கரூரில் 41 பேர் இறந்தபோது அவர்கள் சாக வேண்டியவர்கள் தான் என சீமான் கூறும்போது எங்கே போனீர்கள் ?
ஒரு அரசியல் கட்சி தலைவரை ரோட்டில் அடிபட்டு செத்துப் போயிடுவனு சொல்லும்போது எங்கே போனீர்கள் ?
ஒரு கட்சியை பெண்கள் ஆதரவு தெரிவித்ததற்காக, பெண்களை விபச்சாரி என ஒருவர் கூறும்போது அதற்கு ஆதரவு தெரிவித்த சீமானை கண்டிக்காமல் எங்கே போனீர்கள் ?
அமைச்சர் என்றும் பாராமல் அவதூறு பரப்பிய ஒருநபருக்கு ஆதரவாக சீமான் செயல்படும்போது எங்கே போனீர்கள் ?
எவ்வளவு அறிவுப்பூர்வமான விளக்கம் லாரன்ஸ்... உங்க சித்தாந்தத்தில் மக்களை நீங்கள் தெருநாயாக சித்தரிப்பதையும் , பிஸ்கட்டும் பிரியாணியும் போட்டு மக்களை குறைக்கவிடாமல் பார்த்துக்கொள்ளனும் எனக்கூறி ஒரு வாக்காளனின் உணர்வை கேவலப்படுத்தும் உங்கள் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.. மக்களின் எதிர்ப்பு குரல்களுக்கு ஏதாவது போட்டு வாயை மூடவேண்டும் என நீங்கள் சொல்வதில் உங்கள் அரசியல் பயணம் எதை நோக்கி செல்கிறது என புரிந்துவிட்டது.. இதுவரை உங்களிடம் இருந்ததாக கருதப்பட்ட மனிதாபிமானத்தின் மீது சந்தேகம் கொள்ளச்செய்கிறது உங்கள் பேச்சு.. ஆனால் உங்களுக்கும் இந்த மக்கள் ஓட்டு போடுவார்கள்.. கவலை வேண்டாம்..
இப்படிக்கு..
பிஸ்கட்டு பிரியாணிக்காக கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன்..