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் அவரை பேட்ஸ்மென் ஆகவே எடுத்தார்கள். கிரண் மோர் விக்கெட் கீப்பிங் நன்றாகச் செய்ததால் , பேட்டிங் சுமாராக இருந்தாலும், வேறு வழி இல்லாமல் பல ஆண்டுகளுக்கு அவரை இந்திய அணி வைத்துக் கொண்டது. இந்த சமயத்தில் எல்லாம் மற்ற அணிகளில் எல்லாம் அணிக்கு சிக்கலான சூழலில் கை கொடுக்கும் நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்கள் உருவாகிக் கொண்டே இருந்தார்கள். மேற்கு இந்திய தீவுகளில் ஜெப்ரி துஜான், நியூசிலாந்துக்கு இயன் ஸ்மித், பாகிஸ்தானில் மோயின் கான், இலங்கையில் பிரண்டன் குருப்பு, இவர் இரட்டை சதமெல்லாம் அடித்தார். அவருக்குப் பின்னர் அதிரடி ஆட்டக்காரர் கலுவிரதனா. ஆஸ்திரேலியாவில் சொல்லவே வேண்டாம். இயன் ஹீலி இருந்தார். அவர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கும் கடைசி வரிசை ஆட்டக்காரர்களுக்கும் இடையே பாலமாக இருப்பார். அது தவிர பந்து வீச்சாளர்களுக்கும் டிப்ஸ் கொடுத்துக் கொண்டே இருப்பார். வார்னே பந்து வீசும் போது, அருகில் ஸ்லிப்பில் நிற்கும் கேப்டன் டெய்லரிடம் கூட எதுவும் சொல்லாமல், நேராக வார்னேவிடம் சென்று இப்படி போடு என்பார். இந்த சமயத்தில் 1996ல் நடந்த ஒரு டெஸ்ட் மேட்சில் ஆஸ்திரேலிய தேர்வாளர்களைத் திட்டி ஸ்டேடியத்தில் பதாகைகள். காரணம் அடுத்து ஆஸ்திரேலியா போகும் தென் ஆப்பிரிக்க பயணத்திற்கு புது விக்கெட் கீப்பர் களமிறங்குவார் என்ற செய்தியே. ஹீலிய விடவா ஒரு கீப்பர் என யோசித்தவர்களை வாயடைக்கச் செய்தார் வந்த புது கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட். முதல் வரிசை பேட்ஸ்மென்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்குப் பின் தென் ஆப்பிரிக்க அணிக்கு மார்க் பவுச்சர், இலங்கை அணிக்கு குமார சங்காகரா என புதுப்புது பலம் கூடிக் கொண்டே இருந்தது. நமது நாட்டிலோ அப்படி ஒரு ஆள் கிடைக்காமல், ஒரு நாள் போட்டிகளை சமாளிக்க உலகத் தரமான பேட்ஸ்மென் ஆன ராகுல் ட்ராவிட்டை கீப்பர் ஆக்கினார்கள். டெஸ்ட் மேட்சுகளுக்கு வழக்கம் போல விஜய் தாகியா, தீப் தாஸ் குப்தா என சுமாரான கீப்பர்கள். இதெல்லாம் போதாது என பால்வாடியில் இருந்து நேரே கிரிக்கெட் கிரவுண்டுக்கு வந்தவரைப் போன்ற தோற்றம் கொண்ட பார்தீவ் பட்டேல் வேறு. இந்தச் சூழ்நிலையில் தான் ஒரு வீரன் இந்திய அணியின் உள்ளே வந்தான். அட்டகாச உடல்கட்டு. அதற்கு முன்னான இந்திய கீப்பர்கள் எல்லாம் பிள்ளைப் பூச்சிகளைப் போலத்தான் இருந்தார்கள். நன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி விடுதியில் அந்த வீரன் விளையாடிய ஆரம்ப மேட்சுகளில் ஒன்றைப் பார்க்கும் போது, கூட்டத்தில் ஒருவன் என்னடா இவன் டார்ஜான் படத்தில நடிக்கிறவன் மாதிரி இருக்கான் என்றே கமெண்ட் அடித்தான். நீள முடி, இறுகிய முகம், தீர்க்கமான கண்கள். வேறு யார்? மகேந்திர சிங் தோனி தான். முதலில் அவர் ஆடிய சில மேட்சுகளைப் பார்த்தவர்கள் பரவாயில்லைடா, கிர்மானிக்கு அடுத்து ஒரு நல்ல விக்கெட் கீப்பர் நமக்கு கிடைச்சுட்டான் என்றே நினைத்தார்கள். அடுத்தடுத்த மேட்சுகளில் தோனி காட்டிய