Filter
Exclude
Time range
-
Near
டி.கே.சிவக்குமாரை சாடிய சீமான்; மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முதல்வர் விஜய்க்கு கோரிக்கை! #MekedatuDam #SaveCauvery #SeemanStatement #DKShivakumar #NTK #CMVijay #NaamTamilarKatchi #TamilNaduPolitics #ThanthiTV
11
410
902
8,654
நான் வச்சிருக்க 36 லட்சம் ஓட்டு காசு கொடுக்காம பெற்ற ஓட்டு | சட்டென Tension -ஆன சீமான்..! | Maalaimalar #Seeman #SeemanSpeech #NaamTamilarKatchi #TamilPolitics #SeemanStatement #maalaimalar
1
161
Seeman Speech | நீ செய்த தவறை மறைக்க என் தாத்தாவை தங்கத்துல மறைக்குற | சீமான் அதிரடி | Maalaimalar #Seeman #NaamTamilarKatchi #SeemanSpeech #TamilNews #Maalaimalar #SeemanAngry #TamilPolitics #BreakingNews #NTK #PoliticalSpeech #TamilNaduPolitics #SeemanStatement #SocialJustice #TamilViralNews #SeemanLatestSpeech #TamilNaduNews #TrendingNews
1
272
Seeman | ஒன்றாக இருக்க விடமாட்டீர்களா? செங்கோட்டையன், OPS ஒன்றாக வருவதில் என்ன தவறு? சீமான் கேள்வி | Maalaimalar #Seeman #NaamTamilarKatchi #TamilPolitics #OPS #Sengottaiyan #AIADMK #SeemanSpeech #BreakingNews #TamilNews #PoliticalNews #TamilNaduPolitics #NTK #SeemanStatement #TrendingNews #TamilViralNews #SeemanLatestSpeech #TamilPoliticalUpdate #MaalaimalarNews #Maalaimalar
266
Seeman Angry | கோவிலுக்கு வரும் சாதாரண மனிதருக்கு வரவேற்பு எதற்கு? கையெடுத்து கும்பிட்ட சீமான்..! | Maalaimalar #Seeman #NaamTamilarKatchi #SeemanSpeech #TamilNews #SeemanAngry #TamilPolitics #SocialJustice #Equality #BreakingNews #TamilViralNews #NTK #TempleIssue #SeemanStatement #TamilNaduNews #TrendingNews #SeemanLatestSpeech #TamilViralVideo #Maalaimalar
258
கடற்கரையில் சமாதி கட்டி படுத்திருக்கிறார்கள் | என்ன செய்தார்கள் | சீமான் ஆவேசம்..! | Maalaimalar #SeemanSpeech #SeemanAngry #PoliticalSpeech #TamilPolitics #SeemanViral #SeemanStatement #TrendingNews #TamilNaduPolitics #news #mmnews #maalaimalar
192
Seeman | அரசியல் ஒரு வாழ்வியல் | தம்பி, தங்கைகளுக்கு சொல்ல வேண்டியது என் கடமை | சீமான் அதிரடி..! | Maalaimalar #Seeman #NaamTamilarKatchi #SeemanSpeech #TamilPolitics #TamilPride #PoliticalSpeech #TamilNews #BreakingNews #TrendingTamil #SeemanMassSpeech #TNPolitics #SeemanStatement #TamilAwareness #TamilPeople #Maalaimalar
1
2
366
Seeman | Vijay | விஜய்யை எதிர்ப்பதையே சீமான் மும்முரம் காட்டுகிறாரா? - நிருபர் கேள்விக்கு சீமான் ரியாக்‌ஷன்! | Maalaimalar #SeemanSpeech #SeemanVsVijay #TVK #TVKVijay #ActorVijay #VijayPolitics #VijayFans #TamilPolitics #SeemanInterview #TamilPoliticalNews #BreakingNews #TamilLatestNews #TamilViralNews #TamilNaduElections #SeemanStatement #PoliticalControversy #TamilHeadlines #Maalaimalar
221
“நான் போதிக்கும்போது புரியாது, பாதிக்கும்போது புரியும். தன் வீட்டுக்கூரை எரியவில்லை என தண்ணீர் ஊற்ற வராமல் இருந்தால்...” - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் #SeemanSpeech #NaamTamilarKatchi #TamilPolitics #SeemanStatement #NTKVoice
