🔴 சாட்டை துரைமுருகனின் "அரைகுறை அறிவியல்" உருட்டல்களுக்குச் சம்மட்டி அடி! 🔴
1.கல் குவாரிகளைப் பயன்படுத்துவது உலகளாவிய அறிவியல் தொழில்நுட்பம் (Sanitary Landfill)!
குப்பையைக் குவாரியில் கொண்டு போய் அப்படியே அள்ளிப் போட்டு மூடுவாங்க, அது நிலத்துக்குள் போயிடும்னு சாட்டை துரைமுருகன் மக்களிடம் பச்சப் பொய் சொல்றார், பயமுறுத்துகிறார். நவீன சிவில் இன்ஜினியரிங் தொழில்நுட்பத்தில் இதற்குப் பெயர் 'சானிட்டரி லேண்ட்ஃபில்' (Sanitary Landfill).
கைவிடப்பட்ட குவாரிகளின் அடிப்பகுதியில் தடிமனான பிளாஸ்டிக் லேயர்கள் (Geomembranes) மற்றும் களிமண் கொண்டு லேயர் அமைக்கப்படும். இதனால் துரைமுருகன் கூப்பாடு போடும் 'லிச்சேட்' (Leachate) நச்சு நீர் ஒரு சொட்டு கூட நிலத்துக்குள் இறங்காது(சரியான தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி monitor செய்ய வேண்டும் ). அதைத் தனியாகப் பைப் மூலம் உறிஞ்சி சுத்திகரிப்பு செய்ய முடியும். உலக நாடுகள் பலவற்றில் இந்த முறையில் தான் குவாரிகள் பாதுகாப்பாகச் சீரமைக்கப்படுகின்றன. இதை மறைப்பது ஏன் துரைமுருகன்?
2.xn--clchc0ea0b2g2a9gcd உதாரணம் பேசும் துரைமுருகனின் அறியாமை
சிங்கப்பூரில் குப்பையை எரிச்சு சாம்பலாக்குறாங்கன்னு (Incineration) பெருமையா பேசும் சாட்டை துரைமுருகனுக்கு, அந்தச் சாம்பலை அவங்க எங்கே கொட்டுறாங்கன்னு தெரியுமா? கடலுக்கு நடுவே 'செமக்காவ் லேண்ட்ஃபில்' (Semakau Landfill) என்ற செயற்கை தீவை உருவாக்கி, அங்கும் இதே 'லேண்ட்ஃபில்' தொழில்நுட்ப முறையில் தான் புதைக்கிறார்கள்
அதுமட்டுமில்லாம, இந்தியக் குப்பைகளில் ஈரப்பதம் (Moisture) அதிகம் என்பதால், சிங்கப்பூர் போல நேரடியாக எரிப்பது நம்ம ஊர் சூழலுக்குப் பெரும் காற்று மாசுபாட்டை (Dioxins) உருவாக்கும். அரைகுறை அறிவோடு சிங்கப்பூரை உதாரணம் காட்டி மக்களை ஏமாற்ற வேண்டாம்!
3.
50 ஆண்டுகால 'பழைய குப்பையை' (Legacy Waste) உடனடியாக 100% மறுசுழற்சி செய்ய முடியாது!
அரியமங்கலத்தில் இருப்பது நேற்று வந்த குப்பை அல்ல; 50 வருஷமாக மட்கி, பிளாஸ்டிக்குடன் பிணைந்து கிடக்கும் குப்பை மலை. இதை 'பயோ-மைனிங்' (Bio-mining) செய்தாலும் முழுமையாக 100% மறுசுழற்சி செய்ய முடியாது என்பதுதான் எதார்த்தம்.
அரியமங்கலம் மக்கள் தினமும் நரக வேதனையை அனுபவிக்கிறார்கள். ஒரு புதிய சட்டமன்ற உறுப்பினர், அந்தப் பாதிப்பை உடனடியாகத் தடுக்க, மக்கள் நடமாட்டம் இல்லாத ஆழமான குவாரிகளைச் சானிட்டரி லேண்ட்ஃபில்லாக மாற்றிப் பயன்படுத்தலாமா என்று 'சாத்தியக்கூறு ஆய்வு' (Feasibility Study) செய்யக் கோரியுள்ளார். மக்களின் துயரத்தைத் தீர்க்க மாற்று வழி யோசிப்பது தப்பா?
எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி ஒன்றும் நேரடியாக ஜேசிபி-யை எடுத்துட்டுப் போய் குப்பையைக் கொட்டிவிடவில்லை. மாவட்ட ஆட்சியரிடமும், மாநகராட்சி ஆணையரிடமும் "இப்படி ஒரு வழிமுறை இருக்கு, இதை ஆய்வு செய்யுங்க" என்று மனு தான் கொடுத்துள்ளார்.
அரசு அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் அதிலுள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆராய்ந்து தான் முடிவெடுப்பார்கள். அடிப்படை நிர்வாக நடைமுறை கூடத் தெரியாமல், ஏதோ எம்.எல்.ஏ-வே குப்பையைக் கொட்டி நிலத்தை நாசமாக்கிட்டது போல வீடியோ போட்டு வன்மத்தைக் கக்குவது சுத்த உருட்டல்!
4.இது சுற்றுச்சூழல் அக்கறை அல்ல; தவெக மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி!
சுற்றுச்சூழல் மேல் சாட்டை துரைமுருகனுக்கு இவ்வளவு அக்கறை இருந்தால், அதை நாகரீகமாக அறிவியல் பூர்வமாக விவாதித்திருக்க வேண்டும். அதை விடுத்து, ஒரு எம்.எல்.ஏ-வை "மூளை இல்லாதவர்", "அறிவற்றவர்", "தற்குறி" என்று தனிப்பட்ட முறையில் கேலி செய்வது, துரைமுருகனின் அநாகரீக அரசியலையும் காழ்ப்புணர்ச்சியையும் காட்டுகிறது. 🤣😀😊
இந்த வன்ம அரசியலால் தான் 4% சதவித்திற்கு கீழ் சென்றுள்ளீர்கள் ..
#shared