Joined January 2016
1,372 Photos and videos
Pinned Tweet
இன்றுநம்மவர் @ikamalhaasan அவர்கள் பிறந்ததினத்தில் @MaiamOfficialIT சார்ந்ததிருச்சி மண்டலஅமைப்பாளராகியநான் புதுக்கோட்டை அரசுமருத்துவகல்லூரியில்எனது உடலைதானம் செய்துபதிவுசெய்தேன். @Thangavelukovai @MouryaMNM @Arunachalam_Adv @sentharu @lakshman1425 #HBDKamalSir #Nammavar70
18
58
139
4,711
SENTHIL KUMAR.K retweeted
கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது கூட நிரம்பாத பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும், கொடூரமான காயங்களால் இறந்தே போனதும் - தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய அவலம். நாம் வாழும் மாநிலத்தில் இப்படிப்பட்ட இழிவுகள் தொடர்வது வேதனை. #WomenSafety #TNCrimes #Childabuse #KamalHaasan #MakkalNeedhiMaiam
6
33
38
611
அன்று:தமிழகத்தில் எங்கு என்ன நடந்தாலும் முந்தைய அரசையும் முதலமைச்சரையும் குற்றம் சாட்டியவர்கள், இன்று: தங்கள் கட்சியினர் தொடர்பான சம்பவங்களுக்கு/நாட்டில் நடக்கும் வன்கொடுமைகளுக்கும் "தனிமனித ஒழுக்கமே காரணம்" என்கிறார்கள். அப்படியென்றால் அன்றைய குற்றச்சாட்டுகள் அரசியலா? இன்றைய விளக்கம் வசதியான அரசியலா? ஒரே சம்பவத்திற்கு இரண்டு விதமான தர்க்கம் ஏன் #CMJosephVijay‌ sir ?? @CMOTamilnadu @TVKVijayHQ @ikamalhaasan @maiamofficial @MaiamOfficialIT @TVKVijayHQ #திமுக #தவெக #தமிழகஅரசியல் #மக்கள்_நீதி_மய்யம் #PoliticalQuestion #TamilNaduPolitics #Vijay #TVK #DMK
2
5
7
85
SENTHIL KUMAR.K retweeted
Totally agree with our very own @satyanadella. If AI LLM’s are the fuel of this century, human wisdom will be its engine. Must read.
154
449
4,028
829,642
SENTHIL KUMAR.K retweeted
அதிகரித்து வரும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் – தீர்வு வேண்டிய அவசர நிலை ஒரு நாட்டின் நாகரிகத்தை அளவிட வேண்டுமெனில், அந்த நாடு பெண்களையும் சிறுமிகளையும் எவ்வளவு பாதுகாப்பாக வாழச் செய்கிறது என்பதே முக்கியமான அளவுகோலாகும். ஆனால் இன்று சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது சமூகத்தின் மனசாட்சியையே உலுக்கும் நிகழ்வாக உள்ளது. இத்தகைய குற்றங்கள் ஒரு குடும்பத்தின் பிரச்சினை மட்டுமல்ல; மொத்த சமூகத்தின் தோல்வியையும் வெளிப்படுத்துகின்றன. பள்ளி, வீடு, தெரு, பொது இடங்கள் என எந்த இடத்திலும் முழுமையான பாதுகாப்பு உணர்வு இல்லாத நிலை உருவாகியுள்ளது. குழந்தைகளின் அறியாமை, சமூக விழிப்புணர்வு குறைவு, குற்றவாளிகள் தப்பித்துவிடலாம் என்ற மனநிலை போன்றவை இத்தகைய குற்றங்கள் தொடர காரணங்களாக உள்ளன. சமூக அக்கறை மறந்து சுயநலம் மட்டும் மேலோங்கி வளர்ந்த ஒரு தலைமுறையின் தவறுகளால் இன்று இந்த அவலம் தொடர்கிறது.. இந்த நிலையை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் அவசியம். பள்ளி நிலையிலிருந்தே பாலியல் கல்வி (Sex education) மற்றும் சட்டங்களும், அதற்கான தண்டனைகள் குறித்த பாடங்கள் இனி கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். சிறுவயதில் இருந்தே ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளை அணுக வேண்டிய முறை மற்றும் அவர்களை பாதுகாக்கும் கடமையை தெளிவாக புரிய வைக்க வேண்டும். குழந்தைகளுடன் திறந்த மனதுடன் உரையாடி, அவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காவல்துறை புகார்களை உடனடியாக பதிவு செய்து, விரைவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் குற்ற வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றங்கள் மூலம் தாமதமின்றி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தில் உள்ள கடுமையான தண்டனைகள் உறுதியாக அமல்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில், சமூகமும் தனது பொறுப்பை உணர வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் ,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் உளவியல் ஆலோசனைகள் போன்றவை தொடர்ந்து நடைபெற வேண்டும். இதை பொதுமக்களின் பார்வையில் படும் படியாக அரசு காட்சிப்படுத்தவும் வேண்டும். பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகளை கடந்து போகாமல் சிறுமிகளின் பாதுகாப்பு என்பது அரசு மட்டும் ஏற்க வேண்டிய பொறுப்பல்ல; ஒவ்வொரு குடும்பம், கல்வி நிறுவனம், சமூக அமைப்பு மற்றும் குடிமகனின் கூட்டுப் பொறுப்பாகும். "ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வாழும் சமூகமே உண்மையான முன்னேற்ற சமூகமாகும்" என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டிய காலம் இது. இதை மக்கள் நீதி மய்யம் அரசுக்கு வலியுறுத்துகிறது. @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #Kamalhaasan_MP #Makkalneedhimaiam #Childabuse