விக்கெட் கீப்பிங் திறமை, பவுண்டரிகளை விளாசும் வேகம், விக்கெட்டுகளுக்கு இடையேயான ஓட்ட வேகம் என வெகு சீக்கிரமே அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார் மகேந்திர சிங் தோனி. நமது அணியிலும் கில்கிறிஸ்ட், சங்காகரா போன்றோருக்கு இணையான ஒரு வீரன் தோன்றி விட்டான் எனவே அப்போது பலர் நினைத்தார்கள். அப்போது தெரியவில்லை தோனியிடம் அவர்களைத் தாண்டிய பண்புகளும் உண்டு என்றென. நிறையப் பேரை, 2005ல் தோனி, இலங்கை அணிக்கு எதிராக முதல் விக்கெட் விழுந்ததும் இறங்கி அடித்த 183 ரன்கள் தான் அவரின் பெரிய ரசிகராக மாற்றியிருக்கும்.ஆனால் அந்த காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் சேஸிங்குகளில் அவர் காட்டிய அணுகுமுறை தான் எல்லோரின் மனதிலும் இடம் பெறச் செய்தது எனலாம். அதற்கு முன் இந்திய அனியின் ஒரு நாள் போட்டி சேஸிங்குகளில், ரவி சாஸ்திரி, கபில்தேவ் ஆடிய காலகட்டத்தில், நான்கு விக்கெட் விழுந்த உடன் இவர்கள் வந்து சில பல பவுண்டரிகளை அடிப்பார்கள். இவர்கள் ஆட்டமிழக்காவிட்டால் அணிக்கு வெற்றி. மாறாக ஆட்டமிழந்தால் அவ்வளவு தான். இவர்களுக்குப் பின்னால் இந்திய அணியின் நிலைமை இன்னும் மோசமானது. நான்கு விக்கெட்டுகள் விழுந்தால்,நடையைக் கட்டு வேற வேலை பார்க்கலாம் என ரசிகர்கள் கிளம்பி விடுவார்கள். யுவராஜ் சிங் வந்த பின்னர் இந்த நிலைமை கொஞ்சம் மாறியது என்றாலும் இவர் அவுட்டாயிட்டா என்ற கேள்வி இருந்து கொண்டேயிருக்கும். ஆனால் தோனி வந்த பின்னர் தான் இந்திய அணியின் தலைவிதி மாறியது. ஐந்து விக்கெட்டுகள் விழுந்தாலும் பரவாயில்லை தோனி பக்குவமாக ஒன்றிரண்டாக எடுத்து அடுத்து விக்கெட் விழாமல் ரன்னைச் சேர்த்து அணியைக் காப்பாற்றி விடுவார் எனப் பார்க்கும் அனைவருக்கும் தோன்றியது. ஆஹா. ஆஸ்திரேலிய மைக்கேல் பெவன் மாதிரி நமக்கும் ஒரு பினிசர் கிடைச்சாச்சு என அனைவருக்கும் ஒரு நம்பிக்கை தோனியின் பக்குவத்தால் ஏற்பட்டது. இந்தப் பக்குவம் தான் ஆதி காலத்தில் இருந்தே இந்திய அணியில் இல்லாதது. ஏன் பெரும்பாலான இந்தியர்களுக்கே இல்லாதது. அழுத்தத்தை உணர்ந்தால் அவர்களின் பெர்பார்மன்ஸ் குறையும். உணர்ச்சி வேகத்தில் தவறிழைப்பார்கள். இன்னும் கொஞ்சம் நேரம் இந்த நிலையைப் பொறுத்துக் கொண்டிருந்தால் போதும், சமாளித்து விடலாம் என்றால், அந்த சமாளிக்கும் நேரம் பெருந் தொலைவாய்த் தோன்றும். எவ்வளவு நேரம் இப்படியே இருப்பது? செய் அல்லது செத்து மடி என இறங்கி காட்டு சுத்து சுத்துவார்கள். ஆனால் தோனியிடம் அந்தப் பொறுமையும் பக்குவமும் இருந்தது. அதுதான் 2007ல் இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றிலேயே அடி வாங்கித் திரும்பிய போது, அடுத்து யார் கேப்டனாக ஆக வேண்டும் என்ற கேள்வி வந்த போது, கிரிக்கெட் வாரியத்திற்கும், அணியின் மூத்த வீரர்களுக்கும் தோனியின் பெயரை கொண்டு சேர்த்தது. அதற்குப் பின் நடந்தது வரலாறு. 