57
334
797
33,710
Seeman Speech | அரசு பணி கொடுத்தா எல்லாரும் செய்வாங்க | சலூன் கடை வச்சிருக்கவங்க வடஇந்தியர் | சீமான் | Maalaimalar #Seeman #SeemanSpeech #TamilPolitics #TamilNews #NorthIndians #GovernmentJobs #SeemanStatement #MMnews #Maalaimalar @Seeman4TN
1
243
அறந்தாங்கியைச் சேர்ந்த தங்கை பர்வீன்பானுவை கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காரணியானேந்தலை சார்ந்த தங்கை பர்வீன்பானு கடந்த 14.07.2025 அன்று மாலை மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளை வீட்டுக்கு அழைத்துவரச் சென்றவர், கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள துயர நிகழ்வு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. கணவனை இழந்து, இரண்டு பெண் பிள்ளைகளுடன், கால்நடைகள் வளர்ப்பின் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்திவந்த பர்வீன்பானுவை இழந்து, அவருடைய இரண்டு குழந்தைகள் தவித்து நிற்பது நெஞ்சைக் கனக்க செய்கிறது. திமுக ஆட்சியில் அடுத்தடுத்து நடந்துவரும் கொடூரக் கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் பெண்கள் பாதுகாப்பாக வெளியில் நடமாட முடியாத கொடுஞ்சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை அடையாளம் காண முடியாமல் திமுக அரசின் காவல்துறை திணறி வருவது, மிகப்பெரிய பெருங்கொடுமையாகும். ஆகவே, தங்கை பர்வீன்பானுவை கொன்ற கொலையாளிகளை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன். மேலும், தாயை இழந்து கையறு நிலையில் தவிக்கும் தங்கை பர்வீன்பானுவின் மகள்கள் இருவருக்கும் அரசு வேலையும், உரிய துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். x.com/Seeman4TN/status/19468… - செந்தமிழன் #சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் #நாம்தமிழர்கட்சி #JusticeForParveenBanu #AranthangiMurder | #WomenSafety #PunishTheKillers | #TNPoliceActionNow #SeemanStatement | #NaamTamilarKatchi #JusticeForVictims | #ProtectWomen #StopViolenceAgainstWomen #TamilNaduNews | #Seeman | #NTK #SupportParveenBanusChildren #AccountabilityNow | #CondemnBrutality
அறந்தாங்கியைச் சேர்ந்த தங்கை பர்வீன்பானுவை கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்! @CMOTamilnadu @mkstalin புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காரணியானேந்தலை சார்ந்த தங்கை பர்வீன்பானு கடந்த 14.07.2025 அன்று மாலை மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளை வீட்டுக்கு அழைத்துவரச் சென்றவர், கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள துயர நிகழ்வு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. கணவனை இழந்து, இரண்டு பெண் பிள்ளைகளுடன், கால்நடைகள் வளர்ப்பின் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்திவந்த பர்வீன்பானுவை இழந்து, அவருடைய இரண்டு குழந்தைகள் தவித்து நிற்பது நெஞ்சைக் கனக்க செய்கிறது. திமுக ஆட்சியில் அடுத்தடுத்து நடந்துவரும் கொடூரக் கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் பெண்கள் பாதுகாப்பாக வெளியில் நடமாட முடியாத கொடுஞ்சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை அடையாளம் காண முடியாமல் திமுக அரசின் காவல்துறை திணறி வருவது, மிகப்பெரிய பெருங்கொடுமையாகும். ஆகவே, தங்கை பர்வீன்பானுவை கொன்ற கொலையாளிகளை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன். மேலும், தாயை இழந்து கையறு நிலையில் தவிக்கும் தங்கை பர்வீன்பானுவின் மகள்கள் இருவருக்கும் அரசு வேலையும், உரிய துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