7
64
74
772
SENTHIL KUMAR.K retweeted
படத்தை கொஞ்சம் ஜூம் பண்ணி பாருங்க... "BEFORE" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! "AFTER" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! அதே மாதிரி அந்த வெள்ளை காரும் அசையாமல் அதே இடத்தில்! சாலை மட்டும் மாயாஜாலமா ஒரே நாள்ல புதுசா மாறிடுச்சாம்! #FakeNarrative #FactCheck #TVKPolitics #TVK
1
3
5
76
SENTHIL KUMAR.K retweeted
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழக அரசு (தவெக) தனது அறிவிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – @maiamofficial வலியுறுத்தல்! ​தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் டெல்டா பகுதி விவசாயிகளின் தற்போதைய அவல நிலையைக் கண்டு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த கவலை கொள்கிறது. விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில் தற்போதைய தமிழக அரசு (தவெக) காட்டும் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. ​1. மேட்டூர் அணை மூடல் & மின்வெட்டு துயரம்: ​வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு (2026) அணையில் முழு கொள்ளளவு எட்டப்படாததால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் டெல்டா பாசனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ​இதற்கு மாற்றாக, நிலத்தடி நீரை (போர்வெல் மூலம்) இறைத்து பாசனம் செய்யலாம் என்று விவசாயிகள் முயன்றால், டெல்டா மாவட்டங்களில் நிலவும் கடுமையான மும்முனை மின்சார (Three-Phase Connection) மின்வெட்டு அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டு வைத்துள்ளது. போதிய மின்சாரம் இல்லாததால் போர்வெல் மூலமும் அவர்களால் விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. ​2. போதாத 'குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு': ​இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை ஈடுகட்ட, கடந்த இரண்டு ஆண்டுகளில் முந்தைய திமுக அரசு விவசாயிகளுக்குக் கூடுதல் நிதியுடன் கூடிய குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பை வழங்கியிருந்தது. ​ஆனால், தற்போதைய தவேக அரசு அறிவித்துள்ள குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு வெறும் ரூ. 134.83 கோடி மட்டுமே. இது முந்தைய அரசு வழங்கிய தொகையை விட மிகவும் குறைவானதாகும். ​முக்கியக் குறிப்பு: இந்த ஆண்டு 'எல் நினோ' (El Niño) விளைவினால் 90% மழைப்பொழிவு குறைந்துள்ளது. வறட்சி அதிகமாக இருக்கும் இந்த ஆண்டில்தான் தண்ணீருக்கான தேவையும், விவசாயிகளுக்கான நிதி உதவியின் தேவையும் மிக அதிகம். இத்தகைய சூழலில், அரசு மிகக் குறைந்த தொகையை அறிவித்திருப்பது டெல்டா விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. ​3. தேர்தல் வாக்குறுதியும், ஏமாற்றமும்: ​தேர்தல் அறிக்கையில் "விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்" என்று தற்போதைய ஆளுங்கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், நடைமுறையில் அது முழுமையாகச் செய்யப்படவில்லை. ​பல்வேறு கடுமையான நிபந்தனைகளை (Terms and Conditions) விதித்து, ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த விவசாயப் பெருங்குடி மக்களையும் ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது. ​மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கைகள்: ​தமிழக விவசாயிகளின் நலனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் தற்போதைய அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்: ​குறுவை சிறப்புத் தொகுப்பு