20-20 உலக கோப்பையில் இந்திய அணியை வெற்றி பெற வைத்த உடன் தோன்றியது பாகிஸ்தானின் இம்ரான் கானைப் போன்ற ஒரு கேப்டன் நமக்கு கிடைத்து விட்டார் என. 1992 உலக கோப்பையில் அரை இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் செல்ல இருந்த வழி 90% அடைக்கப்பட்ட நிலையில், போராடி அணியை கோப்பையை வெல்ல வைத்த இம்ரானுக்கு இணையான ஒரு தலைமைப் பண்பு தோனியிடம் தென்பட்டது. எந்த சூழலிலும் அலட்டிக் கொள்ளாமல், அனைவரையும் அரவணைத்து அணியை நடத்திச் செல்லும் பாங்கை தோனியும் தொடர்ந்தார். அடுத்தடுத்த பல வெற்றிகள், ஒரு நாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி, டெஸ்டில் முதலிடம் என தோனி காணாத சிறப்புகள் இல்லை. இந்திய அனியில் கவாஸ்கர், சச்சின், ட்ராவிட் என மாபெரும் பேட்ஸ்மென்கள் இருந்திருந்தாலும் இந்திய அணியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள் அல்லது அதற்கு பண்பு/ மதிப்பு கூட்டும் செயலில் ஈடுபட்டவர்கள் என்றால் முதலில் ஞாபகம் வருவது கபில்தேவ். நம்மாலும் போராடி ஜெயிக்க முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர். அடுத்ததாக கங்குலி. நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்ற எண்ணத்தை அணியினருக்கு ஏற்படுத்தியவர். அடுத்ததாக தோனி. எதுவும் கடந்து போய் விடவில்லை. எல்லாம் இன்னும் நம் கைவசம் தான் இருக்கிறது. நமக்குத் தேவை பொறுமையும், விடாமுயற்சியும், நிதானமும் மட்டுமே என உணர்த்தியவர். தோனியிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. முதலில் உடல் ஆரோக்கியத்தைப் பேணி வலுவாக இருத்தல். வலுவாக இருக்கும் போதுதான் நம்மால் எதுவும் முடியும் என்ற எண்ணம் தோன்றும். வலு குறைய குறைய அந்த எண்ணமும் குறையும். இரண்டாவது எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்படாமல் இருத்தல். உணர்ச்சி வசப்பட்டால் எதையும் சரியாக யோசித்து செயலாற்ற முடியாது. உணர்ச்சி வேகத்தில் எடுக்கும் முடிவுகளின் வெற்றி நிகழ்தகவு 50-50 தான். மூன்றாவது தலைமைப் பொறுப்பில் இருக்கும் போது, கீழே உள்ளவர்கள் தவறு செய்தாலும், அவர்களை சுடுசொற்களாலோ, உடல் மொழியாலோ காயப்படுத்தாமல் அதைச் சரிப்படுத்த முயல்வது, தொடர்ந்து ஊக்கப்படுத்துவது. நான்காவது, எல்லாத் திறமையும் நம்மிடம் இருக்காது. இல்லாத திறமைக்கு ஏங்கி நேரத்தை வீணடிப்பதை விட, நம்மிடம் இருக்கும் திறமையால் நமது குறிக்கோளை அடைவது எப்படி என சிந்தித்து செயல்படுவது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள், இந்திய அணியின் தூணாக இருந்து, இந்தியர்களின் கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் குன்றாமல் பார்த்துக் கொண்டவர். எங்கிருந்து வந்தாலும் திறமையும், விடா முயற்சியும், பக்குவமும் இருந்தால் சாதித்து விடலாம் என ஏராளமானோருக்கு நம்பிக்கை ஊட்டியவர். இந்த சிச்சுவேசன்ல தோனி இருந்தா என்ன செஞ்சிருப்பார்னு யோசித்தாலே போதும் தப்பிச்சிடலாம் என்று யோசிக்கும் முறையை வழங்கியவர். மனித குலம், அவ்வப்போது தோன்றும் சிந்தனையாளர்கள், சாதனையாளர்கள் மூலம் உள் வாங்கும் கருத்துருக்களைக் கொண்டே தன் வாழ்வியலை மெருகேற்றிக் கொள்கிறது. அது போல இந்தியர்களின் வாழ்வியலுக்கு சில முக்கிய கருத்துருக்களை வழங்கிச் சிறப்பித்தவராக தோனி என்றென்றும் ஞாபகத்தில் கொள்ளப்படுவார்.
300