4
104
151
2,956
24 Dec 2024
அன்பு , கருணை , பரிவு ,இரக்கம்,ஒழுக்கம் நேர்மை,உண்மை,வீரம், கொடைத் திறன் என அனைத்தையும் கொடுத்து தமிழ் மொழி மீதும் இனம் மீதும் பெரும் காதல் கொண்ட ஒருவனை படைத்தால் அந்த உருவம் பிரபாகரன் என்ற தலைவன்தான் வந்து நிற்பார். -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், @Seeman4TN #SeemanStatement
163
306
2,662
கல்குவாரிகளுக்கு எதிராக உசிலம்பட்டி 58 கிராம பாசனப் பகுதி மக்கள் மேற்கொள்ளும் அறப்போராட்டக் கோரிக்கை வெல்லும்வரை நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி #SeemanStatement
2
24
23 Dec 2024
நீலகிரி மாவட்டம் போஸ்பரா பகுதி மக்களின் விவசாய நிலங்களையும் குடியிருப்புகளையும் பறிக்கும் நடவடிக்கையினை தமிழ்நாடு வனத்துறை கைவிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin நீலகிரி மாவட்டம், தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட போஸ்பரா பகுதியில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 73.5 ஏக்கர் நிலத்தைக் காப்புக்காடுகளாக வரையறை செய்து வனமாக மாற்றும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசின் வனத்துறை ஈடுபட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் கடந்த 1969 ஆம் ஆண்டுக் கைப்பற்றப்பட்ட நிலங்களுக்குப் பட்டா கிடைக்கத் தகுதியானவர்களாக இருந்த போதிலும், அன்றைய ஆட்சியாளர்கள் மக்களுக்குப் பட்டா வழங்க முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து 1978வது ஆண்டில் அந்தப் பகுதியை நேரடியாக ஆய்வு செய்து அனைத்து விவசாயிகளும் பட்டா பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்றும் அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் என்றும் உறுதியளித்தது. ஆனால் இன்று வரை அதனை நிறைவேற்றாமல் இருந்துவிட்டு, தற்போது மக்களை வன ஆக்கிரமிப்பாளர்களா கட்டமைக்க முயல்வது எவ்வகையில் நியாயமாகும்? வனத்தைச் சார்ந்து வாழக்கூடிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசால் கடந்த 2006 ஆம் ஆண்டு வன உரிமை அங்கீகார சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் வன உரிமை அங்கீகார சட்டம் அமல்படுத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னாள், முதுமலை புலிகள் காப்பக திட்டம் கொண்டுவரப்படுகிறது. வன வளமும் வனவிலங்குகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக விளைநிலங்களையும், வாழ்விடங்களையும் விட்டு மக்களை விரட்டுவதென்பது மிகப்பெரும் கொடுமையாகும். அத்தகைய கொடுஞ் செயல்பாடுகளில் ஒன்றாகவே போஸ்பரா பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள் மீது தமிழ்நாடு வனத்துறை நடத்தும் எதேச்சதிகார நடவடிக்கையுமாகும். ஆகவே, 1969 ஆம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையிலும், 