கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், தனது கருப்பு சிவப்பு உணர்வால், இணையத்தில் கழகத்தின் முகங்களில் ஒருவராக அறியப்பட்டவரும், கழகமே தனது அடையாளம் எனச் செயல்பட்டவருமான அன்புத்தம்பி
@Mark2Kali_ அவர்கள் மறைந்த செய்தி என்னை மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது.
துடிப்புமிக்க இளம் உடன்பிறப்பான திரு. காளிமுத்து அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நம் கழகக் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்...