தமிழ் சினிமாவிற்கு புதிதாக படம் தயாரிக்க வந்த
#Moserbaer,
#UTV வரிசையா இந்த கம்பெனிகளை ஒழிச்சிட்டு இப்போ independent film consultant என்ற பெயரில் தமிழ் சினிமாவையே தான் காப்பாற்ற போவதாக பல youtube சேனல்களில் பேட்டி கொடுப்பது. இதுதான் இவர் வேலை.
"வாயுள்ள பிள்ளை பிழைக்கும்" என்பதற்கு இவர்தான் சரியான உதாரணம்.
ஆனால் என்ன செய்ய?? இவருக்கு வாய் மட்டும்தான் வேலை செய்கிறது. மூளை என்ற பொருளே இவரிடம் இல்லையா என்று தோன்றும்.
அதற்கு சரியான உதாரணம்... சமீபத்தில்
@ToouringTalkies #ChaiWithChithra வில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்களை அழைத்து ஒரு
#RoundTableConference நடத்தினார்கள்.
அதில் தமிழ் சினிமாவின் பிரச்சினைகள் குறித்து அவரவர் தரப்பினர் அவரவர் வாதங்களை வைத்தார்கள்.
அந்த நிகழ்ச்சியின் கடைசி கட்டத்தை கவனியுங்கள். திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் வைத்த வாதத்திற்கு இவர் தடுமாறி தடுமாறி பதிலளிப்பார் ஒரு முழுமையான தெளிவான பதிலே இருக்காது.
அதாவது பேசப்பேச தமிழ் சினிமாவின் உள்ளடி வேலைகள் எங்கே வந்து விடுமோ என்ற பதட்டம் அவரது பதிலில் இருக்கும்.
உடன் உரையாற்றுபவர்களும் அவர் மீதுள்ள மரியாதையால் அந்த விஷயத்தை தாண்டி சென்று விடுவார்கள்.
நன்றாக பேசுவார்.. மடக்கி கேள்வி கேட்டால் தடுமாறுவார்.. இவ்வளவுதான் இவர்..
அதாவது தான் இருக்கும் துறையில் முக்கிய பெரும்புள்ளிகளுக்கு ஆதரவாக வாயை வாடகைக்கு விடுபவர்...
இன்று நேரடியாக கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசினால் மாட்டிக் கொள்வோம் என்று அவர் தந்தை வழியே தனது ஆதரவை தெரிவித்து நானும் உங்கள் ஆள் தான் என்று காட்டிக் கொண்டிருக்கிறார்...
அவ்வளவே..!!
பல பல நாட்களாக அன்னதானம் செய்து வரும் இவர் குறித்த செய்தி இன்று மட்டும் ஏன் வெளியே வர வேண்டும்?? அதற்கு இப்பொழுது என்ன அவசியம் வந்தது???
தானத்தில் சிறந்த அன்னதானத்தை, ஒவ்வொரு நாளும் என் அலுவலகம் செல்லும் போது, பலருக்கு இயக்குனர் திரு.S.A. சந்திரசேகர் அவர்கள் செய்து வருவதை பார்க்கிறேன். வாழ்க அவரின் சேவை 💐🙏