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அளித்த உறுதிமொழியின் அடிப்படையிலும், 2006 வன உரிமையை அங்கீகார சட்டத்தின் அடிப்படையிலும் பல ஆண்டுகளாக வேளாண்மை செய்து வாழ்ந்து வரும் நீலகிரி மாவட்டம் போஸ்பரா பகுதி விவசாய மக்களின் நிலங்களையும் குடியிருப்புகளையும் வனமாக மாற்றும் நடவடிக்கையினைக் கைவிடுவதோடு, அந்நிலப்பரப்பை முழுவதுமாக ஆய்வு செய்து அம்மக்களின் அடிப்படை உரிமையான நில பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி @Seeman4TN #SeemanStatement
4
58
100
1,089
23 Dec 2024
உசிலம்பட்டி ‘58 கிராம பாசன கால்வாய்’ திட்டத்தை அழித்தொழிக்கும் கல்குவாரிகள் மீண்டும் செயல்பட தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது! @CMOTamilnadu @mkstalin மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள 58 கிராம பாசனத் திட்டத்தின் கால்வாயின் தொட்டிப் பாலத்திற்குச் சேதம் விளைவிக்கும் வகையில் கல்குவாரிகள் நடத்த தமிழ்நாடு அரசு ஆய்வுகளை மேற்கொள்வது வன்மையான கண்டனத்துக்குரியது. பெருமழைக் காலங்களில் வைகை அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரானது, இராமநாதபுரம் பெரிய கண்மாய்க்குச் செல்லும் வழியில், அமைந்துள்ள பல இலட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்குப் பயன்பட்டு பின்னர் வங்கக்கடலில் சென்று சேர்கிறது. ஆனால், அதன் மறுபுறம் அமைந்துள்ள உசிலம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதியானது நெடுங்காலமாகக் குடிநீர் கூடக் கிடைக்காமல் வானம் பார்த்த பூமியாக வறண்டு கிடந்தது. அப்படி வறண்டு கிடந்த 58 கிராம மக்கள் ஒன்றுகூடி 1960 ஆம் ஆண்டு முதல் வைகை ஆறு பாயும் திருமங்கலம் கால்வாயை தங்கள் பகுதிக்கு நீட்டிக்க வேண்டும் என்ற தொடர்ப் போராட்டத்தின் விளைவாக அமைந்ததுதான் 58 கிராம பாசனத் திட்டமாகும். 1999ஆம் ஒப்புதல் அளிக்கப்பட்டுத் தொடங்கப்பட்ட கால்வாய் அமைக்கும் பணிகளானது தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கால் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டு நிறைவடைந்து, செயல்பாட்டுக்கு வந்தது. வைகை அணையின் வலதுகரைப் பகுதியிலுள்ள 58 கிராம பாசனக் கால்வாய் மதகிலிருந்து 28கிமீ தூரம் அமைந்துள்ள முதன்மை கால்வாயானது, உத்தப்பநாயக்கனூரில் 12 கிமீ தூரம் இடப்பக்கமும், 11 கிமீ தூரம் வலப்பக்கமும் இரு கால்வாய்களாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாதைகளின் இடையில் மலைப்பகுதிகள் இருப்பதால், மூன்று இடங்களில் தொட்டிப் பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வைகை நதி பாயும் 58 கிராம பாசனத்திட்டமானது உசிலம்பட்டி பகுதி சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர்த்தேவையை நிறைவு செய்வதுடன், அப்பகுதியிலுள்ள ஏறத்தாழ 2500 ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், 58 கிராம பாசனத் திட்டத்தினைச் சீர்குலைக்கும் வகையில் தொட்டிப்பாலங்கள் அருகே இயங்கிவந்த கல்குவாரிகள், வேளாண் பெருங்குடி மக்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக வழக்குகள் தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டன. இந்நிலையில் தொட்டிப்பாலங்கள் அமைந்துள்ள பகுதியில், மூடப்பட்ட கல்குவாரிகள் மீண்டும் செயல்படுவது குறித்து, தற்போது அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் அடங்கிய ஆய்வுக்குழு, பாறைகள் இடையே வெடி வைத்து ஆய்வுகள் மேற்கொண்டு வருவதால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர். மீண்டும் கல்குவாரி செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதித்தால் பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கும்போது ஏற்படும் அதிர்வில் தொட்டிப்பாலம் இடிந்து விழும் ஆபத்து உறுதியாக நிகழும். தொட்டிப்பாலம் அமைக்கவே 18ஆண்டு காலத்தைச் செலவழித்த தமிழ்நாடு அரசு ஒரு நொடியில் அதனைத் தகர்க்க அனுமதிப்பது எவ்வகையில் நியாயமாகும்? 60 ஆண்டுகாலம் போராடிப் பெற்ற பாசனத்திட்டத்தைத் தகர்க்கும் கல்குவாரிகள் மீண்டும் செயல்பட திமுக அரசு ஆய்வு மேற்கொள்வது அதன் எதேச்சதிகாரப்போக்கையே காட்டுகிறது. ஆகவே, உசிலம்பட்டி பகுதி மக்கள் இரண்டு தலைமுறைக்கும் மேல் போராடி அரும்பாடுபட்டுப் பெற்ற 58 கிராம பாசனத் திட்டத்தினைச் சிதைக்கும் வகையில் கல்குவாரிகள் மீண்டும் செயல்பட தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது, அதற்கென எவ்வித ஆய்வும் மேற்கொள்ளக் கூடாதெனவும் வலியுறுத்துகிறேன். கல்குவாரிகளுக்கு எதிராக உசிலம்பட்டி 58 கிராம பாசனப் பகுதி மக்கள் மேற்கொள்ளும் அறப்போராட்டக் கோரிக்கை வெல்லும்வரை நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி #SeemanStatement
15
150
223
2,187
23 Dec 2024
20.12.2024 அன்று சட்டத்திற்கு மாறாக நடைபெற்ற எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத்திற்கான மக்கள் கருத்துகேட்புக் கூட்டத்தினைச் செல்லாது என்று அறிவிப்பதோடு, விதிமீறி செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒன்றிய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். @mkstalin @V_Senthilbalaji @TThenarasu @Tnpcbofficial @TANGEDCO_Offcl @Chief_Secy_TN @arivalayam @katpadidmk @Collr_Chn @byadavbjp @moefcc @KPShankarMLA பெரும் அளவில் மக்கள் இத்திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்க வருகைத் தரக்கூடும் என்பது தெரிந்தும், குறிப்பாக இத்திட்டத்தினை எதிர்க்கக்கூடிய அமைப்புகள் வெளிப்படையாகக் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்குபெறுவது குறித்து முன்னரே அறிவித்தும், போதிய இடவசதியில்லாத வகையில் இதனைத் தொடர நினைத்தது முதல் பிழையாகும். பெருவாரியான மக்கள் அமைதியான முறையில் கருத்தினைப் பதிவு செய்ய முடியாமலேயே முடிவடைந்த கூட்டம் செல்லத்தக்கதல்ல. இத்திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்க நினைக்கும் எவரும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்க வழிவகை செய்யும் சூழலியல் விதிமுறைகள் காற்றில் விடப்பட்டு, ஆளுங்கட்சிக் கூட்டம் போல நடத்தப்பட்டது முற்றிலும் விதிகளுக்கு மாறானதாகும். கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தவேண்டிய மாவட்ட ஆட்சியர் இறுதிவரையில் கூட்டத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசாமலும், பங்கெடுக்காமலும், தனக்கும் கூட்டத்திற்கும் தொடர்பு இல்லாததுபோல அமைதிகாத்ததும், இறுதியாகக் கூட்டம் முழுவதுமாக முடிவு பெறுவதற்கு முன்னரே எழுந்து சென்றதும் தன்னுடைய பொறுப்பினைச் சரிவர செய்யாத விதிமீறலாகும். அதற்கு மாறாக