இந்திய அரசு ஏதாவது ஒரு கண்டுபிடிப்பை அங்கீகரித்து, பெரிய அளவில் அதை பயன்படுத்த வேண்டும் என்றால், கண்டுபிடிப்பாளருக்கு, ஏதாவது அரசியல் பிடி இருக்க வேண்டும்! இல்லையென்றால் அது ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்! சமீபத்தில் இந்திய கண்டுபிடிப்பாளர் ஒருவர், ஏடிஎம் அறையில் நுழைந்து ஒருவன் திருடிக் கொண்டு வெளியே வர முடியாதபடி, அவனை உள்ளேயே சிறைப்படுத்தும் ஒரு அமைப்பை கண்டுபிடித்தார். அமெரிக்காவின் USPTO வரை சென்று அதற்கு அங்கீகாரம் வாங்கினார். ATM International Association அதற்கு அங்கீகாரம் கொடுத்து வெகுவாக பாராட்டியது. TECHDAY என்ற கண்டுபிடிப்பு சார்ந்த சர்வதேச இதழ் அதை வெகுவாக பாராட்டியது. இருந்தாலும் இந்திய அரசோ, நிதி அமைச்சரோ, அல்லது எந்த வங்கியும், அதை அவர்களுடைய கட்டமைப்பை வாங்குவதற்கு தயாராக இல்லை 😭 இந்திய ஊடகங்கள் எதுவுமே அவரை ஊக்கப்படுத்தவில்லை. எதுவுமே, ஒரு இந்தியர் எப்படி கண்டுபிடித்திருக்கிறார் என்று பெருமைப்படவில்லை .எல்லா ஊடகங்களுக்கும் அவர் செய்தி அனுப்பினார் .எந்த ஊடகமும் அதை பதிவிடவில்லை.
@dinathanthi நேரில் சென்று ஆசிரியரை கூட சந்தித்து சொன்னார் ஆனால் அவர்கள் பதிவிடவில்லை. சத்தியம் சாத்தியமே என்று முழங்கிக் கொண்டிருக்கும்
@sathiyamnews தொலைக்காட்சியும் வெளியிடவில்லை. அகில இந்திய ஊடகங்கள் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. அவர் ஆராய்ச்சிக்காக செய்த முதலீடு அவ்வளமும் வீணாக போய்விட்டது 😭 அதுதான் இந்தியா😭😭 இதோ அந்த கண்டுபிடிப்பை நீங்கள் பாருங்கள்! நீங்களாவது அவரை ஊக்கப்படுத்த, இந்தப் பதிவை மறுபதிவு செய்யுங்கள்! ஒரு பத்து பேருக்கு தெரியட்டுமே!