நிதியை வறட்சிக் காலத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக உயர்த்த வேண்டும். ​டெல்டா பகுதிகளில் போர்வெல் பாசனத்திற்கு தடையற்ற மும்முனை மின்சாரத்தை (3-Phase Power) தடையின்றி வழங்க வேண்டும். ​கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற விவசாயக் கடன்களை எந்தவித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். ​விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடாமல், இந்த அறிவிப்புகள் அனைத்தையும் தவெக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #cheifministerofTamilnadu #deltafarmers
6
96
137
2,383
ஆக்கிரமிப்பு_போக_மீதி #புதுக்கோட்டை. புதுக்கோட்டை நகரப்பகுதியில் #கீழராஜவீதி, #கீழ2ம்வீதி, #மேலராஜவீதி, #உழவர்சந்தைரோடு, தெற்குராஜவீதி பகுதிகளில் உள்ள கடைகள் நடைபாதையை நகராட்சி நிர்வாகத்திடமிருந்து விலைக்கு வாங்கி விட்டார்கள் போல! நடைபாதை வரை கடைகள் வந்துவிட்டது. சாலையில் தான் வாகன நிறுத்த வேண்டியுள்ளது. காலையில் கனரா பேங்கை தாண்டுவது கஷ்ட காலம்.. மாலையில் மேல ராஜ வீதிக்குள் நுழைவது பெரிய போராட்டம்.. எந்த நேரத்திலும் தெற்கு ராஜ வீதிக்குள் போகவே முடியாது.. வெற்றிலைகடைக்கும்,பூக்கடைகளுக்கும் மட்டுமே பட்டா.. நகைகடைகள் வாசலில் வாகனங்கள் நிறுத்த இன்னும் டோக்கன் போடாத குறை.. கீழ 2 சரவணபவன் ஹோட்டலை மதியத்தை தாண்டிட்டா வாழ்க்கையில சாதிச்ச ஃபீலிங்குதான். பழையபடி பார்க்கிங் ஒவ்வொரு வாரமும் எதிரெதிர் வரிசைகளில் நிறுத்தி ஆக்கிரமிப்புகளை அடக்கி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது @TVKVijayHQ @ikamalhaasan @pdkt_collector @pudukkottai_pag @pudugaiabdulla @Pudukkottaidev1 @ILovePudukottai @varalaruu1
4
9
15
275
SENTHIL KUMAR.K retweeted
சேலத்தில் ஓர் பொள்ளச்சி சம்பவம்? @TVKPartyHQ அரசு-ஆள் தமிழ் நாடு மக்களுக்கு தினமும் ஒரு பிரச்சனை தான்…பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசு பதவி விலக வேண்டும்…இதை பற்றி காவல் துறை என்ன நடவடிக்கை இதுவரை எடுத்தது இருக்கிறது???? @ikamalhaasan @MaiamOfficialIT @lakshman1425
1
2
3
35
SENTHIL KUMAR.K retweeted
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் நிலைநிறுத்தப்பட வேண்டுமெனில், நிதி தொடர்பான உண்மை நிலவரங்கள் மறைக்கப்படாமல் வெளியிடப்பட வேண்டும். அரசின் தற்போதைய நிதிநிலை என்ன? மாநிலத்தின் மொத்தக் கடன் எவ்வளவு? எதிர்கால நிதி மேலாண்மைத் திட்டம் என்ன? போன்ற கேள்விகளுக்கு வெள்ளை அறிக்கை தெளிவான பதிலை வழங்க வேண்டும். நிதி வெளிப்படைத்தன்மை என்பது நல்லாட்சியின் அடையாளமாகும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கும், மக்களின் நம்பிக்கைக்கும் வெள்ளை அறிக்கை முக்கிய பங்காற்றும். எனவே, அரசு விரைவாக வெள்ளை அறிக்கையை வெளியிடுவது காலத்தின் தேவையாகும். #Makkalneedhimaiam #Kamalhaasan_MP #cheifministerofTamilnadu
20
77
115
4,868
🏆 Sports build discipline, unity, and leadership. On this International Day of Sport, let's inspire more youth to embrace sports and build a healthier, stronger society. 💪⚽🏸 "Sports can change lives and shape the future." #InternationalDayOfSport #SportsForDevelopment #YouthEmpowerment #FitnessFirst #MakkalNeedhiMaiam #KamalHaasan #TamilNaduSports #SportsLeadership #HealthyYouth #PlayForChange 🚩🏆 @ikamalhaasan @maiamofficial @MaiamOfficialIT
2
10
17
285
SENTHIL KUMAR.K retweeted
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனிற்காக பிரத்யேகமாக ஒரு அறிக்கை வழங்கிய @maiamofficial . 3.பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க, காவல்துறையில் பெண்காவலர்களைக் கொண்ட ஒரு தனிப்பிரிவு அமைக்கப்படும். @ikamalhaasan என்றுமே முன்னோடியான தலைவர். #KamalHaasan #MakkalNeedhiMaiam
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
1
13
21
338
SENTHIL KUMAR.K retweeted
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
358
4,797
27,600
795,922
SENTHIL KUMAR.K retweeted