திருவொற்றியூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. சங்கர் அவர்கள் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்துவதுபோல அடிக்கடி இடைமறித்துப் பேசியது மட்டுமல்லாமல், கருத்துப் பதிவு செய்ய வந்த நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை திட்ட ஆய்வுக் குழுவின் இணைச்செயலாளரைப் பேச விடாமலும் தடுத்துள்ளார். மேலும் திருவொற்றியூர் பகுதி மக்கள் மட்டும்தான் பேச வேண்டும் என்றும், மற்றவர்கள் பேசக்கூடாது என்றும் மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். திட்டத்தினை எதிர்த்துப் பேசியவர்களைத் தொடர்ந்து பேச விடாமல் கூச்சலிட்டதும், அவர்களை நோக்கி தகாத சொற்களால் திட்டியதும், மிரட்டியதும் என்று ஒட்டுமொத்த நிகழ்வும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006ற்கு மாறாகவும், நீதிமன்றங்கள் வகுத்த விதிகளைப் பின்பற்றாமலும் நடைபெற்றது. அனைவருக்கும் பாசிசம் குறித்துப் பாடம் எடுக்க நினைக்கும் திமுக அரசு, மறுபுறம் தன் கட்சி ஆட்களைக் கொண்டே பாசிசப் போக்கினை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்வை தலைமை தாங்கி விதிமீறல்களைத் தடுத்திருக்க வேண்டிய மாவட்ட ஆட்சியரின் செயல்பாடின்மை கடும் கண்டனத்திற்குரியது. மேலும், இந்நிகழ்வைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாத காவல்துறையினர் மீதும், விதிகளைக் கடந்து செயற்பட்ட திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் அவர்கள் மீதும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், மேற்கூறிய காரணங்களுக்காகவே பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, அவ்வாறு அறிவிக்காவிட்டால் அதற்கு எதிரான துறைசார், சட்ட முன்னெடுப்புகளையும் நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கிறேன். -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், @Seeman4TN #SeemanStatement #NTKagainstETPS #ScrapETPS
9
76
128
1,102
குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணி நிலைப்படுத்த வேண்டும்! -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், @Seeman4TN #NTK #SeemanStatement
77
134
1,447
தெய்வத்திருமகன் பசும்பொன் ஐயா முத்துராமலிங்கத்தேவர் குறித்து அவதூறுப் பேச்சு; தமிழ்த்தலைவர்களை எவர் இழிவுபடுத்தினாலும் ஏற்க முடியாது! -செந்தமிழன் சீமான் @Seeman4TN #NTK #SeemanStatement
தெய்வத்திருமகன் பசும்பொன் ஐயா முத்துராமலிங்கத்தேவர் குறித்து அவதூறுப் பேச்சு; தமிழ்த்தலைவர்களை எவர் இழிவுபடுத்தினாலும் ஏற்க முடியாது! மள்ளர் மீட்புக் களத்தின் நிறுவனத்தலைவர் செந்தில் மள்ளர் அவர்கள் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெய்வத்திருமகன் ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்களை இழிவுபடுத்தும் விதமாக அவதூறு கருத்துகளைப் பேசியிருப்பது அவசியமற்றது; வன்மையான கண்டனத்துக்குரியது. தென் மாவட்டங்களில் தற்போது நடந்தேறும் படுகொலைகள் குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கொலைகளைத் தடுக்கத்தவறிய அரசை கண்டிப்பதை விடுத்து தெய்வத்திருமகன் ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் பற்றி அவதூறு கருத்துகளைப் பதிவு செய்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தமிழ்ச் சமூக மக்கள் தெய்வமாகப் போற்றக்கூடிய தெய்வத்திருமகன் ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்களை இழிவுபடுத்துவது, பெருகி வரும் தமிழர் ஓர்மையைச் சீர்குலைக்கும் செயல் அன்றி வேறில்லை. இத்தகைய பேச்சுகள் பெரும்பான்மை தமிழ்ச்சமூகமான தேவர் சமூக மக்களின் மனங்களைக் காயப்படுத்தி,  தேவையற்ற மனக்கசப்பினை ஏற்படுத்தி, பெரும் மோதலையும், தீர்க்க முடியாத பகைமையும் உருவாக்க உதவுமே அன்றி, அதைத்தவிரத் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு ஏற்படப்போகும் நன்மை என்ன? ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்ந்து பேசலாம். அதற்காக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை இழிவுபடுத்திப் பேசுவது தவறானது. தமிழர்கள் தெய்வங்களாக வழிபடும் முன்னோர்களைத் தற்கால அரசியலுக்காக இழித்துரைப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது.    தமிழ்ச்சமூக மக்களாகிய தேவர், தேவேந்திரர் மக்கள் நீண்டகாலமாகப் பிரிந்து, பிளந்து கிடப்பதற்கு திராவிட, இந்தியக் கட்சிகள் செய்த சூழ்ச்சி அரசியலே காரணமாகும். இரு சமூக மக்களிடையே, பகைத்தீயை மூட்டி குளிர்காய்வதையும், அவர்களின் மோதலில் சிந்தும் இரத்தத்தைக் குடித்து ஆட்சி அதிகாரத்தை அடைவதையும் திராவிட – இந்திய அரசியல் ஓநாய்கள் காலங்காலமாகச் செய்து வருகின்றனர். ஐம்பது ஆண்டுகாலமாக அத்தகைய சூழ்ச்சி அரசியலுக்குப் பலியான கடந்தகாலத் தலைமுறையின் காயங்களிலிருந்தும், கண்ணீரிலிருந்தும் தற்போதைய தமிழிளந்தலைமுறையை மீட்டு ஒன்று சேர்த்து தமிழர்களுக்கென்று வலிமைமிக்க ஓர்மை அரசியலைக் கட்டி எழுப்புவதே தமிழ்த்தேசியமாகும். அதற்காக அரும்பாடு ஆற்றிக்கொண்டிருக்கும் வேளையில், அதனை வீழ்த்தும் வகையில் பொறுப்பற்று மீண்டும் மீண்டும் வெறுப்புப் பேச்சுகளை விதைப்பது தமிழினப்பிளவை ஏற்படுத்துமே தவிர ஒருபோதும் ஓர்மையை ஏற்படுத்தாது. இந்த மண்ணில் நாம் தமிழர் கட்சி வந்த பிறகுதான் தாத்தா இம்மானுவேல் சேகரனார் சிலைக்கு தேவர் சமூகப் பிள்ளைகளும், தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தேவேந்திரர் சமூகப் பிள்ளைகளும் என்னுடன் வந்து மாலைபோட்டு மரியாதை செலுத்தும் வரலாற்றுப் பெருமாற்றத்தை இந்த மண்ணில் உருவாக்கியது. தமிழ்த்தேசிய ஒருமைப்பாடுதான் இன்றைக்கும், என்றைக்கும் தேவையான அரசியல் நிலைப்பாடு. அதனைத் தடுத்து, கெடுத்து தெற்கே தேவரும் – தேவேந்திரரும் ஒன்றாக நிற்கக் கூடாது, வடக்கே படையாச்சியும் – பறையரும் ஒன்றாகிவிடக்கூடாது என்று கருதுவது, அதற்காகச் சதிசெய்வது திராவிட – இந்திய அரசியல். அதற்குத் துணைபோவது தமிழ்த்தேசியம் ஆகாது. அதனை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் ஆதரிக்காது. தமிழர்கள் பிரிந்து பிளந்து நின்றால்தான் தமிழர் அல்லாதவர்கள் இந்த நிலத்தை நிரந்தரமாக ஆள முடியும் என்பதுதான் திராவிட – இந்திய அரசியல் கோட்பாடு. அதனைத் தகர்ப்பதுதான் தமிழ்த்தேசிய அரசியல் கோட்பாடு. அதற்குத் தடைக்கல்லாக எவர் வந்தாலும் ஏற்கமாட்டோம். எதிர்ப்போம்! ஆகவே, தமிழர் ஓர்மையைக் கருத்திற்கொண்டு, மள்ளர் மீட்பு களத்தின் நிறுவனத்தலைவர் செந்தில் மள்ளர் அவர்கள் தெய்வத்திருமகன் ஐயா முத்துராமலிங்கத்தேவர் குறித்த அவதூறுப் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
10
89
193
2,526