கேள்விக்குறியாகும் ஜனநாயகம் ? #democracykills #TVK‌ #TVKVijay‌ #TVKVijay‌HQ #admk @ikamalhaasan @maiamofficial @arivalayam @EPSTamilNadu @TVKVijayHQ
3
7
20
185
SENTHIL KUMAR.K retweeted
தமிழ் செம்மொழி தினம் (2004) தமிழ் மொழிக்கு "செம்மொழி" (Classical Language) அந்தஸ்து வழங்கப்படுவதாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த மிக முக்கியமான வரலாற்று நாள் இன்று. #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #உயர்தனிச்செம்மொழி
51
92
1,026
SENTHIL KUMAR.K retweeted
மற்ற கட்சிகள் போல் பதவிக்காக பணத்திற்காக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் தன் கட்சியின் தனித்துவத்தை விட்டு கொடுக்காத நம்மவர் கமல்ஹாசன் அரசியலில் ஒரு ஜென்டில்மேன். #kamalhassan_mp #மதிமுக #TMMK #களத்தில்_மய்யம் #𝐃𝐌𝐊𝐈𝐓𝐖𝐢𝐧𝐠
6
40
114
1,349
SENTHIL KUMAR.K retweeted
தவெக ஆட்சியில் தொடரும் கொலைகள் – கடும் கண்டனம் ஒரு நாகரிக சமூகத்தின் அடிப்படை அடையாளம் சட்டம், ஒழுங்கு மற்றும் மக்களின் பாதுகாப்பாகும். ஆனால் தவெக ஆட்சியில் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளன. சமீப காலங்களில் அரசியல், சாதி, குடும்பத் தகராறு மற்றும் சமூக விரோதச் செயல்கள் காரணமாக பல கொலைகள் அரங்கேறி வருகின்றன. குற்றவாளிகள் சட்டத்தின் மீதான பயமின்றி செயல்படுவது, சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தில் பலவீனம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. மக்கள் தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஒரு அரசின் முதன்மை கடமை மக்களின் உயிரையும் உரிமைகளையும் பாதுகாப்பதாகும். ஆனால் தொடர்ந்து நடைபெறும் கொலைகள், குற்றங்களைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று மக்கள் அச்சம் கொள்ள ஆரம்பித்து விட்டனர். குற்றவாளிகள் மீது விரைவான விசாரணை நடத்தி, சரியாக வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேபோல் காவல்துறைக்கு தேவையான அதிகாரங்களும் வளங்களும் வழங்கப்பட வேண்டும். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதியும் வழங்கப்பட வேண்டும். சமூக நல்லிணக்கத்தைப் பேணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பினரும் வன்முறைக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். எனவே, தவெக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதுடன், சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வர் விஜய் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்குவதே நல்லாட்சியின் அடையாளமாகும். மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் அடிப்படை பொறுப்பு. ஆனால், முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூரிலேயே மக்கள் பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது. ஆட்சியின் மீதான விமர்சனங்களுக்கு ஆறு மாத காலம் இருக்கட்டும்.ஆனால் மக்கள் உயிரை காக்க நடவடிக்கை எடுக்க கால அவகாசம் பார்க்கும் தமிழக வெற்றி கழகத்தின் அரசுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #LawandOrder #TVK
7
65
107
1,601
எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர்களின் பிறந்த நாளான இன்று, மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வாழ்த்துச் செய்தி... #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
என் கரம் பற்றிய விரல், என் இசைக்கான குரல் அன்னையா எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவர் வாழ்க, குரலாக.
1
44
86
7,511
SENTHIL KUMAR.K retweeted
A Centrist always thinks : "What solution works best? " Rather than, "Which ideology is correct? " #Centrism #Maiam #MakkalNeedhiMaiam #KamalHaasan #KamalHaasan_MP
7
32
43
467
மூன்றெழுத்து நாயகர் முத்தமிழ் வித்தகர் கலைஞர் அவர்களுக்கு புகழஞ்சலி.
என்றும் உள்ளவர் - கருத்தாக, கலையாக, கருணையாக. கலைஞர் அவர்களின் பிறந்தநாளில் அவரையும் அவர் புகழையும் வாழ்த்துவது என் பெருமை.
5
148
SENTHIL KUMAR.K retweeted
"நல்லா வருது.... வேணான்னு பாக்குறேன்" - திரு விஜய் CM ஒரு மாநிலத்தின் முதல்வர் பேசும் பேச்சா .....😧 #tvk #vijay #tvkvijay @TVKVijayHQ @TVKPartyHQ
7
15
169